Sunday, April 25, 2010

150வது பதிவு: இனிப்புச் சுவையில் நோயெதிர்ப்பு மாத்திரைகள்

இது எனது 150வது பதிவாகும். .......................


ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 25ம் திகதி உலக மலேரியா விழிப்புணர்வு தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. உலக மலேரியா விழிப்புணர்வு தினமானது, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்சினுடைய எண்ணக்கருக்கிணங்க 2007ம் ஆண்டு முதல் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


  • மலேரியா நோயின் காரணமாக ஆபிரிக்க கண்டத்திலுள்ள நாடுகள் பெருமளவில்பாதிக்கப்பட்டுள்ளன.
  • மலேரியா நோயின் காரணமாக வருடாந்தம் 1மில்லியனுக்கும் அதிகமானமக்கள் பலியாகின்றனர். இதில் அதிகளவான குழந்தைகள் உப சகாராபிராந்தியத்தினைச் சேர்ந்தவர்களாவர்.
  • மலேரியா நோயின் காரணமாக மரணிக்கின்றவர்களில் 90%க்கும்அதிகமானவர்கள் ஆபிரிக்காவின் உப சகாரா பிராந்தியத்தினைச்சேர்ந்தவர்களாவர்.
  • ஆபிரிக்காவில், மலேரியா நோயின் காரணமாக ஏற்படுகின்ற பொருளாதாரஇழப்புக்கள் வருடாந்தம் 12பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாகும்.

உலகில் மலேரியா நோயின் 30செக்கன்களுக்கொரு குழந்தை பலியாகின்றது என்பதனைக் கொண்டு மலேரியா நோயின் பாதிப்பினை உணர்ந்துகொள்ள முடிகின்றது. அந்தவகையில் நுளம்பினால் பரவுகின்ற தடுக்கக்கூடியதும், குணப்படுத்தக்கூடியதுமான மலேரியா நோயினை உலகிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கு அரசாங்கங்கள் வினைத்திறனான நடவடிக்கைகளினை எடுப்பது அவசியமாகும்.

%%%>>>%%%%>>>>%%%%%>>>>>%%%%%%


இனிப்புச் சுவையில் மலேரியா நோயெதிர்ப்பு மாத்திரைகள்

மலேரியா நோயின் பாதிப்பிலிருந்து விடுதலை பெறுவதற்காக தற்சமயம் செரி பழ சுவையுடனான மலேரியா நோயெதிர்ப்பு மாத்திரைகள் வடிவமைத்து வழங்குவது அதிக வினைத்திறனானது என தன்சானியாவின் இபகரா சுகாதார அமைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மலேரியா நோயின் பாதிப்பினை எதிர் நோக்கியுள்ள குழந்தைகளுக்கு விசேட பாதுகாப்பினை வழங்கமுடியும் என தெரிவிக்கப்படுகின்றது. ஏனெனில் இது வக்சீன்களைக் காட்டிலும் இலகுவானதாகவும், வினைத்திறனாக இருப்பதனாலுமாகும் என சுகாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

***

2 comments:

ஸ்ரீ.... said...

லோகநாதன்,

150 ஆவது இடுகைக்கு வாழ்த்துக்கள். இன்னும் நிறைய வெற்றிகளை நோக்கிப் பயணியுங்கள்.

ஸ்ரீ....

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நண்பரே உங்கள் வாழ்த்துரைக்கு மிக்க நன்றிகள் ...

Blog Widget by LinkWithin