Sunday, August 15, 2010

உலகின் முதல் கருங்கற் கோயில்…..!!!




உலகில், முதன்முதலில் முற்றுமுழுதாக கருங்கற்களினைக் கொண்டு அமைக்கப்பட்ட ஆலயமாக தமிழ்நாட்டில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தஞ்சைப் பெரிய கோயில் விளங்குகின்றது.

தஞ்சைப் பெரிய கோயிலின் கட்டுமானப் பணிகள் 1006ம் ஆண்டு தொடங்கி 1010ம் ஆண்டில் முடிக்கப்பட்டதாக வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

10ம் நூற்றாண்டுக் காலத்தில் சோழப் பேரரசு அதன் உச்ச நிலையில் இருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் பெரிய கோயில் கட்டப்பட்டது. தொடக்கத்தில் இராஜராஜேஸ்வரம் எனவும் பின்னர், நாயக்கர்கள் தஞ்சையை ஆண்ட காலத்தில் தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டது. 17 மற்றும் 18ம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் தஞ்சை ஆளப்பட்டபோது, பிருகதீசுவரம் ஆனது.



தஞ்சைப் பெருவுடையார் கோயில், ஐக்கிய நாடுகள் கல்வி, விஞ்ஞான மற்றும் பண்பாட்டு நிறுவனத்தால்[யுனெஸ்கோ] உலகப் பாரம்பரியச் சின்னமாக 1987ம் ஆண்டு அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், தஞ்சைப் பெரிய கோயிலின் 1000 ஆண்டு நிறைவு விழா செப்டம்பர் 25,26ம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

***

இனிய சுதந்திரத் தின நல்வாழ்த்துக்கள் !





இன்று இந்தியாவின் 64வது சுதந்திர தினமாகும்...

***

2 comments:

ஆட்காட்டி said...

kaaranam rasaraasan ilangkai senra poothu paarththa wikaaraikalin piramaandam. elloorumee ithanai solla thawarukiraarkal

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நன்றிகள் நண்பரே ....

Blog Widget by LinkWithin