Thursday, July 29, 2010

உலகில் மிக உயரமான பூ



உலகில் மிக உயரமான பூவாக "ரைரன் அரம்" விளங்குகின்றது. இதன் இரசாயனப் பெயர் Amorphophallus Titanum ஆகும். ரைரன் அரம் பூவின் பூர்வீக இடமாக இந்தோனேசியாவின் சுமாத்திரா மழைக்காடுகள் விளங்குகின்றன. ரைரன் மலரானது மலர்ந்த முதல் 10 நாட்களும் 77சென்ரி மீற்றர் உயரமானதாகவும், அதன் பின் அவை 45 சென்ரி மீற்றரிலிருந்து 122 சென்ரி மீற்றர் வரை வளருமாம். ரைரன் அரம் மலரானது பூரணமாக மலர்ந்த பின் அதன் மொத்த உயரமானது 7 அடி தொடக்கம் 12அடி வரை காணப்படுமாம். அத்துடன் ரைரன் மலரினது நிறையானது 170 பவுண்டினை(77கிலோ கிராம்) விடவும் அதிகமாகுமாம். உலகில் மிகப்பெரிய பூவாகிய "ரப்லீசியா" மலரினைப் போன்றே இந்த மலரினுடைய மணமும் சகித்துக்கொள்ள முடியாததாகும் என்பது இந்த மலரின் விசேட அம்சமாகும். "ரைரன்" மலரானது ஒரு தனி மலரல்லவாம், ஏனெனில் இது அதிகமான சின்னஞ்சிறிய மலர்களால் உருவான ஒரு கூட்டு
மலராகுமாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்....

***

Tuesday, July 27, 2010

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்




பலவீனத்திற்கான பரிகாரம், பலவீனத்தைக் குறித்து சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பதுதான். Θ

உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. ₪

தூய்மை,பொறுமை,விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். இவை அனைத்திற்கும் மேலாக, அன்பு வேண்டும். ◙

மனிதனுக்குள் ஏற்கனவே மறைந்திருக்கும் பரிபூரணத் தன்மையை வெளிப்படுத்துவதுதான் கல்வி. ♦

உன்னால் ஒருவருக்கும் உதவிசெய்ய முடியாது. மாறாக, சேவை செய்யத்தான் முடியும். Θ

அச்சமே மரணம், அச்சத்திற்கு அப்பால் நீ போக வேண்டும். ₪

இலட்சியத்திற்காக உன் உயிரையும் அர்ப்பணிக்கக்கூடியவனாக இருந்தால்தான் நீ ஒரு தலைவனாக இருக்க முடியும். ◙

வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் அஞ்சாது எதிர்த்து நிற்கும் வீரன் ஒருவனுடைய மனநிலையே நமக்கு இப்போது தேவை. ♦

சொல், செயல், சிந்தனைகளில் ஒன்றாக விளங்கும் ஒரு சிலரால் உலகையே ஆட்டிவைக்க முடியும். இந்த உண்மையை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.≈

♥ அன்பின் மூலமாகச் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்தே தீரும். ♥

***

Sunday, July 25, 2010

ஸ்ட்ரோபெர்ரியின் அவசியம்...!!!



ஏராளமான விற்றமின்களினையும், மூலகங்களையும், குறைந்தளவான கலோரியினையும் உள்ளடக்கியதுதான் ஸ்ட்ரோபெர்ரி பழங்களாகும். .

முழுமையான நோயெதிர்ப்பு சக்திகளை உள்ளடக்கிய ஸ்ட்ரோபெர்ரியானது இருதய, இரத்த குழாய் அடைப்புக்களினை சரி செய்வதுடன், புற்று நோய் செல்களின் வளர்ச்சி பாதிப்புக்களிலிருந்து பாதுகாப்பளிப்பதுடன், இது முதுமையடைவதனை தாமதப்படுத்துவதிலும் உதவுகின்றது.

ஸ்ட்ரோபெர்ரியானது, எமது நீர்ப்பீடண தொகுதிக்கு உந்துசக்தி அளிப்பதுடன் குளிர் மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களிலிருந்து பாதுகாப்புப் பெறவும் உதவுகின்றது.

ஸ்ட்ரோபெர்ரியானது பொட்டாசியத்தினை அதிகம் உள்ளடக்கியுள்ளது. பொட்டாசிய மூலகமானது இது இரத்த ஓட்டத்தினை சீராக்குவதுடன், மாரடைப்பினையும், ஸ்ரோக் அபாயத்தினையும் குறைக்க உதவுகின்றது.

ஸ்ட்ரோபெர்ரியிலுள்ள போலிக் அமிலமானது எமது உடம்பில் இரத்த சிவப்பணு உற்பத்திக்களுக்கான பிரதான காரணியாகவும் விளங்குகின்றது.

ஸ்ட்ரோபெர்ரியானது ஏனைய பழங்களினைவிடவும் விற்றமின் C இனை அதிகம் கொண்டுள்ளது. இதன் மூலம் சிலவகை புற்று நோய்களிலினை எதிர்த்துப் போராடவும், கொலஸ்ரோலினை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் உதவுகின்றது.

ஸ்ட்ரோபெர்ரியானது, விற்றமின்களான B2, B5, B6, K ஆகியவற்றினையும் மூலகங்களான செம்பினையும், மக்னீசியத்தையும் கொண்டுள்ளது. அத்துடன் ஓமேகா அமிலத்தினையும் ஸ்ரோபெரியானது உள்ளடக்கியுள்ளது.

ஸ்ட்ரோபெர்ரியானது உடற் பருமன் குறைப்புக்கு காரணமான ஓமோன்களை ஒழுங்காக தொழிற்பட வைக்க உதவுகின்றது.

ஸ்ட்ரோபெர்ரியிலுள்ள அமிலமானது பற்களினை வெண்மையாக்கவும் உதவுகின்றதாம். இதற்காக ஸ்ட்ரோபெர்ரி பழத்தினை இரண்டு துண்டுகளாக வெட்டி பற்களிலும், முரசிலும் தேய்க்க வேண்டுமாம். இதன்மூலம் கறைகள் நீங்கி பற்கள் பளிச்சிடுமாம்.


இவ்வளவு சிறப்புக்களினைக் கொண்ட ஸ்ட்ரோபெர்ரியினை, உணவுவகைகளுடன் சேர்த்து உண்ணும்போது அதிகளவான நன்மைகளினைப் பெற்றுக்கொள்ள முடியுமாம். இதனை காலை ஆகாரத்துடன் சேர்த்துக்கொண்டால் அந்த நாளில் மிகுந்த உத்வேகமான சக்தியினை இது உங்களுக்கு அளிக்குமாம்.



***

Friday, July 23, 2010

சரித்திர சாதனை நாயகன் முரளிதரன்..........!!!




இலங்கை கிரிக்கெட் அணியின் பெருமையினை உலகம் முழுவதும் பரவச் செய்த சரித்திர சாதனை நாயகன் முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வினை அறிவித்து இளம் வீரர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதாக தெரிவித்தமைக்கமைய, ஜூலை 18-22ம் திகதி வரை காலியில் நடைபெற்ற இந்திய அணியுடனான 1வது டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.


இந்திய அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் மேலதிகமான 8 விக்கட்களை வீழ்த்தி 800விக்கட்கள் என்ற மைல்கற் சாதனையினை தன்னால் படைக்க முடியுமென்று மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்கிய முரளிதரனின் சாதனையினை போட்டியின் 2ம் நாள் பெய்த மழை தடுத்துவிடுமோ என பலரும் கவலை கொண்டிருந்தனர். ஆனாலும் வானிலை சீரடைந்து ஆறுதல் அளித்தது. 1வது இன்னிங்ஸ்சில் 5 விக்கட்களை வீழ்த்திய முரளி 2வது இன்னிங்ஸ்சில் 3விக்கட்களை வீழ்த்தினால் 800விக்கட்கள் என்ற மைல்கற் சாதனையினை இலகுவாக படைத்துவிடுவாரென பெருமளவானோர் நம்பினர். ஆனாலும் தனது 800விக்கட்டினைப் பெற முரளி மிகவும் பிரயத்தனப்பட்டார். லக்‌ஷ்மனுடன் இந்திய அணியின் கடைநிலை வீரர்களான இசான் சர்மா, ஓஜா ஆகியோர் முரளியினை அதிகமாகவே சோதித்து விட்டனர்.(எங்களையும் தான்..!!!) ஆனாலும் முரளி வீசிய தனது 44.4ஆவது ஓவரில் மஹேல, பிராக்ஜன் ஓஜாவின் பிடியினை பாய்ந்துபிடிக்க முரளி தனது 800வது விக்கட்டினைப் கைப்பற்றி கிரிக்கெட்டில் புதிய அத்தியாயத்தினைப் படைத்தார்.

முரளிக்கு இலங்கை அணி வெற்றியுடன் விடை கொடுத்தமை இந்த டெஸ்டின் இன்னுமொரு சிறப்பம்சமாகும்.


இந்த 10விக்கட் டெஸ்ட் வெற்றியானது ஒட்டுமொத்தமாக இலங்கை அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் பெற்ற 7வது 10விக்கட் வெற்றி என்பதுடன் இந்திய அணிக்கெதிரான 2வது 10விக்கட் வெற்றியாகும்.

இலங்கைக்காக 17வருடங்களும் 10 மாதங்களும் டெஸ்ட் விளையாடிய முரளிதரன் உச்சத்திலிருக்கும்போதே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றமை பாராட்டுக்குரியதாகும்.

தற்சமயம் டெஸ்ட்(800) மற்றும் ஒருநாள்(515+) போட்டிகளில் அதிக விக்கட்களைப் பெற்ற சாதனையாளனாக முரளிதரன் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். கிரிக்கெட்டில் முரளி நிகழ்த்திய சாதனைகளை ஏனைய வீரர்கள் முறியடிப்பதென்பது மிகச் சவாலான காரியமாகும்.

முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் நிகழ்த்திய உலக சாதனைகள் வருமாறு;


டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கட்களை வீழ்த்தியவர்: 133 டெஸ்ட் போட்டிகளில் 230 இன்னிங்ஸ்களில் 800 விக்கட்கள்~ சராசரி 22.74 (அடுத்த இடத்தில் ~ அவுஸ்திரேலிய அணியின் சேன் வோர்ன் 145 டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கட்கள் ~ சராசரி 25.73)

டெஸ்ட் கிரிக்கெட்டில் 800விக்கட்களை வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர்.

டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸ்சில் அதிக தடவைகள் 05 விக்கட்களை வீழ்த்தியவர்: 67 தடவைகள் (அடுத்த இடத்தில் ~ அவுஸ்திரேலிய அணியின் சேன் வோர்ன் 37 தடவைகள்)

டெஸ்ட் போட்டிகளில் அதிக தடவைகள் 10 விக்கட்களை வீழ்த்தியவர் : 22 தடவைகள் (அடுத்த இடத்தில் ~ அவுஸ்திரேலிய அணியின் சேன் வோர்ன் 10 தடவைகள்)

டெஸ்ட் போட்டிகளில் bowled முறையில் விக்கட் முனைகளை தகர்த்து அதிக விக்கட்களை வீழ்த்தியவர் : 167 விக்கட்கள் (அடுத்த இடத்தில் ~ அவுஸ்திரேலிய அணியின் சேன் வோர்ன் 116)

டெஸ்ட் போட்டிகளில் பிடியெடுப்பு[caught] முறையில் அதிக விக்கட்களை வீழ்த்தியவர் :435 விக்கட்கள் (அடுத்த இடத்தில் ~ அவுஸ்திரேலிய அணியின் சேன் வோர்ன் 418 விக்கட்கள்)

டெஸ்ட் போட்டிகளில் தானே பந்துவீசி தானே பிடியெடுத்து [caught and bowled] அதிக விக்கட்களை வீழ்த்தியவர் : 35விக்கட்கள் ( முரளியுடன் ~ இந்திய அணியின் அனில் கும்ப்ளே 35 விக்கட்கள்)

டெஸ்ட் போட்டிகளில் ஸ்டெம்ப்[stumped] முறையில் - அதிக விக்கட்களை வீழ்த்தியவர் : 47 விக்கட்கள் (அடுத்த இடத்தில் ~ அவுஸ்திரேலிய அணியின் சேன் வோர்ன் 36 விக்கட்கள்)

டெஸ்ட் போட்டிகளில் அதிக பந்துகளை வீசியவர் : 44,039 பந்துகள் (அடுத்த இடத்தில் ~ இந்திய அணியின் அனில் கும்ப்ளே 40,850 பந்துகள்)

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக தடவைகள் 10 விக்கட்களை தொடர்ச்சியாக வீழ்த்தியவர்: 04 தடவைகள் ~ இதேமாதிரியான சாதனையினை 02 சந்தர்ப்பங்களில் நிகழ்த்தியுள்ளார். (அடுத்த இடத்தில் ~ கிளறி கிரிமெற் : 03 தடவைகள் 10 விக்கட்களை தொடர்ச்சியாக வீழ்த்தியவர்)

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அனைத்து நாடுகளுக்கெதிராகவும்(09) டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் 5 விக்கட்களை வீழ்த்திய ஒரே வீரர்.

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அனைத்து நாடுகளுக்கெதிராகவும்(09) டெஸ்ட் போட்டியொன்றில் 10 விக்கட்களை வீழ்த்திய ஒரே வீரர்.

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அனைத்து நாடுகளுக்கெதிராகவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 50க்கும் அதிகமான விக்கட்களை வீழ்த்திய ஒரே வீரர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் பங்கேற்று 350,400,450,500,550,600,650,700,750,800 விக்கட்களை விரைவாக வீழ்த்திய ஒரே வீரர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னிங்ஸ் ஒன்றில் 9 விக்கட்களினை (9/51 எதிர் சிம்பாப்வே, கண்டி~2002 & 9/65 எதிர் இங்கிலாந்து, த ஓவல்~ 1998) 2 தடவைகள் வீழ்த்திய வீரராக இங்கிலாந்தின் ஜிம் லேகருடன் தன் பெயரினை பதிவு செய்துள்ள ஒரே வீரர். முரளியின் சிறந்த பந்துவீச்சுப் பெறுதியாகிய 9/51 எதிர் சிம்பாப்வே, இது ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட்டில் 5வது மிகச் சிறந்த பந்துவீச்சுப் பெறுதியாகும்.

டெஸ்ட் தொடரொன்றில் அதிக ஓட்டமற்ற ஓவர்களை வீசியவர் – 2003ல் இங்கிலாந்து அணிக்கெதிராக 3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரொன்றில் 109 ஓவர்கள். (அடுத்த இடத்தில்: மே.தீவுகளின் டினாத் ராம்னரின் 2001ல் ~ தென்னாபிரிக்காவுக்கெதிராக 91 ஓட்டமற்ற ஓவர்கள் )

ஒரு அணியின் டெஸ்ட் வெற்றிகளில் அதிக விக்கட்களை குறைந்த சராசரியில் பெற்ற சாதனையாளன்; இலங்கை அணி வெற்றி பெற்ற 54 டெஸ்ட் போட்டிகளில் முரளி மொத்தமாக 438விக்கட்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். (அடுத்த இடத்தில் ~ அவுஸ்திரேலிய அணியின் சேன் வோர்ன் 92 டெஸ்ட் போட்டிகளில் 510 விக்கட்கள் & சராசரி~22.47)

ஒரு அணியின் டெஸ்ட் வெற்றிகளில் அதிக தடவைகள் 5 விக்கட்களை கைப்பற்றிய சாதனையாளன்; இலங்கை அணி வெற்றி பெற்ற டெஸ்ட் போட்டிகளில் முரளி 41 தடவைகள் 5விக்கட் பெறுதிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

ஒரு அணியின் டெஸ்ட் வெற்றிகளில் அதிக தடவைகள் டெஸ்ட் போட்டியொன்றில் 10 அல்லது 10இற்கும் மேற்பட்ட விக்கட்களை கைப்பற்றிய சாதனையாளன்; இலங்கை அணி வெற்றி பெற்ற டெஸ்ட் போட்டிகளில் முரளி 18 தடவைகள் 10விக்கட் பெறுதிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் மைதானமொன்றில் 100 அல்லது 100இற்கும் மேற்பட்ட விக்கட்களைப் கைப்பற்றிய ஒரே பந்துவீச்சாளர்; அத்துடன் 3 மைதானங்களில் 100 அல்லது 100இற்கும் மேற்பட்ட விக்கட்களைப் கைப்பற்றிய ஒரே பந்துவீச்சாளராகவும் முரளி விளங்குகின்றார்; கொழும்பு எஸ்.எஸ்.சி~SSC மைதானத்தில் 24 டெஸ்ட் போட்டிகளில் 166 விக்கட்கள்(சராசரி 20.69) | கண்டி அஸ்கிரிய மைதானத்தில் 16 டெஸ்ட் போட்டிகளில் 117 விக்கட்கள்(சராசரி 16.02) | காலி விளையாட்டு மைதானத்தில் 15 டெஸ்ட் போட்டிகளில் 111 விக்கட்கள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கெதிராக 100+ விக்கட்களை வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளராக முரளி விளங்குகின்றார்;

டெஸ்ட் போட்டித் தொடர்களில் அதிக தடவைகள் தொடர் ஆட்ட நாயகன் விருதினை வென்ற சாதனையாளன்; 11 தடவைகள்

டெஸ்ட் போட்டிகளில் அதிக தடவைகள் ஆட்ட நாயகன் விருதினை வென்ற சாதனையாளனாக தென்னாபிரிக்காவின் ஜக் கலிஸ்சுக்கு(20+தடவைகள்) அடுத்தவராக முரளி விளங்குகின்றார்; 19 தடவைகள்

சொந்த நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கட்களை வீழ்த்திய ஒரே சாதனையாளன்; 73 டெஸ்ட் போட்டிகளில் 493 விக்கட்கள்

சொந்த நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸ்சில் அதிக தடவைகள் 05 விக்கட்களை வீழ்த்திய சாதனையாளன்; 45 தடவைகள்

சொந்த நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக தடவைகள் 10 விக்கட்களை வீழ்த்தியவர்; 15 தடவைகள்

ஒரு கிரிக்கெட் பருவகாலத்தில் டெஸ்ட் போட்டியொன்றில் அதிக தடவைகள் 10 விக்கட்களை வீழ்த்திய ஒரே சாதனையாளன்; 2002ம் ஆண்டு பருவகாலத்தில் ~ 05 தடவைகள்

ஒரு கிரிக்கெட் பருவகாலத்தில் டெஸ்ட் போட்டிகளில் அதிக தடவைகள் 75+ இற்கும் அதிகமான விக்கட்களை வீழ்த்திய ஒரே சாதனையாளன்; 03 தடவைகள் ~ 2006ம் ஆண்டு பருவகாலத்தில் 11டெஸ்ட் போட்டிகளில் 90விக்கட்கள்(சராசரி16.90) , 2001ம் ஆண்டு பருவகாலத்தில் 12டெஸ்ட் போட்டிகளில் 80விக்கட்கள்(சராசரி21.23) & 2000ம் ஆண்டு பருவகாலத்தில் 10டெஸ்ட் போட்டிகளில் 75விக்கட்கள்(சராசரி19.50)

ஒரு கிரிக்கெட் பருவகாலத்தில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கட்களை வீழ்த்திய வீரராக ஆஸியின் சேன் வோர்னுக்கு அடுத்ததாக விளங்குகின்றார். முரளி ~ 2006ம் ஆண்டு பருவகாலத்தில் 11டெஸ்ட் போட்டிகளில் 90விக்கட்கள் , சேன் வோர்ன் 2005ம் ஆண்டு பருவகாலத்தில் 15டெஸ்ட் போட்டிகளில் 96விக்கட்கள்(சராசரி22.02)

இலங்கை சார்பாக டெஸ்ட் போட்டியொன்றில் மிகச் சிறந்த பந்துவீச்சுப் பெறுதியினைக் கொண்டுள்ள சாதனையாளன்; 16/220 எதிர் இங்கிலாந்து, த ஓவல் ~ 1998 : டெஸ்ட் கிரிக்கெட்டில் இது 5வது மிகச் சிறந்த பந்துவீச்சுப் பெறுதியாகும்.

சர்வதேச கிரிக்கெட்டில்(டெஸ்ட், ஒரு நாள், T20) 1000+ வீழ்த்திய முதல் வீரர் முரளி.(அடுத்த இடத்தில் ~ அவுஸ்திரேலிய அணியின் சேன் வோர்ன் 1001 விக்கட்கள்)

பந்துவீச்சாளர் முரளி & களத்தடுப்பாளர் (விக்கட்காப்பாளர் தவிர) மஹேல ஜோடி 77 விக்கட்கள் வீழ்வதற்கு பங்களிப்பு செய்து சாதனை படைத்துள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டமற்ற ஓவர்களை வீசியவர் :1794 (அடுத்த இடத்தில் ~அவுஸ்திரேலிய அணியின் சேன் வோர்ன் 1761 )

டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னிங்ஸ் ஒன்றில் 7 விக்கட்களினை டெஸ்ட் அங்கத்துவம் பெற்ற அதிக நாடுகளுக்கெதிராக வீழ்த்திய ஒரே வீரர்.


கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளைக் கடந்து சாதனைகளால் அவற்றினை வென்று காட்டிய முரளி கிரிக்கெட் உலகுக்கு கிடைத்த மிகப் பெரிய சொத்தென்றால் மிகையல்ல.



சரித்திர சாதனை நாயகன் தங்கத் தமிழன் முரளிக்கு என் வாழ்த்துக்கள் உரித்தாகுக.......!!!!


***

Tuesday, July 20, 2010

பாலைவனமாகும் பூமி




இன்று நாம் வாழ்கின்ற பூமியானது பல்வேறுபட்ட சூழலியல் பிரச்சினைகளை எதிர்நோக்கிய வண்ணமுள்ளது.

அந்தவகையில் ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் பிரசுரமாகிய "பாலைவனமாகும் பூமி" என்கின்ற தலைப்பிலான என்னுடைய ஆக்கம் உங்களுக்காக.


இந்த ஆக்கத்தினை பெரிதாக்கி வாசிக்கவும் நண்பர்களே....



(நன்றி - ஞாயிறு தினக்குரல் 11.07.2010)

***

Monday, July 19, 2010

கடல் அசுத்தங்களைக் கண்டுபிடிக்க ரோபோ மீன்




கடல் அசுத்தங்களைக் கண்டுபிடிப்பதற்கான கருவியை எம்.ஐ.டி நிறுவனம் தயாரித்துள்ளது. கடலில் நீண்ட தூரம் பயணம் செய்யும் கப்பல்களிலிருந்து குறிப்பாக எண்ணெய்க் கப்பல்களிலிருந்து எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு அது கடலில் அசுத்தங்களை ஏற்படுத்தி கடல்வாழ் உயிரினங்களுக்குப் பெரும் பாதிப்பினை ஏற்படுத்திவிடுகின்றன. கடலில் இதுபோன்ற அசுத்தங்களைக் கண்டுபிடிப்பதற்காக கருவியான ரோபோ மீனினை எம்.ஐ.டி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ரோபோ மீனில் விசேஷமான சென்ஸர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதனூடாக கடலில் எங்கே மாசு படிந்திருக்கின்றது?, எண்ணெய்க் கசிவு ஏற்பட்டிருக்கின்றது என்பதனை துல்லியமாகக் கண்டுபிடிக்கலாம் என்கின்றார்கள் விஞ்ஞானிகள்.

***

Monday, July 12, 2010

புதிய வரலாறு படைத்தது ஸ்பெய்ன் அணி…...!!!


2010ம் ஆண்டு ஜூன் 11ம் திகதி முதல் ஜூலை 11ம் திகதி வரை 32 நாடுகள் கலந்துகொண்ட உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் ஆபிரிக்க கண்டத்தில் முதன்முறையாக தென்னாபிரிக்காவில் நடைபெற்றன. 19வது உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் சாம்பியன் பட்டத்தினை முதன்முறையாக ஸ்பெய்ன் தனதாக்கிக் கொண்டு புதிய வரலாற்றினைப் படைத்தது.

பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் ஜொகர்னஸ்பேர்க் சொக்கர் சிட்டி அரங்கில் நடைபெற்ற உலகக் கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் இரண்டு ஐரோப்பிய நாடுகளான நெதர்லாந்து மற்றும் ஸ்பெய்ன் அணிகள் மோதிக்கொண்டன. இந்த இறுதிப் போட்டியில் ஸ்பெய்னானது, நெதர்லாந்தினை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 19வது உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் சாம்பியன் பட்டத்தினை முதன்முறையாக தனதாக்கிக் கொண்டு புதிய வரலாற்றினைப் படைத்தது.



மிகவும் ஆக்ரோஷமாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் முழுமையான 90 நிமிடத்தில் இரண்டு அணி வீரர்களும் பல்வேறு தடவைகள் முயன்றும் கோலினைப் பெறமுடியாமல் போகவே மேலதிகமாக நேரம் வழங்கப்பட்டது. அதன் பிரகாரம், முதல் 15 நிமிடத்தில் எந்த கோலும் பெறப்படவில்லையாயினும் போட்டியின் 116வது நிமிடத்தில் ஸ்பெய்ன் அணியின் இனியெஸ்டா பெற்ற அபார கோலின் மூலம் ஸ்பெய்ன் அணி உலகக் கிண்ணத்தினை முதல் தடவையாக சுவீகரித்தது. இந்தப் போட்டியில் ஏராளமான மஞ்சள் அட்டைகளும், சிவப்பு அட்டை ஒன்று காட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை கடந்த சனிக்கிழமை நடைபெற்ற 3ம் இடத்துக்கான போட்டியில் உருகுவே மற்றும் ஜேர்மனி அணிகள் மோதிக்கொண்டன. இதில் ஜேர்மனி அணி 3-2 என்ற கோல் அடிப்படையில் வெற்றி கொண்டு 3ம் இடத்தினை 4வது தடவையாக சுவீகரித்தது. கடந்த உலகக் கிண்ணத்திலும் ஜேர்மனி அணியே 3ம் இடத்தினைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

2010 உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில்............
19வது உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் நிகழ்த்தப்பட்ட & புதுப்பிக்கப்பட்ட சாதனைகள் வருமாறு............


முதன்முதலாக..........
 ஆபிரிக்கா கண்டத்தில்(தென்னாபிரிக்கா) முதல் தடவையாக உலகக் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுத்தொடர் நடைபெற்றது. இதில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெய்ன் அணி ஆபிரிக்க கண்டத்தில் புதிய வரலாற்றினைப் படைத்தது.


முதல்வெற்றி...........
 ஸ்பெயின் அணிக்கெதிராக 85 ஆண்டுகளில் சுவிட்சர்லாந்து அணி முதல் வெற்றியினை (1-0) பதிவுசெய்தது.

 பிரான்ஸ் அணிக்கெதிராக 80 ஆண்டுகளில் மெக்சிக்கோ அணி முதல் வெற்றியினை (2-0) பதிவுசெய்தது.

 கிரேக்க அணி உலகக் கிண்ணத்தில் தமது முதல் வெற்றியினை பதிவுசெய்தது. (முதல் சுற்றில் நைஜீரியா அணிக்கெதிராக 2-1)

 ஸ்லோவேனியா அணி உலகக் கிண்ணத்தில் தமது முதல் வெற்றியினை பதிவுசெய்தது. (முதல் சுற்றில் அல்ஜீரியா அணிக்கெதிராக 1-0)

 அந்நிய மண்ணில் ஜப்பான் அணியானது, உலகக் கிண்ணத்தில் தமது முதல் வெற்றியினை பதிவுசெய்தது. (முதல் சுற்றில் கமரூன் அணிக்கெதிராக 1-0)

 சிலி 48 ஆண்டுகளின் பின் உலகக் கிண்ணத்தில் தமது முதல் வெற்றியினை பதிவுசெய்தது. (முதல் சுற்றில் ஹொண்டுராஸ் அணிக்கெதிராக 1-0 வெற்றி)... கடைசியாக 1962ல் யுகோஸ்லாவியாவுடனான போட்டியில் வெற்றி .........


முதல் தடவையாக..........
 உலகக் கிண்ண வரலாற்றில் கானா முதல் தடவையாக காலிறுதிக்கு முன்னேறியது. முன்னர் 2006 உலகக் கிண்ணத்தில் 2ம் சுற்றுக்கு நுழைந்தது.

 உலகக் கிண்ண வரலாற்றில் பரகுவே முதல் தடவையாக காலிறுதிக்கு முன்னேறியது. முன்னர் 1986,1998,2002 உலகக் கிண்ணத்தில் 2ம் சுற்றுக்கு நுழைந்தது.

 உலகக் கிண்ண வரலாற்றில் நியூசிலாந்து அணி முதல் தடவையாகப் புள்ளியினைப் (03) பெற்றுக்கொண்டது. முன்னர் 1982ல் 3போட்டிகளிலும் தோல்வி கண்டது.

 80 ஆண்டுகால உலகக் கிண்ண வரலாற்றில் போட்டியினை நடத்திய நாடானது (தென்னாபிரிக்கா) முதல் சுற்றுடன் வெளியேறியது இதுவே முதல் தடவையாகும்.

 உலகக் கிண்ண வரலாற்றில் நடப்பு சாம்பியனும்(இத்தாலி), 2ம் இடத்தினைப் பெற்ற அணியும்(பிரான்ஸ்) முதல் சுற்றுடன் வெளியேறியதும் இதுவே முதல் தடவையாகும்.

 80 ஆண்டுகால உலகக் கிண்ண வரலாற்றில் 3 சகோதரர்களைக் கொண்ட முதல் அணியாக ஹொண்டுராஸ் விளங்கியது.

 உலகக் கிண்ண வரலாற்றில் தந்தையும், மகனும் ஒரே அணியில் இதுவே முதல் தடவை. அமெரிக்க அணியில் தந்தை மைக்கல் பொப்(பயிற்றுனர்), மகன் மைக்கல் ப்ரட்லி(அணி வீரர்).



இறுதிப்போட்டி.............
 80 ஆண்டுகால உலகக் கிண்ண வரலாற்றில் ஸ்பெய்ன் முதல் தடவையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தது. இதன் மூலம் உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய 12வது அணியாக ஸ்பெய்ன் விளங்குகின்றது.

 நெதர்லாந்து அணி 32 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கிண்ணத்தில் முதல் தடவையாக இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. முன்னர் 1978ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனாவிடம் 1-3 தோல்வியடைந்தது.

 32 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கிண்ணத்தில் முதல் தடவையாக இறுதிப் போட்டிக்கு சாம்பியன் பட்டம் வெல்லாத இரண்டு அணிகள் மோதின (ஸ்பெய்ன் & நெதர்லாந்து) . இதற்கு முன்னர் 1978ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனா & நெதர்லாந்து அணிகள் மோதின.

 இதுவரை நடைபெற்ற 18 உலகக் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுத்தொடர்களிலும் ஐரோப்பாவுக்கு வெளியே எந்தவொரு ஐரோப்பிய நாடும் சாம்பியன் பட்டம் வென்றதில்லை.அந்த குறையினை நீக்கி ஐரோப்பாவுக்கு வெளியே சாம்பியன் பெற்ற முதலாவது ஐரோப்பிய நாடாக ஸ்பெய்ன் சாதனை படைத்தது.

 உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் அதிக இறுதிப் போட்டியில்(03) விளையாடிய 5வது நாடாக நெதர்லாந்து சாதனை படைத்தது. இதன் முதலிடத்தில் பிரேசில் & ஜேர்மனி (07), அதனைத் தொடர்ந்து இத்தாலி(06), ஆர்ஜென்டீனா(04) ஆகிய நாடுகள் விளங்குகின்றன.

 உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நுழைந்த அணி என்ற சாதனையினை பிரேசில் அணியுடன்(2002) நெதர்லாந்து. பகிர்ந்துகொண்டது.

 உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் இறுதிப் போட்டிக்கு நுழைந்த முதற்தடவையிலேயே சாம்பியன் நாடான ஸ்பெய்ன் தனக்கு முன்னர் அந்த பெருமையினைக் கொண்ட உருகுவே, இத்தாலி, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவற்றுடன் தன்பெயரினைப் பதிந்துகொண்டது.

 2010ம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் மொத்தமாக 1 கோல் மாத்திரம் பெறப்பட்டது. இதற்கு முன்னர் 1990ம் ஆண்டு உலகக் கிண்ணம் (ஜேர்மனி 1 – ஆர்ஜென்டீனா 0)

 உலகக் கிண்ண வரலாற்றிலே தாம் விளையாடிய முதல் போட்டியில் தோற்று, இறுதிப் போட்டி வரை முன்னேறி சாம்பியனான ஒரே அணி என்ற சாதனையினை ஸ்பெய்ன் பதிவுசெய்தது.

 உலகக் கிண்ண வரலாற்றிலே தாம் விளையாடிய போட்டிகளில் குறைந்த கோல்களினைப்(08) பெற்று சாம்பியனான அணி என்ற சாதனையினை ஸ்பெய்ன் பதிவுசெய்தது.

 ஐரோப்பிய சாம்பியன், உலகக் கிண்ண சாம்பியனானது இது 2வது தடவையாகும். (இதற்கு முன்னர் 1974ல் மே.ஜேர்மனி)


சில குறிப்புக்கள்.........
 உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் அதிகளவான அரையிறுதிப் போட்டிகளில் விளையாடிய நாடான ஜேர்மனி தனது சாதனையினை புதுப்பித்தது – 12 போட்டிகள்

 அதிக உலகக் கிண்ண போட்டிகளில்(99) விளையாடிய அணியாக ஜேர்மனி சாதனை படைத்தது. பிரேசில் 97 போட்டிகளில் விளையாடியுள்ளது.

 உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் அதிக தடவைகள்(4) 3வது இடத்தினை சுவீகரித்த அணியான ஜேர்மனி தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் 3ம் இடத்தினைப் வெற்றி கொண்ட ஒரே அணியாக புதிய சாதனை படைத்தது.

 24ஆண்டுகளின்பின் ஆரம்பப் போட்டி சமனில் முடிவடைந்தது. (தென்னாபிரிக்கா எதிர் மெக்ஸிக்கோ 1-1) , முன்னர் 1986ல் இத்தாலி எதிர் பல்கேரியா 1-1

 உருகுவே அணி 40 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கிண்ணத்தில் முதல் தடவையாக காலிறுதி & அரையிறுதிக்கு நுழைந்தது. உருகுவே அரையிறுதியில் நெதர்லாந்திடம் 2-3 என்ற கணக்கில் வீழ்ந்தது.

 உலகக் கிண்ண வரலாற்றில் 60 ஆண்டுகளின் பின்னர் ஸ்பெய்ன் முதல் தடவையாக அரையிறுதிக்கு முன்னேறியது. முன்னர் 1950ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் அரையிறுதிக்கு நுழைந்தது.

 உலகக் கிண்ண வரலாற்றில் சுவிட்சர்லாந்து அதிக போட்டிகளில்(05) எதிரணிக்கு கோல் விட்டுக்கொடுக்காத அணியாக இத்தாலியுடன் தன்பெயரினை பதிவுசெய்தது. (சுவிட்சர்லாந்து 2006ல் 4 போட்டிகளிலும், 2010ல் தனது முதல் போட்டியில் ஸ்பெயினுக்கெதிராக 1-0 என வெற்றிபெற்றது)

 உலகக் கிண்ணத்தில் நடப்புச் சாம்பியன் 2வது தடவையாக முதற் சுற்றுடன் வெளியேறிய அவமானகரமான சாதனையினை படைத்த ஒரே நாடாக இத்தாலி விளங்குகின்றது. இதற்கு முன்னர் 1950 உலகக் கிண்ணத்தில் இத்தாலி முதல் சுற்றுடன் நடையைக் கட்டியது.


FIFA உலகக் கிண்ண விருதுகள்2010

1) தங்கப் பாதணி
19வது உலகக் கிண்ணத்தில் அதிக கோல்களினை (05 கோல்களினை பெற்றவர் & 03 கோல்களினை அடிக்க ஏனைய வீரர்களுக்கு உதவியவர்) அடித்த ஜேர்மனி நாட்டினைச் சேர்ந்த தோமஸ் முல்லர் தங்கப் பாதணி விருதினைப் பெற்றுக் கொண்டார்.







2) தங்கப் பந்து
தொடரின் மிகச் சிறந்த வீரருக்கான தங்கப் பந்து விருதினை உருகுவே நாட்டினைச் சேர்ந்த டியகோ போர்லன் பெற்றுக் கொண்டார்.






3) தங்கக் கையுறை
தொடரின் மிகச் சிறந்த கோல் காப்பாளருக்கான தங்கக் கையுறை விருதினை ஸ்பெய்ன் நாட்டின் தலைவரும், கோல்காப்பாளருமான ஐகர் காசியாஸ் பெற்றுக் கொண்டார்.






4) சிறந்த இளம் வீரருக்கான விருது
தொடரின் மிகச் சிறந்த சிறந்த இளம் வீரருக்கான விருதினையும், தங்கப் பாதணி விருது பெற்ற ஜேர்மனி நாட்டினைச் சேர்ந்த தோமஸ் முல்லர் பெற்றுக் கொண்டார்.









5) நேர்த்தியாக, விதிகளுக்கமைய விளையாடிய அணி- Fair Play award
19வது உலகக் கிண்ணத்தில் போட்டி விதிகளுக்கமைய விளையாடிய அணியாக சாம்பியன் பட்டத்தினை வெற்றி கொண்ட ஸ்பெய்ன் அணியே தெரிவு செய்யப்பட்டது.






இந்த உலகக் கிண்ணத்தில் "வுவுசெலா"இசைக் கருவி,"ஜபுலானி"பந்து ,போட்டி முடிவுகளை எதிர்வுகூறிய "போல்" ஒக்டோபஸ் ஆகியவற்றினைப் பற்றியும் அதிகமாக பேசப்பட்டமை நினைவில் நிற்கின்றனதெனலாம்.






20வது உலகக் கிண்ணம் தொடர்பான செய்திகளினை பிரேசிலிருந்து தொகுத்து வழங்க இன்னும் 4 வருடங்கள் காத்திருப்போமே..........



***

Friday, July 9, 2010

உலகில் மிக நீளமான சுரங்க பாதை நிர்மாணிப்பு



உலகில் மிக நீளமான சுரங்க புகையிரத பாதையாக சுவிட்சர்லாந்தின், கோட்காட் சுரங்க புகையிரத பாதை விளங்குவுள்ளது. 57 கிலோமீற்றர்(35மைல்கள்) நீளமான இந்த சுரங்கப் பாதையின் நிர்மாணப் பணிகள் தற்சமயம் நடைபெற்றுவருவதுடன், இந்தச் சுரங்கப் பாதையானது 2016ம் ஆண்டளவில் பாவனைக்கு திறந்துவிடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

சுவிஸ் அரசாங்கத்தின் தகவல்களின் பிரகாரம், மிக ஆளமான சுரங்கத்தில் புதிய முறைமைகளுடன் காற்றோட்டமானதாகவும், அபாயங்களிலிருந்து மக்களுக்கு பாதுகாப்பானதாகவும், உலகில் பாதுகாப்பான சுரங்கப் பாதையாக இந்தச் சுரங்கப் பாதை விளங்குமென தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சுரங்கமானது வடக்கு சுவிட்சர்லாந்தினையும், ரிசினோ பிரதேசத்தினையும் இணைக்கும் வகையில் அல்ப்ஸ் மலையினூடாக அமைக்கப்பட்டு வருகின்றது.

***
இலங்கையில் மிக நீளமான சுரங்கப் பாதையானது றம்பொடையில் 2008ம் ஆண்டு பெப்ரவரி மாதம் திறந்துவைக்கப்பட்டது. இந்தச் சுரங்கப் பாதையின் நீளம் 225 மீற்றராகும்.

***

Wednesday, July 7, 2010

உலகில் மிக அரிதான கோப்பி இனம்



உலகில் மிக அரிதான கோப்பியாக கொபி லுவக் விளங்குகின்றது. இந்த கோப்பி இந்தோனேசியாவில் காணப்படுகின்றது. இந்த கோப்பி 1 பவுண்ட் [0.4536கிலோ] $300க்கு விற்பனை செய்யப்படுகின்றது.


கொபி- Kopi (கோப்பிக்கான இந்தோனேசியன் சொல்) , லுவக்- Luwak என்ற சொல்லானது இந்தோனேசிய தீவுகளான சுமாத்திரா, ஜாவா, சுலவெசி ஆகிய தீவுகளிலிருந்து தோற்றம் பெற்றதாகும்.

***

இன்றைய 2வது அரை இறுதியில் ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி வெற்றி பெறுமா .......
நெதர்லாந்தினை இறுதிப் போட்டியில் சந்திக்குமா ???? .............

மேலும் விபரமறிய ......... http://kklogan.blogspot.com/2010/06/numerology.html

***

Sunday, July 4, 2010

முத்தான சிந்தனை துளிகள்......!!!



நம்முடைய வாழ்க்கைக்கு வழிகாட்டுகின்ற சில சிந்தனைத் துளிகள்.....

நண்பர்களே இந்த ஆக்கத்தினை பெரிதாக்கி வாசிக்கவும்.....



(நன்றிகள் - வீரகேசரி வாரவெளியீடு 06.06.2010)

***

Thursday, July 1, 2010

ஓ.கே ~ O.K என்கின்ற சொல் எவ்வாறு உருவாகியது?



நம்முடைய நாளாந்த வாழ்வில் நாம் அடிக்கடி பயன்படுத்துகின்ற ஒரு சொல்லாக O.K என்கின்ற ஆங்கிலச் சொல் விளங்குகின்றது. இன்று நாம் ஓகே என்கின்ற சொல்லினை பல்வேறு இடங்களில் சந்தர்ப்பத்திற்கேற்ப பயன்படுத்துகின்றோம்.

O.K என்கின்ற சொல் எவ்வாறு தோற்றம் பெற்றது தெரியுமா?....... அமெரிக்க சிவில் யுத்தம் நடைபெற்ற காலகட்டத்தில் போரின் பின் தமது முகாமுக்கு திரும்புகின்ற படைத்தரப்பினர், தமது மேலதிகாரிக்கு இந்தப் போரில் 0 (zero) killed ~ [ஒருவரும் கொல்லப்படவில்லை] என அறிக்கை சமர்ப்பிப்பராம். காலப்போக்கில் 0 (zero) killed என்பது O.K என்பதாக நிலைத்துவிட்டது.

O.K அடுத்த பதிவில் சந்திப்போமே..........

***
Blog Widget by LinkWithin