Friday, February 5, 2010

ரொஜர் பெடரரின் தொடரும் கிராண்ட்ஸ்லாம் வேட்டை




சுவிற்சர்லாந்து நாட்டினைச் சேர்ந்த டென்னிஸ் நட்சத்திரம் ரொஜர் பெடரர் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களினையும் வெற்றி கொண்ட வீரராக தற்சமயம் மிளிர்கின்றார். இவர் அமெரிக்காவின் பீற் சாம்ராஸ்சின் 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களினை முந்தி சாதனை படைத்துள்ளார். அத்துடன் எல்லா கிராண்ட்ஸ்லாம் பட்டங்களினையும் வெற்றிகொண்ட 6வது வீரராகவும் பெடரர் விளங்குகின்றார். ஆனால் பீற் சாம்ராஸ் பிரெஞ்சு ஓபன் பட்டத்தினை வெற்றிகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். ரொஜர் பெடரரின் இந்த கிராண்ட்ஸ்லாம் வெற்றிகளானது நீண்ட காலத்துக்கு டென்னிஸ் விளையாட்டில் நிலைத்துநிற்கும் என்றால் மிகையல்ல எனலாம்.



ரொஜர் பெடரர் வெற்றி கொண்ட கிராண்ட்ஸ்லாம் பட்டங்களினுடைய விபரம் வருமாறு...........

1) 2003 விம்பிள்டன்
அவுஸ்ரேலியாவின் மார்க் பிலிப்போசிஸ் என்ற வீரரை 7-6 (7/5), 6-2, 7-6 (7/3) என்ற செட்களில் தோற்கடித்து தனது முதல் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தினை தனது 21 வயதில் பெற்றுக் கொண்டார்.

2) 2004 அவுஸ்ரேலியன் ஓபன்
ரஷ்யாவின் மராட் சபின் என்ற வீரரை 7-6 (7/3), 6-4, 6-2 என்ற செட்களில் தோற்கடித்து அவுஸ்ரேலியன் ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தினை பெற்றுக் கொண்டார்.

பெடரர், முதல் நிலை வீரர் ஜுவன் கார்லோஸ் பெராரோவினை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியமை குறிப்பிடத்தக்கதாகும்.

2004 அவுஸ்ரேலியன் ஓபன் தொடரில் அமெரிக்காவின் அன்ரு அகாசி மற்றும் அன்டி ரொடிக் ஆகியோரையும் பெடரர் வீழ்த்தினார்.

3) 2004 விம்பிள்டன்
அமெரிக்காவின் அன்டி ரொடிக் என்ற வீரரை 4-6, 7-5, 7-6 (7/3), 6-4 என்ற செட்களில் தோற்கடித்து விம்பிள்டன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தினை பெற்றுக் கொண்டார்.

4) 2004 அமெரிக்க ஓபன்
ஆஸியின் லெய்டன் ஹெவிற் என்ற வீரரை 6-0, 7-6 (7/3), 6-0 என்ற செட்களில் தோற்கடித்து அமெரிக்க ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தினை பெற்றுக் கொண்டார்.

ஹெவிற் 2001ம் ஆண்டின் சாம்பியனாவார், அத்துடன் 16 போட்டிகளினை தொடர்ச்சியாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

வரலாற்றில் முதல்தடவையாக தனது முதல் நான்கு கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டிகளில் வெற்றி பெற்று பெடரர் சாதனை படைத்தார். 1988ம் ஆண்டில் மட்ஸ் விலண்டர், ஒரே ஆண்டில் 3 இறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


5) 2005 விம்பிள்டன்
அமெரிக்காவின் அண்டி ரொடிக் என்ற வீரரை 6-2, 7-6 (7/2), 6-4 என்ற செட்களில் தோற்கடித்து விம்பிள்டன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தினை பெற்றுக் கொண்டார்.

தொடர்ச்சியாக 3 விம்பிள்டன் பட்டங்களை வென்ற வீரராக பீற் சாம்ராஸ் மற்றும் ப்ஜோர்ன் போர்க் ஆகிய வீரர்களுடன் பெடரர் தனது பெயரினை டென்னிஸ் சாதனை ஏடுகளில் பதிந்து கொண்டார்.


6) 2005 அமெரிக்க ஓபன்
அமெரிக்காவின் அன்று அகாசி என்ற வீரரை 6-3, 2-6, 7-6 (7/1), 6-1 என்ற செட்களில் தோற்கடித்து அமெரிக்க ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தினை பெற்றுக் கொண்டார்.

35 வயது வீரரான அமெரிக்காவின் அன்று அகாசி வயதான வீரராக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தினை வீரர் என்ற சாதனையை பெடரரின் வெற்றியால் அடையமுடியாமல் போய்விட்டது. 1974ல் கென் ரோஸ்வல் தனது 39வது வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தினை வெற்றிகொண்டமை சாதனையாக உள்ளது.


7) 2006 அவுஸ்ரேலிய ஓபன்
சைப்பிரஸ்சின் மார்க்கோஸ் பக்ஹ்டாரிஸ் என்ற வீரரை 6-3, 2-6, 7-6 (7/1), 6-1 என்ற செட்களில் தோற்கடித்து அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தினை பெற்றுக் கொண்டார்.

8) 2006 விம்பிள்டன்
ஸ்பெய்னின் ரபெல் நடால் என்ற வீரரை 6-0, 7-6 (7/5), 6-7 (2/7), 6-3 என்ற செட்களில் தோற்கடித்து விம்பிள்டன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தினை பெற்றுக் கொண்டார்.

தொடர்ச்சியாக 4 விம்பிள்டன் பட்டங்களை வென்ற வீரராக பீற் சாம்ராஸ் மற்றும் ப்ஜோர்ன் போர்க் ஆகிய வீரர்களுடன் பெடரர் தனது பெயரினை டென்னிஸ் சாதனை ஏடுகளில் பதிந்துகொண்டார்.


9) 2006 அமெரிக்க ஓபன்
அமெரிக்காவின் அண்டி ரொடிக் என்ற வீரரை 6-2, 4-6, 7-5, 6-1 என்ற செட்களில் தோற்கடித்து அமெரிக்க ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தினை பெற்றுக் கொண்டார்.

விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் பட்டங்களை ஒருவருடத்தில் தொடர்ச்சியாக மூன்று தடவைகள் வென்ற ஒரே வீரராக பெடரர் சாதனை படைத்தார்.

10) 2007 அவுஸ்ரேலிய ஓபன்
சிலியின் பெனாண்டோ கொன்சாலிஸினை என்ற வீரரை 7-6 (7/2), 6-4, 6-4 என்ற செட்களில் தோற்கடித்து அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தினை பெற்றுக் கொண்டார்.


11) 2007 விம்பிள்டன்
ஸ்பெய்னின் ரபெல் நடால் என்ற வீரரை 7-6 (9/7), 4-6, 7-6 (7/3), 2-6, 6-2 என்ற செட்களில் தோற்கடித்து விம்பிள்டன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தினை பெற்றுக் கொண்டார்.

தொடர்ச்சியாக 5 தடவைகள் விம்பிள்டன் பட்டத்தினை வென்று போர்க்கின் சாதனையை பெடரர் முறியடித்தார்.


12) 2007 அமெரிக்க ஓபன்
சேர்பியாவின் நோவாக் டியோங்கோவிக்கினை 7-6 (7/4), 7-6 (7/2), 6-4 என்ற செட்களில் தோற்கடித்து அமெரிக்க ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தினை பெற்றுக் கொண்டார்.

விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தினை பெற்று தொடர்ச்சியாக 4 ஆண்டுகள் பெற்ற முதல் வீரராக பெடரர் சாதனை படைத்தார். பில் ரில்டென் 1923ம் ஆண்டிலிருந்து 4 தடவைகள் தொடர்ச்சியாக சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

13) 2008 அமெரிக்க ஓபன்
பெரிய பிரித்தானியாவின் அன்டி முர்ரேயினை 6-2, 7-5, 6-2 என்ற செட்களில் தோற்கடித்து அமெரிக்க ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தினை பெற்றுக் கொண்டார்.

5வது தொடர்ச்சியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தினை பெற்று பெடரர் சாதனை படைத்தார்.

மேலும் ரொய் எமர்சனினை (12) ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தினால் முந்தினார்.

14) 2009 பிரெஞ்சு ஓபன்
சுவிற்சர்லாந்து நாட்டின் ரொபின் சோடார்லிங்கினை 6-1, 7-6 (7/1), 6-4 என்ற செட்களில் தோற்கடித்து பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தினை முதல்தடவையாக பெற்றுக் கொண்டார்.

மூன்று பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டிகளின் தோல்வியின் பின் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தினை முதல்தடவையாக பெற்றுக் கொண்டார்.

அதிகூடிய கிராண்ட்ஸ்லாம் பட்டத்தினை பெற்றுக்கொண்ட பீற் சாம்ராஸ்சின் சாதனையினை பெடரர் சமப்படுத்திக் கொண்டார். பீற் சாம்ராஸ் 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெற்றிகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


15) 2009 விம்பிள்டன்
அமெரிக்காவின் அன்டி ரொடிக்கினை 5-7, 7-6 (8/6), 7-6 (7/5), 3-6, 16-14 என்ற செட்களில் தோற்கடித்து விம்பிள்டன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தினை பெற்றுக் கொண்டார்.

அதிக நேரம் நீடித்து சாதனை படைத்த ஆடவர் விம்பிள்டன் இறுதிப்போட்டியில் அபாரமாக வெற்றி பெற்று அதிகூடிய கிராண்ட்ஸ்லாம் பட்டத்தினை(15) பெற்றவராக பெடரர் சாதனை படைத்தார்.


16) 2010 அவுஸ்ரேலிய ஓபன்
பிரித்தானியாவின் அன்டி முர்ரேயினை 6-3,6-4,7-6 என்ற செட்களில் தோற்கடித்து அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தினை பெற்றுக் கொண்டார்.





ரொஜர் பெடரரினைப் பற்றிய சிறப்பு பதிவொன்று மிகவிரைவில்..............



***

No comments:

Blog Widget by LinkWithin