Wednesday, February 24, 2010

கிரிக்கெட்டில் நிலைத்து நிற்கும் பிரட்மன் நாமம்


பெப்ரவரி 25ம் திகதியுடன் பிரட்மன் மறைந்து 9 ஆண்டுகள் நிறைவடைகின்றது. கிரிக்கெட் என்றவுடன் பிரட்மன் என்கின்ற நாமம் கூடவே வருவது குறிப்பிடத்தக்கதாகும்.


டொன் பிரட்மன் என அழைக்கப்படுகின்ற டொனால்ட் ஜோர்ஜ் பிரட்மன், அவுஸ்ரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் நகரில் 1908ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் திகதி பிறந்தார். பிரட்மன் 1927/28 - 1933/34ம் ஆண்டு வரை நியூசவுத்வேல்ஸ் அணிக்காகவும், 1935/36 - 1948/49 ம் ஆண்டு வரை தென் அவுஸ்ரேலிய அணிக்காகவும் தனது முதற்தரப் போட்டிகளில் விளையாடினார்.

தனது 19வது வயதில் பிரட்மன், 1927/28 பருவகாலத்தில் தனது அறிமுக முதற்தர டெஸ்ட் போட்டியிலேயே நியூசவுத்வேல்ஸ் அணிக்காக, தென் அவுஸ்ரேலிய அணிக்கெதிராக சதம் (118 -அடிலேய்ட் ஓவல்) பெற்றார்.

1928ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிராக பிரிஸ்பேனில் நடைபெற்ற டெஸ்ட்டில் தனது அறிமுகத்தினை மேற்கொண்டார். அதில் பிரட்மன் 18 & 1 ஓட்டத்தினையே பெற்றுக்கொண்டார்.



1948ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிராக ஓவலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியே பிரட்மனின் இறுதிப் போட்டியாகும். அந்தப் போட்டியில் பிரட்மன் தான் எதிர்கொண்ட 2வது பந்தில் எரிக் கொலிய்ஸ்சின் பந்துவீச்சில் விக்கட் முனைகள் தகர்க்கப்பட ஓட்டமெதுவும் பெறாமல் பூச்சியத்துக்கு ஆட்டமிழக்க அவர் தனது கிரிக்கெட் வாழ்வினை 99.94 என்ற துடுப்பாட்ட சராசரியுடன் நிறைவு செய்தார். அந்தப் போட்டியில் 4 ஓட்டங்களைப் பெற்றிருந்தால் பிரட்மனின் துடுப்பாட்ட சராசரி 100 ஆக மாற்றமடைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.




பிரட்மன் 52 டெஸ்ட் போட்டிகளில் 80 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடி 99.94 என்ற சராசரியில் 6996 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். தான் பங்கேற்ற போட்டிகளில் பிரட்மன் 10 இன்னிங்ஸ்களில் ஆட்டமிழக்கவில்லை. பிரட்மனின் ஓட்டங்களில் 29 சதங்களும் 13 அரைச்சதங்களும் அடங்கும். டெஸ்ட்டில், பிரட்மனின் அதிகபட்ச ஓட்டமானது 334 ஆகும். [ இங்கிலாந்து அணிக்கெதிராக , லீட்ஸ், 1930]

பிரட்மன் பந்துவீச்சில் 36.00 என்ற சராசரியில் 2 விக்கட்களை வீழ்த்தியுள்ளார். மேலும் டெஸ்டில் 32பிடிகளை எடுத்துள்ளார்.

பிரட்மன் கிரிக்கெட்டில் செய்த சேவைகளுக்காக 1949ம் ஆண்டு பிரித்தானிய அரசாங்கம்சேர்பட்டம் வழங்கி கெளரவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த 20ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த வீரராக பிரட்மனை விஸ்டன் சஞ்சிகையானது[2000ம் ஆண்டு] தெரிவு செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.



2001ம் ஆண்டு பெப்ரவரி 25ம் திகதி சேர் டொன் பிரட்மன் தனது 92வது வயதில் காலமானார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் டொன் பிரட்மன் நிகழ்த்திய சாதனைகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக துடுப்பாட்ட சராசரியினை (99.94) கொண்ட வீரர் பிரட்மன். [ ஆகக்குறைந்தது 20 இன்னிங்ஸ்கள் ]

பிரட்மன் தான் விளையாடிய 13 பருவகாலங்களில் 7 பருவ காலங்களில் அவரின் துடுப்பாட்ட சராசரி 100க்கும் அதிகமாகும்.

பிரட்மன் தான் விளையாடிய 80 இன்னங்ஸ்களில் 29 சதங்களினை பூர்த்தி செய்து, இன்னிங்ஸ்க்கு அதிக சதம் பெற்ற சராசரியினை (36.25 %) தன்வசம் கொண்டுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000[22இன்னிங்ஸ்கள்], 3000[33இன்னிங்ஸ்கள்], 4000[48இன்னிங்ஸ்கள்], 5000[56இன்னிங்ஸ்கள்], 6000[68இன்னிங்ஸ்கள்] டெஸ்ட் ஓட்டங்களை வேகமாக பெற்றுக் கொண்டவர் பிரட்மன்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் எதிரணிக்கெதிராக அதிக ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட வீரர் பிரட்மன் தான். பிரட்மன் இங்கிலாந்துக்கெதிராக 37 டெஸ்ட்களில் 63 இன்னிங்ஸ்களில் விளையாடி 5028 ஓட்டங்களை 89.78 என்ற சராசரியில் பெற்றுக்கொண்டார்.

டெஸ்ட் போட்டியொன்றில் ஒரே நாளில் அதிக டெஸ்ட் ஓட்டங்களைப் பெற்றவர் பிரட்மன் தான். இங்கிலாந்து அணிக்கெதிராக, லீட்ஸ்சில் 309 ஓட்டங்களை ஒரே நாளில் பெற்றார். (1930) அத்துடன் ஒரே நாளில் 300 ஓட்டங்களைப் பெற்ற ஒரே கிரிக்கெட் வீரர் என்ற சாதனை பிரட்மன் வசமே உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக இரட்டைச்சதம் பெற்றவர் பிரட்மன் தான். அவர் 12 இரட்டைச்சதங்களை பெற்றுள்ளார்.

இரண்டு முச்சதங்களை பெற்ற முதல் வீரர் பிரட்மன் தான். [334 & 304] தற்சமயம் சேவாக்கும், லாராவும் இரண்டு முச்சதங்களினைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு ஓட்டத்தினால் முச்சதத்தினை தவறவிட்ட முதல் வீரர் பிரட்மன் தான். (299* v தென்னாபிரிக்கா)

ஒரு தொடரில் 3 தடவைகள் 4 சதங்களினைப் பிரட்மன் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ( 1930 v இங்கிலாந்து, 1931-32 v தென்னாபிரிக்கா, & 1947-48 v இந்தியா).

டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 6 சதங்களினைப் பெற்ற ஒரே வீரர் பிரட்மன் தான். [1936/37இல் இறுதி 3 டெஸ்ட்களிலும், 1938ல் முதல் 3 டெஸ்ட்களிலும் ]

ஒரு தொடரில் அதிக இரட்டைச்சதங்களினைப் பெற்ற ஒரே வீரர் பிரட்மன் தான். 1930ல் இங்கிலாந்து அணிக்கெதிராக 3 இரட்டைச்சதங்களினைப் பெற்றார்.

 5ம் இலக்க துடுப்பாட்ட வீரராக துடுப்பெடுத்தாடி அதிக ஓட்டங்களினைப் பெற்றவரும் (304 v இங்கிலாந்து, 1934, லீட்ஸ்) , அத்துடன் 7ம் இலக்க துடுப்பாட்ட வீரராக துடுப்பெடுத்தாடி அதிக ஓட்டங்களினைப் பெற்றவர் (270 இங்கிலாந்து, 1936/37, மெல்பேர்ன்) என்ற சாதனைக்குரியவரும் பிரட்மன் தான்.

 5 டெஸ்ட் போட்டிகளைக் (7 இன்னிங்ஸ்) கொண்ட டெஸ்ட் தொடரில் அதிக ஓட்டங்களினைப் பெற்றவரும் பிரட்மன் தான். (947 ஓட்டங்கள் v இங்கிலாந்து, 1930)

 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் அதிக துடுப்பாட்ட சராசரியினைக் பெற்றவரும் பிரட்மன் தான். (201.50 v தென்னாபிரிக்கா, 1931/32)

அவுஸ்ரேலிய அணி சார்பாக முதற்தர டெஸ்ட் போட்டி ஒன்றில் இன்னிங்ஸ்சில் அதிக ஓட்டம் பெற்றவரும் பிரட்மன் அவர்களேதான்.(452 *, நியூசவுத்வேல்ஸ் v குயின்ஸ்லாந்து, சிட்னி 1929/30)

பிரட்மன் 3ம் இலக்க துடுப்பாட்ட வீரராக துடுப்பெடுத்தாடிய போது அவரின் துடுப்பாட்ட சராசரி 103.63.

அவுஸ்ரேலிய வீரர்களில், தென்னாபிரிக்காவுக்கெதிராக ஒரு இன்னிங்ஸில் அதிக ஓட்டங்களினைப் பெற்றவரும் பிரட்மன் அவர்களேதான். (299 *,அடிலெய்ட் ஓவல், 1932).

 5வது விக்கட்டுக்கான டெஸ்ட் இணைப்பாட்ட சாதனையானது பிரட்மன் மற்றும் S G.வார்னெஸ் ஆகியோரால் படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். (405 ஓட்டங்கள் v இங்கிலாந்து-சிட்னி 1946/47)

 6வது விக்கட்டுக்கான டெஸ்ட் இணைப்பாட்ட சாதனையானது பிரட்மன்,ஜே.பிக்லடன் ஆகியோரால் படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும் ( 346 ஓட்டங்கள், v இங்கிலாந்து -1936/37) ஆனால் இந்தச் சாதனையை மஹேல ஜயவர்த்தன, பிரசன்ன ஜயவர்த்தன ஜோடி 6வது விக்கட்டுக்காக 351 ஓட்டங்களை இந்தியாவுக்கெதிராக இணைப்பாட்டமாக பெற்று 72 வருட உலகசாதனை முறியடித்தமை குறிப்பிடத்தக்கதாகும். [அஹமதாபாத், நவம்பர்16-20,2009 ]

உலக சாதனை இணைப்புகளுக்கு மேலதிகமாக அவுஸ்ரேலிய அணியின் சார்பில் நிகழ்த்தப்பட்ட 2 அவுஸ்ரேலிய இணைப்பாட்ட சாதனையில் பிரட்மன் பங்குபெறுகின்றார்.

 451 ஓட்டங்கள், 2வது விக்கட் இணைப்பாட்டம் - பிரட்மன் & W H பொன்ஸ்ஃபொர்ட் v இங்கிலாந்து, ஓவல்-1934
 388 ஓட்டங்கள், 4வது விக்கட் இணைப்பாட்டம் - பிரட்மன் & W H பொன்ஸ்ஃபொர்ட் v இங்கிலாந்து, ஹெடிலிங் -௧௯௩௪

பிரட்மன் அவுஸ்ரேலிய அணிக்காக 24 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கி 15 டெஸ்ட்டில் வெற்றி பெற்றதுடன், 6 டெஸ்ட்களினை வெற்றி தோல்வியின்றி நிறைவு செய்ததுடன் 3 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே தோல்வியடைந்தார். இவரின் வெற்றி சதவீதம் 62.5%.

டெஸ்ட்டில் ஒரு குறிப்பிட்ட வேளைகளில் அதிக சதம்(6) பெற்றவர் பிரட்மன் தான். [ மதிய போசண இடைவேளைக்கு முன்னர்- 1 சதம், மதிய போசண இடைவேளைக்கு பின்னர்- 2 சதம், தேநீர் இடைவேளைக்கு பின்னர்- 3 சதம்]

பிரட்மனின் துடுப்பாட்ட சராசரி 5 மைதானங்களில் 100க்கும் அதிகமாகும்.

 4 மைதானங்களில், இன்னிங்ஸ் ஒன்றில் அதிக ஓட்டங்களினைப் பெற்று பிரட்மன் சாதனை படைத்துள்ளார்.


கிரிக்கெட் முதற்தரப் போட்டிகளில் அதிக மொத்த ஓட்டங்களைப் [28067] பெற்ற வீரராகவும் பிரட்மன் விளங்கினார். அண்மையில் இச்சாதனையானது அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் வீரர் லேங்கரினால் முறியடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.







சேர் டொன் பிரட்மனின் துடுப்பாட்ட புள்ளிவிபரங்கள்

இங்கிலாந்து அணிக்கெதிராக
டெஸ்ட் போட்டிகள் - 37
இன்னிங்ஸ்- 63
ஆட்டமிழக்காதது-7
அரைச் சதம்-12
சதம்-19
அதிகூடிய ஓட்டம்-334
மொத்த ஓட்டங்கள்-5028
சராசரி-89.79
பிடிகள்-20

இந்திய அணிக்கெதிராக
டெஸ்ட் போட்டிகள் - 5
இன்னிங்ஸ்- 6
ஆட்டமிழக்காதது-2
அரைச் சதம்-1
சதம்-4
அதிகூடிய ஓட்டம்-201
மொத்த ஓட்டங்கள்-715
சராசரி-178.75
பிடிகள்-6

தென்னாபிரிக்கா அணிக்கெதிராக
டெஸ்ட் போட்டிகள் - 5
இன்னிங்ஸ்- 5
ஆட்டமிழக்காதது-1
அரைச் சதம்-0
சதம்-4
அதிகூடிய ஓட்டம்-299*
மொத்த ஓட்டங்கள்-806
சராசரி-201.50
பிடிகள்-2



மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக
டெஸ்ட் போட்டிகள் - 5
இன்னிங்ஸ்- 6
ஆட்டமிழக்காதது-0
அரைச் சதம்-0
சதம்-2
அதிகூடிய ஓட்டம்-223
மொத்த ஓட்டங்கள்-447
சராசரி-74.50
பிடிகள்-4


எல்லா அணிக்கெதிராகவும்
டெஸ்ட் போட்டிகள் - 52
இன்னிங்ஸ்- 80
ஆட்டமிழக்காதது-10
அரைச் சதம்-13
சதம்-29
அதிகூடிய ஓட்டம்-334
மொத்த ஓட்டங்கள்-6996
சராசரி-99.94
பிடிகள்-32


முதற்தரப் போட்டிகள்
டெஸ்ட் போட்டிகள் - 234
இன்னிங்ஸ்- 338
ஆட்டமிழக்காதது-43
சதம்-117
அதிகூடிய ஓட்டம்-452*
மொத்த ஓட்டங்கள்-28067
சராசரி-95.14


***

Monday, February 22, 2010

இரு இன்னிங்ஸ்களிலும் சதம் ஆனால் அணி தோல்வி

அண்மையில் நடைபெற்று முடிந்த இந்தியா-தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரானது 1-1 என சமநிலையில் நிறைவடைந்தமை நீங்கள் அறிந்ததே.

அந்த தொடரில், 2வது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணியின் ஹாசிம் அம்லா இரு இன்னிங்ஸ்களிலும் சதம் பெற்றும் தமது அணியின் தோல்வியினை தடுக்க முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கதாகும்.

அந்தவகையில்,டெஸ்ட் போட்டியொன்றின் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் பெற்றும் தமது அணியினை தோல்வியிலிருந்து காப்பாற்ற முடியாமல் போன கிரிக்கெட் வீரர்கள் வருமாறு................


1) ஹேர்பெர்ட் சுட்கிளிவ் (176 & 127) - இங்கிலாந்து எதிர் அவுஸ்ரேலியா , மெல்பேர்ன் , 1924/25




2) ஜோர்ஜ் ஹெட்லி ( 106 & 107) - மே.தீவுகள் எதிர் இங்கிலாந்து, லோர்ட்ஸ், 1939

3) விஜய் ஹசரே ( 116 & 148) - இந்தியா எதிர் அவுஸ்ரேலியா , அடிலெய்ட் , 1947/48

4) கிளைட் வல்கொட் ( 115 & 110) - மே.தீவுகள் எதிர் அவுஸ்ரேலியா ,கிங்ஸ்டன், 1954/55

5) சுனில் கவாஸ்கர் ( 111 & 137)- இந்தியா எதிர் பாகிஸ்தான், கராச்சி, 1978/79

6) அன்டி பிளவர் (142 & 199*) - சிம்பாப்வே எதிர் தென்னாபிரிக்கா, ஹராரே, 2001/02

7) பிரைன் லாரா (221 & 130) - மே.தீவுகள் எதிர் இலங்கை, கொழும்பு, 2001/0௨

தோல்வி அடைந்த டெஸ்ட் போட்டியொன்றில் அதிகூடிய மொத்த ஓட்டங்களைப்(351) பெற்றுக்கொண்ட வீரர் லாரா தான். முன்னர் இந்த சாதனை அன்டி பிளவர் வசமிருந்தமை(341) குறிப்பிடத்தக்கதாகும்.




8) அன்ரூ ஸ்ட்ரூஸ் ( 123 & 108)- இங்கிலாந்து எதிர் இந்தியா, சென்னை, 2008/09

9) ஹாசிம் அம்லா(114 & 123*)- தென்னாபிரிக்கா எதிர் இந்தியா, கொல்கத்தா, 2010




***

Saturday, February 20, 2010

அசலா இல்லை நகலா .........

வித்தியாசமான , சுவாரசியமான புகைப்படங்கள் சில இதோ .........









***

Wednesday, February 17, 2010

உலகவெப்பமயமாதலும் ஆறுகளுக்கான பாதிப்புகளும்




உலகவெப்பமயமாதலின் காரணமாக உலகமானது பல்வேறுவகையான பாதிப்புக்களினை எதிர்நோக்கிக்கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இது தொடர்பில் மேலும் வாசிக்க இதனை பெரிதாக்கி வாசிக்கவும்.



( நன்றி - வீரகேசரி வாரவெளியீடு 25.01.2010)


உலகவெப்பமயமாதல் தொடர்பான என்னுடைய ஏனைய பதிவுகள்;


***


Blog Widget by LinkWithin