Tuesday, June 22, 2010

ஒற்றை இலக்க ஓட்டத்தினை மாத்திரம் கொடுத்து சிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பெற்றவர்கள்

உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் தற்சமயம் நடைபெற்றுவருகின்றன. அந்தவகையில் கால்பந்தாட்டம் தொடர்பிலான செய்திகளே விளையாட்டு ரசிகர்களை ஆக்கிரமித்துள்ளன. அந்தவகையில் ஒருமாறுதலாக கிரிக்கெட் ரசிகர்களுக்காக நீண்ட நாட்களுக்குப் பின்னர் கிரிக்கெட் தொடர்பான பதிவு என்னிடமிருந்து....

இலங்கையில் தற்சமயம் நடைபெற்றுவருகின்ற ஆசியகிண்ண கிரிக்கெட் சுற்றுதொடரில் கடந்த 16ம்திகதி நடைபெற்ற இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டியில் இந்திய அணியின் விரேந்தர் சேவாக் 6ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 4 விக்கட்களை கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணை புரிந்தார். இந்த பந்துவீச்சுப்பெறுதியானது ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒற்றை இலக்க ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4விக்கட்களைப் பதம்பார்த்த 2வது சிறப்பு பெறுதியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அந்தவகையில் ஒற்றை இலக்க ஓட்டத்தினை மாத்திரம் கொடுத்து சிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பெற்றவர்கள் தொடர்பான விபரங்கள் வருமாறு....

 கெட்னி வோல்ஸ் (மே.தீவுகள் Vs இலங்கை), சார்ஜா, 4.3 ஓவர்கள் - 3 ஓட்டமற்ற ஓவர்கள் - 1 ஓட்டம் - 5 விக்கட்கள் , 1986/87



 சுனில் ஜோசி (இந்தியா Vs தென்னாபிரிக்கா), நைரோபி, 10-6-6-5, 1999/00
 டானியல் விற்றோரி (நியூசிலாந்து Vs பங்களாதேஷ்), குயின்ஸ்டவுன், 6-2-7-5, 2007/08
 முத்தையா முரளிதரன் (இலங்கை Vs நியூசிலாந்து), சார்ஜா, 10-3-9-5, 2001/02
 பில் சிம்மன்ஸ் (மே.தீவுகள் Vs பாகிஸ்தான்) , சிட்னி , 10 – 8 – 3 – 4 ,1992/93
 விரேந்தர் சேவாக் (இந்தியா Vs பங்களாதேஷ்), தம்புள்ளை, 2.5 – 0 - 6 -4, 2010
 யுவராஜ் சிங் (இந்தியா Vs நமீபியா) ,பீற்றர்மட்ரிஸ்பேர்க், 4.3 – 2 - 6 – 4, 2002/03
 கிறிஸ் ஹரீஸ் (நியூசிலாந்து Vs ஸ்கொட்லாந்து) ,எடின்பேர்க், 3.1-0-7-4, 1999
 டரன் லீமன் (அவுஸ்திரேலியா Vs சிம்பாப்வே) ,ஹராரே, 4.3-1-7-4, 2004
 கிறிஸ் ஓல்ட் (கனடா Vs இங்கிலாந்து), மன்ஷ்செஸ்டர், 10-5-8-4, 1979
 கிளென் மக்ராத் (அவுஸ்ரேலியா Vs இந்தியா), சிட்னி, 10-4-8-4, 1999/00
 டெவோன் ஸ்மித் (மே.தீவுகள் Vs நெதர்லாந்து), டப்ளின், 6-1-8-4, 2007
 ஹீத் ஸ்ரிக் (சிம்பாப்வே Vs மே.தீவுகள்), சிட்னி, 8-4-8-4, 2000/01
 அப்துல் காதிர் (பாகிஸ்தான் Vs நியூசிலாந்து), சார்ஜா, 10-4-9-4, 1985/86

***

3 comments:

பருப்பு (a) Phantom Mohan said...

தமிழ்ப் பற்று ஜாஸ்தியோ? பாதி வார்த்தை ஒன்னும் புரியல. சாதாரணமா பேசுற மாதிரி எழுதுங்க பாஸ். ஏட்டுச்சுவடிலையா எழுதுறீங்க,இல்ல உங்க வீட்டுல வெளியில இப்பிடித்தான் பேசுவீங்களா?

இப்டி எழுதினா தான் தமிழ் வளரும், சினிமாவுக்கு தமிழ்ல பேர் வச்சா தான் தமிழ் வளருமன்ற மூட நம்பிக்கையை ஒழிங்க. எவன் தடுத்தாலும் தமிழ் அழியாது!

"அன்பின் XXXX ", அப்பிடின்னு எழுதுறாங்களே அதுக்கு என்ன அர்த்தம் பாஸ். எனக்கு "அன்புள்ள" தெரியும், அதென்ன "அன்பின்" அப்புறம் "வழமையா" இது தமிழா?

பருப்பு (a) Phantom Mohan said...

ஒ நீங்க இலங்கையா? இப்போ தான் பார்த்தேன்.


மன்னிக்கணும் அதுதான் பாதி வார்த்தை நான் கேள்விப்படாத வார்த்தையா இருக்கு.

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நண்பரே மோகன் உங்கள் கருத்துரைக்கு நன்றிகள்.......
முதலில் உங்கள் கருத்து என்னை வியப்பில் ஆழ்த்தியது. ஏனெனில் தமிழ்மொழி தொடர்பில் நான் எந்தவொரு இடுகையும் இடவில்லை. தமிழ்மொழியினை தாய்மொழியாக கொண்ட நான் சாதாரணமாக நடைமுறையில் பாவனையிலுள்ள மொழி நடையிலேயே பதிவுகளினை இடுகிறேன். செம்மொழி மாநாடு நடைபெறுகின்ற இந்தவேளையின் தமிழ்மொழியின் எதிர்காலம் தொடர்பாகவும் நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

நான் தாய்மொழியாம் தமிழ்மொழியில் நிறையவே பற்று உடையவன் என குறிப்பிட்டது தொடர்பில் நான் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.



நன்றிகள்......
தொடர்ந்தும் உங்கள் ஆதரவினை எதிர்பார்க்கின்றேன்...

Blog Widget by LinkWithin