Monday, April 19, 2010

தாயகம் திரும்ப வேண்டுமாயின்.......

வருகின்ற ஜூன் மாதம் தென்னாபிரிக்காவில் உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன என்பதனை நீங்கள் அறிந்ததே. அந்தவகையில் உலகக் கிண்ண உதைபந்தாட்ட வரலாற்றில் நடைபெற்ற ஒரு சுவையான சம்பவம் தொடர்பாக உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.



சயர் நாடானது 1974ம் ஆண்டு மேற்கு ஜேர்மனியில் நடைபெற்ற உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டிகளுக்கு அதிர்ச்சிதரும் வகையில் தகுதிபெற்றது. கறுப்பு ஆபிரிக்க நாடுகளில், உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டிகளில் பங்குபெறும் தகுதியினைப் பெற்ற முதல் நாடும் சயர் ஆகும். சயர் நாட்டின் ஆளும் தலைவரான மொவுட்டு சிசி சீகோ தமது ஆயுதப்படையினரூடாக, அந்த நாட்டு உதைபந்தாட்ட அணியினருக்கு கட்டளையொன்றினைப் பிறப்பிக்கின்றார் .


மொவுட்டு சிசி சீகோ

சயர் நாட்டின் இறுதி குழுப்போட்டியானது பிரேசில் நாட்டு அணியுடனான போட்டியாக இருந்தது. அந்தப் போட்டியில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட கோல்களினால் தோல்வியுற்றால் வீரர்கள் நாடு திரும்பமுடியாது என கட்டளை பிறப்பிக்கின்றார்.




இதனால் போட்டியானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் பிரேசில் அணியானது 3-0 என சயர் அணியினை வீழ்த்தியதன் காரணமாக, சயர் நாட்டின் ஆளும் தலைவர் தமது நாட்டு வீரர்களினை தாயகம் திரும்ப அனுமதித்தாராம் .
***

2 comments:

Ganesh Babu said...

லோகநாதன் உங்கள் பதிவுகள் அருமை

தமிழர், மற்றும் தமிழ் வலை பதிவர்களுக்காக tamilar.co.cc என்று புதிய தளத்தை ஆரம்பித்து உள்ளேன், அதில் சேர்ந்து தமிழர்களுடன் உரையாடுங்கள், அது twitter+tamilish போன்றதொரு சேவை.

இப்படிக்கு
டென்த் ரிசெல்டுக்கு வெயிட் பண்ணும் மாணவன்

கணேஷ் பாபு

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நண்பர்களே மிக்க நன்றிகள் ...

Blog Widget by LinkWithin