Tuesday, June 1, 2010

உலகக் கிண்ணம் வெல்வது யார்? ஒரு Numerology ஆய்வு



இந்த மாதம் 11ம் திகதி ஆபிரிக்க கண்டத்தில்[தென்னாபிரிக்கா] முதல்தடவையாக நடைபெறுகின்ற உலகக் கிண்ண உதைபந்தாட்டப் சுற்றுப்போட்டியில் உலகக் கிண்ணத்தினை வெற்றிகொள்ளக்கூடிய நாடு எதுவாக இருக்கும்? இதற்கு விடை பகிர்வது கடினம்தான், ஆனாலும் இந்தப் பதிவானது ஒரு வித்தியாசமான முறைமையில் இலக்கமுறைமைகளைக் கொண்டு ஆய்வுசெய்கின்றது.

5 முறை உலகக் கிண்ணத்தினை வெற்றிகொண்ட நாடு பிரேசில்...........
2002ம் ஆண்டுக்கு முன்னர் உலகக் கிண்ணத்தினை வெற்றிகொண்ட ஆண்டு ~ 1994

1994ம் ஆண்டுக்கு முன்னர் உலகக் கிண்ணத்தினை வெற்றிகொண்ட ஆண்டு ~ 1970

மொத்தம் = 1994 + 1970 = 3964

மொத்தத்திலிருந்து [3964] பிரேசில் இறுதியாக உலகக் கிண்ணத்தினை வெற்றிகொண்ட ஆண்டினை கழித்தால்[2002] = 3964 – 2002 = 1962

ஆம்................ 1962ம் ஆண்டு பிரேசில் நாடே சாம்பியனாகியது.

ஆர்ஜென்ரீனா
இறுதியாக உலகக் கிண்ணத்தினை வெற்றிகொண்ட ஆண்டு ~ 1978

1978ம் ஆண்டுக்கு முன்னர் உலகக் கிண்ணத்தினை வெற்றிகொண்ட ஆண்டு ~ 1986

மொத்தம் = 1994 + 1970 = 3964

ஜேர்மனி
இறுதியாக உலகக் கிண்ணத்தினை வெற்றிகொண்ட ஆண்டு ~ 1990

1990ம் ஆண்டுக்கு முன்னர் உலகக் கிண்ணத்தினை வெற்றிகொண்ட ஆண்டு ~ 1974

மொத்தம் = 1990 + 1974 = 3964

மொத்தத்திலிருந்து [3964] தற்சமயம் உலகக் கிண்ணம் நடைபெறுகின்ற ஆண்டினை கழித்தால்[2010] = 3964 – 2010 = 1954

ஆம்................ 1954ம் ஆண்டு ஜேர்மனி நாடே சாம்பியனாகியது.

மேற்கூறிய இலக்கமுறைமைகளினை கொண்டு ஆய்வு செய்கின்றபோது 2010ம் ஆண்டு நடைபெறுகின்ற 19வது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் சுற்றுப்போட்டியில் ஜேர்மனி நாடு சாம்பியன் பட்டம் பெறுமா?





வெற்றிக்கொடி கட்டுமா ஜேர்மனி



ஆம்..... ஒரு மாதம் பொறுமையாக இருந்து பார்ப்போம்.

ஜேர்மனி நாடு சாம்பியன் பட்டம் வென்றால் எப்படி நம்ம ஆய்வு சூப்பர் என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுகின்றது
[அப்படி ஜேர்மனி சாம்பியனாகவில்லையாயின்............... என்னை நீங்கள் ??? ....... சொல்லிப்புட்டேன்........... அட எங்க போறன் என்றா பார்க்கின்றீர்கள்??? தென்னாபிரிக்காவுக்குதான்.... ]

நம்ம கையில என்ன இருக்கின்றது........... திறமையும், அதிர்ஷ்ட்டமும் இருக்கின்ற நாடு கிண்ணம் வெல்லும் என்று நீங்கள் சொல்வதும் என் காதில் விழுகின்றது.......

***

No comments:

Blog Widget by LinkWithin