Sunday, April 4, 2010

குழந்தை திருமணங்கள் அதிகம் நடைபெறுவது இந்தியாவில் தானாம்...



உலகில் நடைபெறுகின்ற குழந்தை திருமணங்களில் 40% ஆனவை இந்தியாவிலேயே நடைபெறுவதாக யுனிசெப் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. குழந்தை திருமணங்களின் காரணமாக பால் பேதங்காட்டல் தன்மைகள், கல்வியினை தொடர முடியாத நிலைகள், அத்துடன் உயர்வேகத்தில் சிசு மற்றும் தாய் மரணங்கள் ஆகியவற்றின் காரணமாக சமூகத்துக்கு ஒவ்வாத நிலைவரங்கள் சுழற்சிமுறையில் பாதிப்பினை ஏற்படுகின்றது.
யுனிசெப் அறிக்கையின் பிரகாரம், பால் அடிப்படையினை மையமாகக் கொண்டு பேதங்காட்டல் நிலையின் காரணமாக தாய்மைக்குரிய பெண்ணின் சுகாதாரத்தில், இவை நேரடி தாக்கங்களினை ஏற்படுத்துகின்றது. பெண்களும்,சிறுமிகளும் கல்வி கற்பதற்கான வாய்ப்புக்கள் மறுதலிக்கப்படுகின்றது, மேலும் மேலதிக சுகாதார வசதிகளினை பெற்றுக் கொள்வதினை/தேடிக் கொள்வதினை தடுக்கின்றன, முக்கியமான தீர்மானங்களை மேற்கொள்வதினை தடை செய்கின்றது. இதன் காரணமாக பெண்களின் சுகாதாரத்திலும், அவர்களுக்கு புதிதாகப் பிறக்கின்ற குழந்தைகளிலும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றது.
தாய்மார்களுடையதும், அவர்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகளினதும் வாழ்வினைப் பாதுகாப்பதற்காக மருத்துவ வசதிகள் தலையிட வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இவற்றின் உண்மையான வினைத் திறனாகப் பேணுவதற்கும், இந்த தலையீடுகளுக்கும், பெண்களின் உரிமைகளுக்காக சமூக ஒத்துழைப்புக்கள் வேண்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

யுனிசெப் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சிபாரிசுகளின் பிரகாரம், பெண்களினதும், குழந்தைகளினதும் உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும், அத்துடன் தரமான கல்வியினை வழங்க வேண்டும், துஷ்பிரயோகங்கள், சுரண்டல் நிலைகள், பேதங்காட்டல் நிலைகள், வன்முறைகள் ஆகியவற்றிலிருந்து பெண்களினைப் பாதுகாத்தல் வேண்டும், அத்துடன் பெண்களுக்கு தொழில்வாய்ப்புக்களினை ஏற்படுத்திக்கொடுத்தல் வேண்டும் ஆகியவற்றினை குறிப்பிட்டுக்காட்டியுள்ளது.

தற்சமயம், கல்விகற்ற பெண்கள் காலம் தாழ்த்தியே திருமணம் செய்துகொள்ள விரும்புகின்றனர். அவர்களின் குழந்தைகள் நோய்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதையும், மேலும் அவர்களுக்கும், அவர்களது குழந்தைகளுக்கு தேவையான போசணைகள் தொடர்பாகவும் அறிந்து வைத்திருக்கின்றார்கள், அத்துடன் அவர்கள் பாதுகாப்பான குழந்தைப் பிறப்பு இடைவெளி செயற்பாடுகளினையும் தெரிவுசெய்கின்றார்கள்.
இந்த விடயங்கள் படித்த பெண்களினதும், படிக்காத பெண்களினதும் குழந்தைகளில் செல்வாக்கு செலுத்துகின்றது.

தாய்க்குரியதும், புதிதாகப் பிறக்கின்ற குழந்தைகளினதும் சுகாதாரத்துக்காக சிவில் சமுகத்தின் பங்கு முக்கியமானதாகும். இதற்காக சுகாதார செயற்பாடுகளின் அபிவிருத்திக்காக முன்னுரிமை சமுக ஒத்துழைப்பு அவசியமாகும். தனிப்பட்ட குடும்பங்கள்,பெண்கள், சமுகத்தினையும் உள்வாங்கி சுகாதார செயற்பாடுகளில் செயற்படுதல் முக்கியமானதாகும்.



இன்றைய நிலைவரப்படி கிராமப்புறங்களில் குழந்தைப்பருவ திருமணங்கள் அதிகரித்தவண்ணம் செல்கின்ற நிலையினை கண்கூடாக காணமுடியும். ஆகவே சமுகத்தின் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டியது இந்த சமுதாயத்திலுள்ளவர்களின் கடப்பாடாகும்.

***

1 comment:

Unknown said...

தெளிவான வரிகள்/கருத்துக்கள். சமுதாயம் கடைபிடிக்குமா....

உங்கள் பிளாக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் திறமைகள்/உணர்வுகள் மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.

Blog Widget by LinkWithin