Saturday, August 7, 2010

உலகப் புகழ்பெற்ற கோஹினூர் வைரம்....!!!பிரிட்டிஷ் அரச குடும்பத்துக்கு சொந்தமான நகைகளில் மிக முக்கியமானதாக விளங்கும் உலகின் மிகப் பிரபலமான வைரங்களில் ஒன்று என்று சொல்லப்படுகின்ற கோஹினூர் வைரம் யாருக்குச் சொந்தம் என்கின்ற விவாதமானது பல ஆண்டுகளாக இருந்துவருகின்றது.

இந்த வைரம் பற்றிய பதிவுகள் 13ஆம் நூற்றாண்டிலிருந்து இருந்துவருகின்றன. இந்தியா, பாரசீகம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் ஆட்சி செய்த மன்னர்களிடம் இந்த வைரம் கைமாறி வந்துள்ளது.

1849ல் பிரிட்டிஷ்ஷார் பஞ்சாப்பைக் கைப்பற்றிய வேளையில் லாகூரின் கஜானாவில் இருந்துவந்த இந்த வைரம் அப்போதைய பிரிட்டிஷ் மகாராணியார் விக்டோரியாவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

கோஹினூர் வைரமானது ஆரம்பகாலத்தில்(இந்தியா, பாரசீகம் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில்) 186 கரட் பெறுமதியினைக் கொண்டு நீள்வட்ட வெட்டு வடிவமுடையதாகவிருந்தது.(அதாவது சிறிய கோழி முட்டையினை ஒத்த வடிவம் மற்றும் அளவு).

பட்டை தீட்டப்பட்டு தற்சமயம் 108.93 கரட் பெறுமதியினைக் கொண்டுள்ள கோஹினூர் வைரமானது டவர் லண்டன் அருங் காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கோஹினூர் வைரமானது, இந்தியாவின் கொல்லூர் சுரங்கத்தில், ரேயலசீமா(ரேயலசீமா என்றால் கற்களின் நிலம் என்ற பொருளாம்) வைரக்கல் சுரங்கத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்டதாம். கோஹினூர் வைரமானது ஒரு அரச பரம்பரையிலிருந்து அடுத்த பரம்பரைக்கு கைமாற்றாகி வந்தது. இந்த வைரத்தின் உண்மையான பெயர் "சமாண்டிக் மனி" என்பதாகும்.

1739ல் பாரசீக மன்னர் நடீர் ஷா, இந்தியாவினை ஆக்கிரமித்தபோது இந்தவைரத்தினை "ஒளியின் மலை" என்று வர்ணித்திருந்தாராம். "ஒளியின் மலை" என்பதற்கான பாரசீக-அரபுப் பதமானது "கோஹினூர்" என்பதாகுமாம்.

"கோஹினூர்" வைரம் தொடர்பில் ஒரு வழிவந்த வரலாறு உள்ளதாம், அது யாதெனில்; "எவன் இந்த வைரத்தினை வைத்திருக்கின்றானோ அவன் இந்த உலகத்தினை ஆள்வான். ஆனால் இதன் துரதிஷ்டம் யாதெனில் கடவுள் அல்லது ஒரு பெண் மட்டுமே இதனை அணிந்துகொள்ளலாம் என்பதாகும்"."கோஹினூர்" வைரத்தினை உரிமையாக வைத்திருந்த அரசர்களின் வாழ்க்கையினை நோக்கினால் அவர்களின் வாழ்வில் வன்முறைகள், மரணங்கள், பெளதிக மற்றும் உள தாக்கங்களே நிறைந்துள்ளதால் என்னவோ, பிரிட்டிஷ் மகாராணிகளில் இதுவரை விக்டோரியா மகாராணி மாத்திரமே "கோஹினூர்" வைரத்தினை அணிந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

1937ம் ஆண்டு இந்த வைரமானது தற்சமயம் பிரிட்டிஷ் மகாராணியாக பதவிவகிக்கும் எலிஷபெத் மகாராணியாரின் முடிசூட்டும் விழாவின்போது அவரிடம் கையளிக்கப்பட்டது.

இந்திய அரசாங்கமானது "கோஹினூர்" வைரத்தினை தம்மிடம் கையளிக்குமாறு பிரிட்டிஷ் அரசாங்கத்தினை பலதடவைகள் கேட்டுக்கொண்டாலும் அதற்கு பதவிவகித்த எந்தவொரு பிரிட்டிஷ் அரசாங்கமும் ஒத்துக்கொள்ளவில்லை என்பதிலிருந்து அதன் மகிமையினை புரிந்துகொள்ளமுடிகின்றது அல்லவா?.......

***

3 comments:

RAJ said...

"க்ளிக்" செய்து படியுங்கள்.

ம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.

தமிழ். சரவணன் said...

லண்டனில் உள்ள அருங்காட்சியக்தில் இந்த ​வைரங்க​ளை காணும் பாக்கியத்தி​னை ​பெற்​றென்... இவற்​றைக்காணும் ​பொழு​தே இது நம்மு​டையது என்ற ஒரு உணர்வு... மற்றும் இந்த ​வைரங்கள் கிரிடம்திலும் மற்றும் சுமார் 1000 ஆயிரத்திற்க ​​மேற்பட்ட சிறுசிறு ​பொடிகளாக உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் முழுவதும் தங்கம் மற்றும் மற்ற நாட்டிலிருந்தும் ஆட்​டை​யை ​போட்ட அ​னைத்​தையும் பார்​வைக்காக ​வைத்திருந்தார்கள்

Loganathan said...

உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள் ...

Blog Widget by LinkWithin