Wednesday, June 9, 2010

சாம்பியன் நாடானது எந்தவிதமான கோல்களினையும் பெறமுடியாமல் வெளியேறியதா??? .......



எதிர்வருகின்ற 11ம் திகதி வெள்ளிக்கிழமை, உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டிகள் தென்னாபிரிக்க மண்ணில் அரங்கேற காத்திருக்கின்றன என்பது நீங்கள் அறிந்ததே. அந்தவகையில் உலகக் கிண்ண உதைபந்தாட்டத்துடன் தொடர்புடைய சில சுவாரஷ்சியமான தகவல்கள் உங்களுக்காக இதோ.........

• உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் முதன்முதலாக விளையாடிய நாடுகள் ~ மெக்சிக்கோ Vs பிரான்ஸ் – மொன்ரிவிடோ, உருகுவே, 13/07/1930

• உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் பங்குபற்றிய முதல் ஆசிய நாடு ~ டச்சு கிழக்கிந்தியா [தற்சமயம் இந்தோனேசியா] – 1938

• உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் காலிறுதி ஆட்டங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட நாடுகளில் மிகச் சிறிய நாடு[பரப்பளவில்] ~ வட அயர்லாந்து – 1958 உலகக் கிண்ணம்

• உலகக் கிண்ணத்தினை இரண்டு தடவைகள் பெற்றுக்கொடுத்த ஒரே பயிற்சியாளர் ~ விற்றோரியோ போஸ்சோ – இத்தாலி அணிக்கு , 1934 & 1938

• தான் பயிற்றுவித்த அணிகளை அரையிறுதி ஆட்டங்களுக்கு இரண்டு வெவ்வேறு நாடுகளை முன்னேறச் செய்த பயிற்சியாளர் ~ டச்சு பயிற்றுனர் குஸ் ஹிட்டின்ங் – 1998ம் ஆண்டு நெதர்லாந்து அணி, & 2002ம் ஆண்டு தென்கொரிய அணி

• தனது கண்டத்திற்கு வெளியே உலகக் கிண்ணத்தினை வெற்றி கொண்ட ஒரே நாடு ~ பிரேசில் – 1958[சுவீடன் – ஐரோப்பா கண்டம்] & 2002[கொரியா/ஜப்பான் - ஆசியா கண்டம்]

• உலகக் கிண்ண போட்டிகளின்போது அணிகள் குழுக்களாக வகைப்படுத்தப்படும்.
அந்தவகையில் தமது குழு போட்டிகளில் எதிர்மறை கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஒரே நாடு ~ கமரூன் [1990 உலகக் கிண்ணத்தில் , குழு "B" யில் (-2) கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது]

• உலகக் கிண்ணத்தினை வெற்றிகொண்ட நாடானது, உலகக் கிண்ண தொடரொன்றில் எந்தவிதமான கோல்களினையும் அடிக்காமல் வெளியேறிய ஒரே நாடு ~ பிரான்ஸ், 2002 உலகக் கிண்ணத்தில் தனது 3 போட்டிகளில் எந்த கோல்களையும் பெறமுடியாமல் முதல்சுற்றுடன் பரிதாபகரமாக வெளியேறியது.


***



உலகக் கிண்ண போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் இவைதான்

*

No comments:

Blog Widget by LinkWithin