Tuesday, March 9, 2010

தெரிந்த ஒஸ்காரில் தெரியாதவை.......

*உலகளவில் சினிமாத் துறையில் பிரசித்தி பெற்றவர்களுக்கு வழங்கப்படுகின்ற உன்னதமான விருதாக ஒஸ்கார் விருது வழங்கப்படுகின்றது. 1929ம் ஆண்டிலிருந்து 1939ம் ஆண்டுவரை வழங்கப்பட்ட விருதானது அக்கடமி விருதுகள் [Academy Awards] என்றே அழைக்கப்பட்டது. பின்னரே இது ஒஸ்கார்[ Oscar] விருதாக மாற்றம் பெற்றது.

*1வது அக்கடமி விருது வழங்கும் நிகழ்வானது The Blossom Room of The Hollywood Roosevelt Hotel - Los Angels இல் 1929ம் ஆண்டு நடைபெற்றது.

*1934ம் ஆண்டு நடைபெற்ற 6வது அக்கடமி விருது வழங்கும் நிகழ்வில் மிகச் சிறந்த நடிகருக்கான 1வது விருதினை கத்தரின் ஹெப்வேர்ன் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

*ஒஸ்கார் நிகழ்வின் போது வழங்கப்படும் விருதின் நிறையானது 7 பவுண்ட்ஸ்கள் [3.1752kg] ஆகும்.



*அதிகளவு ஒஸ்கார் விருதுகளை பெற்ற திரைப்படங்களாக - The Lord of The Rings : The Return of The King ,Titanic, Ben Hur விளங்குகின்றது. இவை மொத்தமாக 11 விருதுகளை அள்ளிக் குவித்தமை குறிப்பிடத்தக்கது.

*கிகி, தி லொஸ்ட் எம்பர் ஆகிய திரைப்படங்கள் 9 ஒஸ்கார் விருதுகளை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

*முதன்முதலாக முழு உருவ ஒஸ்கார் சிலையினைப் பெற்றவராக வால்ட் டிஸ்னி விளங்குகின்றார். 1942ம் ஆண்டு நடைபெற்ற ஒஸ்கார் விருது வழங்கும் நிகழ்வின் போது வால்ட் டிஸ்னி முழு உருவ ஒஸ்கார் சிலையினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

*1931ம் ஆண்டு நடைபெற்ற ஒஸ்கார் விருது வழங்கும் நிகழ்வின் போது சம நிலையில் முடிந்த மிகச் சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருதினைப் பெற்றவர்கள் வாலஸ் பெர்ரி மற்றும் பிரெட்ரிக் மார்க் ஆகியோராவர்.

*தொடர்ந்து இரு வருடங்கள் சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருது பெற்ற நடிகராக, 1993ல் பிலடெல்பியா & 1994ல் பாரஸ்ட் காம்ப் ஆகிய திரைப்படங்களில் நடித்த டாம் ஹேங்ஸ் விளங்குகின்றார்.

*மூன்று முறை ஒஸ்கார் விருது பெற்ற நடிகராக ஜாக்கிஸ் ஒய்ஸ் கோல்டியூ விளங்குகின்றார். இவர் 1956,1959, 1964ம் ஆண்டுகளில் ஒஸ்கார் விருதினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

*குறைந்த வயதில் ஒஸ்கார் விருது பெற்றவராக நடிகை ஹெர்லி டெம்பிள் விளங்குகின்றார். இவர் 6 வயதில் ஒஸ்கார் விருதினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

*ஒஸ்கார் விருது பெற்ற முதலாவது வர்ணத்திரைப்படம்- Gone With The Wind

*ஒஸ்கார் விருதுக்கு அனுப்பப்பட்ட முதல் இந்திய திரைப்படமாக தெய்வமகன் விளங்குகின்றது. [1969ல் - சிவாஜி நடித்தது]

*ஒஸ்கார் விருது பெற்ற மனிதரல்லாத முதல் கதாபாத்திரம் [கார்ட்டூன்] மிக்கி மவுஸ் ஆகும்.



*இரண்டாம் உலக மகாயுத்தத்தின் போது நடைபெற்ற ஒஸ்கார் விருது வழங்கும் நிகழ்வுகளின் போது வெற்றி பெற்றவர்களுக்கு பிளாஸ்டிக்கிலான ஒஸ்கார் சிலைகளே வழங்கப்பட்டன. காரணம் உலக மகாயுத்தத்தின் போது உலோகங்களுக்கு நிலவிய அருமைத் தன்மையே காரணமாகும்.

*ஒஸ்கார் விருது பெற்ற முதல் பெண் இயக்குனராக Kathryn Bingelow விளங்குகின்றார். 2010ம் ஆண்டு நடைபெற்ற 82வது ஒஸ்கார் நிகழ்வின் போது தான் இயக்கிய The Hurt Locker திரைப்படத்துக்காக விருது பெற்றார்.



*ஒஸ்கார் விருது பெற்ற முதல் தமிழராகவும் , முதல் இந்திய இசையமைப்பாளராகவும் .ஆர்.ரஹ்மான் விளங்குகின்றார்.




***

4 comments:

DREAMER said...

அருமையான தகவல்கள், பகிர்வுக்கு நன்றி...

-
DREAMER

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நண்பரே நன்றிகள் ........

தங்க முகுந்தன் said...

ஒஸ்கார் விருதைப் பற்றி எழுதியவுடனேயே இவ்வார நட்சத்திரப் பதிவரானமை மகிழ்ச்சி தருகிறது. வாழ்த்துக்கள்!

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நண்பரே உங்கள் கருத்துரைக்கு அன்பின் நன்றிகள் ........

Blog Widget by LinkWithin