Tuesday, January 5, 2010

மாற்று எரிபொருளுக்கு உலகம் தயாராகிவிட்டதா ?




உலகில் அண்மைக்கால ஏற்பட்டுவருகின்ற உணவுத் தட்டுப்பாட்டுக்கு வளர்முக நாடுகள் விவசாய விளைபொருட்களினைப் பயன்படுத்தி தாவர எண்ணெய் உற்பத்தியினை மேற்கொண்டதும் ஒரு காரணமென பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வந்தமை குறிப்பிடத்தக்கது. ஆம், இந்தப் புதிய தாவர எண்ணெய் கண்டுபிடிப்பானது உலகினை புதியதொரு மாற்றத்துக்கு இட்டுச் செல்ல உதவுமா ?...................

அமெரிக்காவின் தோமஸ் ஜெபர்சன் பல்கலைக்கழகத்தின் , ஜெபர்சன் மருத்துவக் கல்லூரியின் உயிரியல் தொழில்நுட்ப பிரிவின் உதவி பேராசிரியர் Vyacheslav Andrianov மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம், ஏனைய விவசாய பயிர்களினை விடவும் புகையிலையின் மூலம் அதிக வினைத்திறனான தாவர எண்ணெய்யினை உருவாக்க முடியுமென கண்டறிந்துள்ளார்.

எவ்வாறாயினும், அதிகப்படியான எண்ணெய்யானது விதைகளிலேயே காணப்படுகின்றது. புகையிலை விதைகளானது, ஒவ்வொரு உலர் நிறையில் 40 சதவீதமான எண்ணெய்யினை சேர்த்துள்ளன.

ஆனாலும் விதைகள் மூலம் பெறப்பட்ட எண்ணெய்யானது , டீசல் இயந்திரங்களுக்கான எண்ணெய்யாக பயன்படுத்தி சோதிக்கப்பட்டது. புகையிலை தாவரங்களானது சாதாரணமான அளவிலேயே விதைகளினை விளைச்சலாகப் தரக்கூடியது. அதாவது ஏக்கருக்கு 600 கிலோகிராம் அளவிலான விதைகளினை மட்டுமேயாகும்.

Dr. Andrianov மற்றும் அவரது குழுவினர் புகையிலை தாவரங்களிலிருந்து, அதாவது அவற்றின் இலைகள் எண்ணெய் வெளியிடுவதனை கண்டறிவதற்கான வழிகள் தொடர்பில் பிரஸ்தாபித்துள்ளனர்.


தாவர எண்ணெய் பெறுவதற்கு புகையிலையானது பொருத்தமானதாகும், ஏனெனில் இவை உணவுற்பத்திக்கு பயன்படுத்தப்படாதலாகும்.என்கின்றார் Dr. Andrianov.

புகையிலை தாவர இலைகள் அதிகமான எண்ணெய்யினைப் பெறுவதற்கான வழிவகைகளினை கண்டறிந்துள்ளோம். மேலும் சிறு எடுத்துக்காட்டாக, மாற்றம் செய்யப்பட்ட தாவரங்களிலிருந்து 20-போல்ட்க்கும் (20-fold )அதிகமான எண்ணெய்யினை இலைகளிருந்து பெறலாம். என்கின்றார் Dr. Andrianov.

வழமையில் புகையிலை தாவர இலைகளானது உலர் நிறையில் 1.7 % தொடக்கம் 4% வரை எண்ணெய்யினைக் கொண்டுள்ளது.

தாவரங்களானது Diacyglycerol Acytransferase (DGAT) ஜீன் அல்லது LEAFY COTYLEDON 2 (LEC2) ஜீனினை இயக்கத்துக்காக கொண்டுள்ளன.

DGAT ஜீன் மாற்றத்தினால், இலைகளின் உலர் நிறையில் 5.8 சதவீதமான எண்ணெயினைப் பெறலாம். இது சாதாரணமாக உற்பத்தி செய்யப்படுகின்ற எண்ணெய்யில் 2 போல்ட் (two-fold) ஆகும்.

LEC2 ஜீன் மாற்றத்தினால், இலைகளின் உலர் நிறையில் 6.8 சதவீதமான எண்ணெயினைப் பெறலாம்.

இந்த தரவுகளின் பிரகாரம் , புகையிலையானது பொருத்தமான , உறுதியானதொரு சக்தி தாவரம் ஆக பிரதி நிதித்துவப்படுத்தவதற்கான ஒரு அடித்தளமாக விளங்குகின்றது. மேலும் தாவர எண்ணெய் உற்பத்திக்கு ஒரு பிரதானமானதாகவும் புகையிலை விளங்கலாம் என்கின்றார் Dr. Andrianov.


மாற்று எரிபொருளுக்கு உலகம் தயாராகிவிட்டதா ? அப்படியாயின் உலகம் உங்கள் கரங்களில் மாற்றத்துக்காக ...............


***

1 comment:

hayyram said...

gud. continue

regards
www.hayyram.blogspot.com

Blog Widget by LinkWithin