Friday, May 21, 2010

உலகில் மிக உயரமான வெளிச்சவீடு

வெளிச்சவீடுகள் தொடர்பிலான ஏராளமான சுவாரஷ்சியமான தகவல்களை கொண்டமைந்த பதிவினை படித்து ரசியுங்கள்........


உலகில் கட்டப்பட்ட முதல் வெளிச்சவீடாக[கலங்கரை விளக்கம் ] அலெக்ஸ்சாண்டிரா வெளிச்ச வீடானது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வெளிச்சவீடானது கி.மு 200ம் நூற்றாண்டளவில் பேரோஸ் தீவுகளில் எகிப்திய பேரரசனான போலமி [Ptolemy] என்பவனால் கட்டப்பட்டது. இது புராதனமான ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்பட்டது. இது 492அடி[150மீற்றர்] உயரமானதாகும். இது நவீனகால வெளிச்சவீடுகளின் உயரங்களிலும் பார்க்க 3மடங்கு உயரமானதாகும்.



ரோமப் பேரரசர்கள், கடற்பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு உதவி புரிவதற்காக அதிகமான வெளிச்சவீடுகளை நிர்மாணித்தனர். கி.பி 90ம் ஆண்டளவில் பேரரசர் கலிகுலா, இங்கிலாந்து டோவரில் வெளிச்சவீட்டினை நிர்மாணிக்க உத்தரவு பிறப்பித்தார். இது இங்கிலாந்தில் மிகப் பழமையான வெளிச்சவீடு என்பதுடன் இது டோவர் துறைமுக தளத்தில் நிலைத்திருக்கின்றதாம்.

செங்கற்களால் நிர்மாணிக்கப்பட்ட உலகில் மிகஉயரமான வெளிச்சவீடாக இத்தாலி, ஜேனோயாவிலுள்ள லன்ரேர்னா விளங்குகின்றது. இது 1543ம் ஆண்டளவில் நிர்மாணிக்கப்பட்டதாகும். இது 246அடி [75மீற்றர்] உயரமானதாகும்.



உலகின் முதல் கருங்கல் வெளிச்சவீடாக இங்கிலாந்து, பிளைமவுத்தின் தென்புறமாக கட்டப்பட்ட சிமிற்ரொன் எடிஸ்ரோன் விளங்குகின்றது. இது 1756ம் ஆண்டளவில் “சமூக பொறியியலின் தந்தை” [Father of Civil Engineering] என அழைக்கப்படுகின்ற ஜோன் சிமிற்ரொன் அவர்களால் கட்டப்பட்டதாகும். இது 24 மெழுகுதிரிகளுடன் மாத்திரம் வெளிச்சம் வழங்கியது. எடிஸ்ரோன் 47 ஆண்டுகள் வரை நெருப்பின் மூலம் பிரகாசித்தது. பின்னர் இதன் பாவனை நின்றதனால் அருகிலமைந்துள்ள குன்றில் கட்டப்பட்டது.



இன்றைய வெளிச்சவீடுகளினுடைய வெளிச்சங்கள் 20மில்லியன் மெழுகுதிரிகளுக்கு சமமானதாகும். இவை உயரழுத்த சினோன் விளக்குகளால் வெளிச்சம் வழங்குகின்றது.

உலகில் மிகஉயரமான வெளிச்சவீடாக ஜப்பான், யோகோஹமா, யமசிட்டா பார்க்கிலுள்ள உருக்கிலான யோகோஹமா கடற்கரைக் கோபுரம் விளங்குகின்றது. இது 348அடி [106மீற்றர்] உயரமானதாகும்.



***

2 comments:

நாளும் நலமே விளையட்டும் said...

கலங்கரை விளக்கம் என அழகான பொருள் பொதிந்த தமிழ் பெயர் இருக்கிறதே!

இவை மட்டும் தான் வெளிச்ச வீடுகளா? அப்படியே மொழி பெயர்ப்பதன் விளைவு இவ்வளவு தவறாகத் தான் முடியும்

http://ungalnanbansarath.blogspot.com/2010/05/blog-post.html

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நண்பரே உங்கள் கருத்துரைக்கு நன்றிகள் . இந்த பதிவினை பதிவிடும்போது நினைத்திருந்தேன் கலங்கரை விளக்கம் எனவும் குறிப்பிட நினைத்திருந்தேன். உண்மையிலே தவறுதலாக அந்த சொற்பதம் தவறவிடப்பட்டுவிட்டது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள்.

Blog Widget by LinkWithin