Sunday, June 20, 2010

உலகில் மிகப்பெரிய பூ

உலகில் மிகப்பெரிய பூவாக ரப்லீசியா விளங்குகின்றது. ரப்லீசியாவானது 5 இதழ்களைக் கொண்ட பூவாகும். இந்த பூவின் விட்டமானது 106 சென்ரிமீற்றரிலும் [3அடி] அதிகமாகும். அத்துடன் இந்த பூவின் நிறையானது 10கிலோவிலும் அதிகமாகும். இப்பூவின் நடுவிலுள்ள கிண்ணம் போன்ற பகுதியில் 10லீட்டர் தண்ணீர் ஊற்றலாம்.



செடியிலோ, மரத்திலோ இந்தப் பூ பூப்பதில்லை.இதொரு ஒட்டுண்ணி. இந்தப் பூ முழுமையாக வளர்ச்சியடைந்து மலர்வதற்கு ஒரு மாதமாகும். பின்னர் இந்தப் பூவானது 5-7 வரையான குறுகிய நாட்களையே வாழ்நாளாகக் கொண்டதாகும்.
ரப்லீசியாவானது இந்தோனேசியாவின் தீவுகளான சுமாத்திரா, மற்றும் வொர்னியோ தீவுகளின் மழைக்காடுகளில் சுதேச மலராக காணப்படுகின்றது.
இந்தப் பூவினைக் கண்டுபிடித்து வெளியுலகத்துக்கு தெரிவித்தவர் இங்கிலாந்தினைச் சேர்ந்த சேர் ஸ்டம்போர்ட் ரப்ல்ஸ் ஆவார். பல ஆசிய நாடுகள் இங்கிலாந்தின் ஆட்சியின் கீழிருந்தபோது, சேர் ஸ்டம்போர்ட் ரப்ல்ஸ் இந்தோனேசியாக் காடுகளுக்கு சென்றபோது இந்தபூவினை கண்டுபிடிதார். இதனால் இப்பூ அவரது பெயரால் "ரப்லீசியா" என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது.

உலகில் மிகப்பெரிய பூவாகிய இதன் இன்னுமொரு சிறப்பம்சம் யாதெனில்; இந்த தாவரமானது உலகில் மிகவும் சகிக்க முடியாத வாசனையுடையதொன்றாக கருதப்படுகின்றது.

ஏனெனில் இந்த பூவானது பழுதடைந்த இறைச்சியின் மணத்தினை போன்றதான வாசனையினை வெளிப்படுத்துகின்றதாம்.



+++++.........++++++++...................+++++++++++++.....................


இசைபோல உலகமெங்கும் நின் புகழ் பரவ வாழ்த்துக்கள்.........

நாளை 21ம்திகதி தனது 2வது பிறந்த நாளைக் கொண்டாடும் எங்கள் அன்பு மருமகள் "ஜயபிரதா" செல்லத்துக்கு வாழ்த்துக்கள். ஒவ்வொரு வருடமும் 21ம் திகதி உலக இசை தினமாகும். இசைபோல உலகமெங்கும் நின் புகழ் பரவ வாழ்த்துக்களை அன்பு மாமா தெரிவித்துக்கொள்கின்றேன்.........

Happy Birthday Wishes………….

பத்திரிகையில் வெளியான எங்கள் மருமகளின் பிறந்தநாள் வாழ்த்து......


( நன்றிவிஜய் 16.06.2010)


***

3 comments:

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இறைவனின் அற்புதம் தான் என்னே! பூ பெரிது தான்,
ஆனால் வாசனை?????

rajan said...

mmm nalla thagaval nandri

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

உங்கள் கருத்துரைகளுக்கு மிக்க நன்றிகள்.........

Blog Widget by LinkWithin