Friday, March 12, 2010

புராதன தொழில்நுட்ப இயந்திரம் கண்டுபிடிப்பு




பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கும் என நம்பப்படுகின்ற அசாதாரண தொழில்நுட்ப இயந்திரமொன்றினை அன்டிகைதேரா தீவினை அண்மித்த கடலின் அடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. இந்த கண்டுபிடிப்பானது அனைத்துலக சமூகத்தினையும், புராதன உலகின் தொழில்நுட்பமானது ஆச்சரியப்படுத்துவதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டுபிடிக்கப்பட்ட இந்த தொழில்நுட்ப இயந்திரமானது கி.மு 2 ம் நூற்றாண்டினை சேர்ந்ததாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளை இந்த இயந்திரமானது வானியல் செயற்பாட்டுடன் தொடர்புடையதாகவும், அத்துடன் இது சூரிய சுழற்சியின் அடிப்படையில் செயற்பட்ட ஒருகணனிஇயந்திரமாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இயந்திரம் மூலம் மாதம், நாள் மற்றும் மணிக் கணக்கினையும் அத்துடன் லீப் வருட கணக்கினையும் கணிப்பிட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இதன் மூலம் இராசி சக்கரத்துக்கு எதிராக சூரியன் , சந்திரன் ஆகியவற்றின் நிலைவிடங்களையும் குறிப்பிட்டுக் காட்டுவதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



இது புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி கிரகங்களின் வானியல் அமைவிடத்தினையும் காட்டுவதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இயந்திரமானது விஞ்ஞான செயற்பாடுகளுக்கு மேலதிகமாக சமூக தொழிற்பாடுகளுடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படுகின்றது. கிரேக்க தேசத்தில் ஒவ்வொரு 2 அல்லது 4 வருடங்களுக்கு ஒரு தடவை பிரதான மெய்வல்லுநர் விளையாட்டுக்கள்[ஒலிம்பிக் போன்றவை] நடைபெற்றன. இது போன்ற முக்கியமான நிகழ்வுகளுக்கான திகதிகளை இவை காட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.


***

2 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

அட!

வியப்பாக இருக்கிறதே!!

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

முனைவர் அவர்களே நன்றிகள் ......

Blog Widget by LinkWithin