Tuesday, August 17, 2010

99 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் ஒருநாள் போட்டியில் பெற்றவர்கள்....!!!




இலங்கை, இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் இலங்கையில் நடைபெற்றுவருகின்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் நேற்று பகலிரவுப் போட்டியாக இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான போட்டியில் இந்திய அணி 6விக்கட் வித்தியாசத்தில் இலகு வெற்றி பெற்றமை நீங்கள் அறிந்ததே... இந்தப் போட்டியானது இலங்கை அணி தனது சொந்த மண்ணில் அதிக பந்துகள்(93பந்துகள்) வித்தியாசத்தில் தோல்வியடைந்த சர்வதேச ஒருநாள் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

171ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் விரேந்தர் சேவாக் 99ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் விசேட அம்சம் யாதெனில் சுராஜ் ரன்டீவ் 35வது ஓவரினை வீசிய அழைக்கப்பட்டபோது சேவாக் 99ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். முதல் பந்தில் உதிரியாக 4 ஓட்டங்கள் பெறப்பட இந்திய அணி 1 ஓட்டத்தினைப் பெற்றால் வெற்றி என்ற நிலையிருந்தது. 2வது,3வது பந்தினை சேவாக் தடுத்தாட, 4வதாக வீசப்பட்ட பந்து நோ போலாக[No Ball] வீசப்பட அந்த பந்தில் சேவாக் 6ஓட்டங்களைப் பெற்றாலும் நோ போலுடன் வெற்றி இலக்கு எட்டப்பட சேவாக் 99ஓட்டங்களை மாத்திரமே பெற்றதாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிகழ்வானது மிக "அரிய" நிகழ்வாக ஒருநாள் சரித்திரத்தில் பதிவாகியமை குறிப்பிடத்தக்கதாகும்.


ஒருநாள் போட்டியில் 99 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றவர்கள்....


புருஸ் எட்கர்(நியூசிலாந்து Vs இந்தியா), ஒக்லண்ட், 1980/81

டீன்ஸ் ஜோன்ஸ்(ஆஸி Vs இலங்கை), அடிலய்ட், 1984/85

ரிச்சி ரிச்சர்ட்சன்(மே.தீவுகள் Vs பாகிஸ்தான்), சார்ஜா, 1985/86

அன்டி பிளவர்(சிம்பாப்வே Vs ஆஸி), ஹராரே, 1999/00

அலிஸ்ரெயர் கெம்பல்(சிம்பாப்வே Vs நியூசிலாந்து), புளவாயோ, 2000/01

ராம் நரேஷ் சர்வான்(மே.தீவுகள் Vs இந்தியா), அஹமதாபாத், 2002/03

பிறொட்ஜ் ஹொட்ஸ்(ஆஸி Vs நியூசிலாந்து), மெல்பேர்ன், 2006/07

முஹமட் யூசுப்(பாகிஸ்தான் Vs இந்தியா), குவாலியூர், 2007/08

மைக்கல் கிளார்க்(ஆஸி Vs இங்கிலாந்து), ஓவல், 30.06.2010

விரேந்தர் சேவாக்(இந்தியா Vs இலங்கை), தம்புள்ளை, 16.08.2010

சிறப்பம்சங்கள்:

 புருஸ் எட்கர், டீன்ஸ் ஜோன்ஸ், அன்டி பிளவர், ராம் நரேஷ் சர்வான், மைக்கல் கிளார்க் ஆகியோர் 99 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றபோது முழுமை ஓவர்களும் பந்துவீசி முடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 ரிச்சி ரிச்சர்ட்சன், அலிஸ்ரெயர் கெம்பல் ஆகியோர் தமது 99வது ஓட்டத்தினை ஆட்டமிழக்காமல் பெற்றபோது அணியின் வெற்றி இலக்கினையும் அடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 இதுவரையும் 31 துடுப்பாட்ட வீரர்கள் 99 ஓட்டங்களை ஆட்டமிழந்தோ/ ஆட்டமிழக்காமலோ ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பெற்றுள்ளனர்.

***

7 comments:

THE UFO said...

கிரிக்கெட்டில் நான் பலநாளாய் சொல்லும் 'விதி தவறு' ஒன்றுள்ளது.

அது 'ஹேட்ரிக்'.

ஒரு ஆட்டத்தில், அடுத்தடுத்த கடைசி இரு பந்துகளில் இரண்டு விக்கெட் எடுத்து தன் பவுலிங்கை முடித்த ஒரு பவுலர், அந்த ஆட்டத்திற்கு அடுத்த வேறொரு ஆட்டத்தில் முதல் பாலில் ஒரு விக்கெட் எடுத்து விட்டால் அதுவும் ஹேட்ரிக்காம்...!!!???


அப்போ நேத்திக்கு 99 notout எடுத்த சேவாக் அடுத்த ஆட்டத்தில் ஒரு ரன் எடுத்தால் செஞ்சுரி இல்லையா?

ஹலோ ஐசிசி...

என்னாங்கடா உங்க விதிகள்?
பெட்ஸ்மனுக்கு ஒண்ணு... பவுலருக்கு ஒண்ணு...!!!
மாத்துங்க்கடா... உங்க மொக்கை விதிகளை...!

THE UFO said...

அதற்கப்புறம்... இந்த நோபால் விதி...

ரன்திவின் அந்த நோபால், செவாக்கை அடையும்போதே போட்டியின் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டுவிட்டது. அதனால், அதன் பின்னர் சேவாக்கின் சிக்ஸர் கருத்தில் கொள்ளப்படவில்லையாம்.

ஆனால், அந்த பால் செவாக் சந்தித்த பாலாக கருதப்படுவது எப்படி?

அறைவேக்காடான இதுமாதிரி கிரிக்கெட் விதிகள் விளங்கவில்லை.

ஆனால், ஸ்கொர்கார்டில், செவாக் அந்த பாலை சந்தித்ததாக கவுண்ட் ஆகி உள்ளது.

ஒன் டே மேட்சுகளில், ஒரு பவுன்சர் மட்டுமே வீசலாம். இரண்டாவது வீசினால் அது நோபால். ஓகே.

எனினும் இரண்டாவது பவுசர் நோபால் ஆனாலும், அது பேட்ஸ்மேன் எதிர்கொண்ட பாலாகவே கருதப்படும்.

ஆகவே விதி இவ்வாறு தான் உள்ளது...

மொக்கை விதிகள்.

தென் ஆப்ரிக்காவை ஒரு பந்தில் 22 ரன்கள் எடுக்க சொன்னார்களே, 1992 ஆஸ்திரேலியா உலகக்கோப்பையில்..! அதனால்தான், டக் ஒர்த் லூயிஸ் வந்தது.

இப்போது, ரன்திவின் இந்த நோபாலினால் சரியான விதிகள் வரக்கூடும்.

எல்லாம் நன்மைக்கே...

ம.தி.சுதா said...

உண்மை தான் சகோதரா நேற்ற நடந்த சம்பவம் ஜம்பவான் விளையாட்டில் ஒரு கேவலமானது தான். அதற்காக இந்தியாவை திறம் என சொல்ல முடியாது. கையால் பந்தெடுத்து கொடுத்த வோகனை வெளியேற்றி ஒரு போட்டி வெல்லப்பட்டது நினைவில்லையா? முதலில் எல்லோரும் சான் வோனை பார்த்து திருந்துங்கப்பா (நேற்று நடந்த சம்பவத்திற்கு மட்டும் உதாரணம்)

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

அருமையான கருத்துக்கள் ....... ICC கவனிக்க வேண்டும் ......

ம.தி.சுதா said...

என் அருமை வெற்றிக் குடும்ப சகோதரனுக்கு நான் வரையும் அன்பு மடல் தயவு செய்து இத்துடன் இந்தப் போட்டிப் பிரச்சனையை முடித்துக் கொள்வோமா?... ஏனென்றால் அது ஒரு கணவன் மனைவிப் பிரச்சனை இன்று முட்டி விட்டு நாளை சேர்ந்திடுவாங்க. ஆனால் எமக்கப்படியல்ல ஒரு பதிவாளருக்கு சரியான அங்கிகாரம் தருவது தமிழ் நாட்டு வாசகர்கள் தான். உதாரணத்திற்கு என் கொடிகள் தரவைப் பாருங்கள். நாம் எல்லோரும் தமிழர் என்ற ரீதியில் ஒரு சின்ன விடயத்திற்காக முகமுறிவுகளை ஏற்படுத்தக் கூடாது. காரணம் பிரச்சனைக்கு முழுக் காரணம் தமிழைக் கொன்ற வட நாட்டுக்காரன் அவனுடன் மோதுவோம். யாராவது தமிழ் நாட்டு வீரர் கேவலமாக நடந்தால் அதைத் தட்டிக்கேட்போம். தயவுசெய்து இந்தக் குடும்பப் போர் வேண்டாம். இது உங்களுக்கல்ல என்னருமை இலங்கை தமிழ் உறவுக்காகவே எழுதுகிறேன். தவறாக நான் சொல்லியிருந்தால் இந்த கருத்துக்களை பிரசுரிக்க வேண்டாம். நான் தமிழ் நாட்டுக்காரருக்கு வக்காளத்து வாங்க காரணம் என்னை பதிவுலகில் இவ்வளவு முன்னுக்கு கொண்டு வந்தவர்கள் அவர்கள் தான். நம்ம நாட்டுக்காரரில் என் முக்கிய நண்பர்கள், ஆசான்கள் என மதிக்கும் யாரும் என் தளத்தை எட்டிக் கூடப் பார்க்கல (ஒரு சிலரைத் தவிர. நான் சொல்வது சரி தானே.. சகோதரா.. (இது உங்களுக்கல்ல என்னருமை இலங்கை தமிழ் உறவுக்காகவே எழுதுகிறேன்)

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

அன்பின் ம.தி.சுதாவுக்கு அவர்கட்கு, உங்கள் கருத்துக்கள் தொடர்பில் என்னிடம் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. உங்கள் கருத்துக்களில் நியாயத்தன்மை உள்ளது. நன்றிகள்…!!!

ம.தி.சுதா said...

ஏற்றுக் கொண்டமைக்கு மிக்க நன்றி...

Blog Widget by LinkWithin