Friday, July 9, 2010

உலகில் மிக நீளமான சுரங்க பாதை நிர்மாணிப்பு



உலகில் மிக நீளமான சுரங்க புகையிரத பாதையாக சுவிட்சர்லாந்தின், கோட்காட் சுரங்க புகையிரத பாதை விளங்குவுள்ளது. 57 கிலோமீற்றர்(35மைல்கள்) நீளமான இந்த சுரங்கப் பாதையின் நிர்மாணப் பணிகள் தற்சமயம் நடைபெற்றுவருவதுடன், இந்தச் சுரங்கப் பாதையானது 2016ம் ஆண்டளவில் பாவனைக்கு திறந்துவிடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

சுவிஸ் அரசாங்கத்தின் தகவல்களின் பிரகாரம், மிக ஆளமான சுரங்கத்தில் புதிய முறைமைகளுடன் காற்றோட்டமானதாகவும், அபாயங்களிலிருந்து மக்களுக்கு பாதுகாப்பானதாகவும், உலகில் பாதுகாப்பான சுரங்கப் பாதையாக இந்தச் சுரங்கப் பாதை விளங்குமென தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சுரங்கமானது வடக்கு சுவிட்சர்லாந்தினையும், ரிசினோ பிரதேசத்தினையும் இணைக்கும் வகையில் அல்ப்ஸ் மலையினூடாக அமைக்கப்பட்டு வருகின்றது.

***
இலங்கையில் மிக நீளமான சுரங்கப் பாதையானது றம்பொடையில் 2008ம் ஆண்டு பெப்ரவரி மாதம் திறந்துவைக்கப்பட்டது. இந்தச் சுரங்கப் பாதையின் நீளம் 225 மீற்றராகும்.

***

2 comments:

தமிழ் மதுரம் said...

சுரங்க ரயிலில் போகும் போது இரயில் கட்டுப் பாட்டு நிலையத்துடனான தொடர்பாடலில் ஏதாவது சிக்கல் என்றால் ரயிலில் உள்ளவர்களின் நிலை? சுரங்க இரயிலில் ஏற்பட்ட தொடர்பாடல் கோளாறு/ கட்டுப்பாட்டு மையத்தின் தவறான சமிக்ஞை காரணமாக மெல்பேணில் சுரங்க இரயில் ஒரு முறை விபத்திற்குள்ளாகியிருந்தது.
உங்கள் பதிவிற்கு நன்றிகள்.

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

உங்கள் கருத்துரைக்கு நன்றிகள்.

Blog Widget by LinkWithin