Sunday, January 31, 2010

இமயமலை எவ்வாறு தோன்றியது?.......



140கோடி வருடங்களுக்கு முன்பாக தற்காலத்து இந்தியா கோண்டுவானா என்கின்ற ஒரு பெரிய கண்டத்தின் பாகமாக இருந்தது. பூமிக்கு உள்ளே இருக்கும் வெப்பத்தினால் கோண்டுவானா என்ற கண்டம் துண்டுதுண்டாக உடைந்து போனது. அந்தக் கண்டம் உடைந்து இன்றைக்கு இருக்கும் ஆபிரிக்கா, இந்தியா, அவுஸ்ரேலியா, அந்தார்ட்டிக்கா, மற்றும் தென் அமெரிக்காவானது. மற்ற எல்லா தேசங்களையும்விட இந்திய தட்டு ஒருவருடத்திற்கு 18 முதல் 20 சென்ரிமீற்றர் வேகத்தில் பிரயாணம் செய்தது. அவுஸ்ரேலியாவும், ஆபிரிக்காவும் வருடத்திற்கு 4 சென்ரிமீற்றர் என்ற வேகத்தில் பிரயாணம் செய்தன. அந்தார்ட்டிக்கா அசையவேயில்லை. 50கோடி வருடங்களுக்கு முன் இந்தியா அதிவேகமாக வந்து யூரேசியாவுடன் மோதியது. இம் மாபெரும் மோதலால் பூமி உடைந்தது. மறுபடியும் உயரும்படி செய்தது. இவ்வாறுதான் உலகத்தின் மிகப்பெரிய மலைத்தொடர்ச்சி உருவானதாம்.


***

Monday, January 25, 2010

சதாம் ஹுசைன், ஹிட்லர் இடையேயான ஒரு ஒற்றுமை

• இங்கிலாந்தினை ஆட்சி செய்த 1ம் ஜோர்ஜ் மன்னர், இவர் ஆங்கிலம் பேசமாட்டாராம். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஜேர்மனி நாட்டில் தானாம். 1714ம் ஆண்டு முதல் 1727ம் ஆண்டு வரை இங்கிலாந்தினை ஆட்சி செய்த இவர் ஆங்கிலத்தினை பேசுவதற்கு கற்கவில்லையாம். அப்படியாயின் இவர் எவ்வாறு நாட்டினை ஆட்சி செய்தார்? ஆம். இவர் முதலாவது அரசாங்க அமைச்சரவையினை நிறுவி தனது அமைச்சர்களினூடாகவே இங்கிலாந்தினை ஆட்சி செய்தாராம்.

• ஈராக் நாட்டினை ஆட்சி செய்த சதாம் ஹுசைன், பொதுமக்களினை கொன்ற குற்றச்சாட்டில் அமெரிக்க அரசாங்கத்தின் தயவில் இயங்கிய ஈராக் அரசாங்கத்தினால் தூக்கு தண்டனைக்குள்ளாகி மரணமானர். சதாம் என்ற பெயரின் அரபு விளக்கம் “எப்போதும் யுத்தத்துக்கு தயாரானவராம்”.

• ஜேர்மனி நாட்டினை ஆட்சி செய்த சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லர் எழுதிய நூலின் பெயர் “எனது போராட்டம்”. அதேவேளை சதாம் ஹுசைன் எழுதிய நூலின் பெயர் “எங்களுடைய போராட்டம்”.



• எட்வேட் கென்னடி, ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற போது ஸ்பானிஷ் பரீட்சையில் மோசடி செய்தமைக்காக இடைநிறுத்தம் செய்யப்பட்டாராம்.

• தொலைபேசியினை உலகுக்கு அறிமுகம் செய்தவர் அலெக்சாண்டர் கிரஹம்பெல் என்பதனை நாமறிவோம். இவரின் இறுதிச் சடங்கின் போது அமெரிக்காவிலும், கனடாவிலும் 1 நிமிடத்துக்கு தொலைபேசிகளின் பாவனை அனைத்தும் நிறுத்தப்பட்டது.



• அமெரிக்க ஜனாதிபதியாக தற்சமயம் பதவிவகிக்கும் பராக் ஒபாமா, 2006ம் ஆண்டு ஒலிப்பதிவு செய்யப்பட்ட சிறந்த பேச்சுக்காக கிராமி விருதினைப் பெற்றுக்கொண்டார். “என் தந்தையின் கனவுகளிலிருந்து” என்ற தனது புத்தகத்தின் ஒலிப்பதிவு வடிவமே இதுவாகும்.

***

Wednesday, January 20, 2010

ஒரு தசாப்த காலமாக தொடரும் தோல்விகள்

Vs



வுஸ்ரேலிய மண்ணில் நடைபெற்ற, அவுஸ்ரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரினை 3-0 என அவுஸ்ரேலிய அணி ,பாகிஸ்தான் அணியினை வெள்ளையடிப்புச் செய்து வெற்றி பெற்றுக் கொண்டது.


பாகிஸ்தான் அணி அவுஸ்ரேலிய அணியை டெஸ்ட் போட்டி ஒன்றிலாவது வீழ்த்தி வெற்றி பெற முடியாமல் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பரிதாபகரமாக தவித்து வருகின்றது.

இதுவரை அவுஸ்ரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே 55 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் பாகிஸ்தான் அணி 11 டெஸ்ட் போட்டிகளிலும், அவுஸ்ரேலிய அணி 27 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஏனைய போட்டிகள் வெற்றி,தோல்வியின்றி முடிவடைந்துள்ளன.

அவுஸ்ரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது உத்தியோக டெஸ்ட் போட்டி பாகிஸ்தானின் கராச்சியில் 1956,ஒக்டோபர்11-17 வரை நடைபெற்றது, இதில் பாகிஸ்தான் அணி 9 விக்கட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. [ஆஸி 80 & 187; பாகிஸ்தான்199 & 69/1]

பாகிஸ்தான் அணி,அவுஸ்ரேலிய அணியினை டெஸ்ட் போட்டியொன்றில் இறுதியாக வெற்றி கொண்டது, சிட்னியில் 1995 நவம்பர் 30-டிசம்பர் 4 வரை நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட 3வது டெஸ்ட் போட்டியிலாகும். இதில் பாகிஸ்தான் 74 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. [பாகிஸ்தான் 299 & 204; ஆஸி 257 & 172]

கடந்த 10வருடங்களில் பாகிஸ்தான் அணி, அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டிகள் தொடர்பான ஒரு பார்வை ................

கடந்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தான் அணி, அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையே 15 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 2 டெஸ்ட் போட்டிகள் வெற்றி,தோல்வியின்றி நிறைவடைந்துள்ளதுடன் ஏனைய 13 டெஸ்ட் போட்டிகளிலும் அவுஸ்ரேலிய அணி வெற்றி பெற்றுள்ளதுடன், பாகிஸ்தான் அணி எந்தவொரு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதில் 12 டெஸ்ட் போட்டிகளில் அவுஸ்ரேலிய அணி,பாகிஸ்தான் அணியை தொடர்ச்சியாக வெற்றி பெற்று உலக சாதனையை இலங்கை அணியுடன் பகிர்ந்து கொண்டது. இலங்கை அணியானது பங்களாதேஷ் அணியினை தொடர்ச்சியாக 12 டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பாகிஸ்தான் மண்ணில் அவுஸ்ரேலிய அணி (1998/99)

1வது டெஸ்ட்(ஒக்டோபர் 1-5, 1998) – ராவல்பிண்டி- ஆஸி இன்னிங்ஸ் & 99 ஓட்டங்களால் வெற்றி (பாகிஸ்தான் 269 &145; ஆஸி513).

2வது டெஸ்ட்(ஒக்டோபர் 15-19, 1998) – பெஷாவர்- வெற்றி,தோல்வியின்றி சமநிலை (ஆஸி 599/4 d & 289/5; பாகிஸ்தான் 580/9 d).

3வது டெஸ்ட்(ஒக்டோபர் 15-19, 1998) – கராச்சி- வெற்றி,தோல்வியின்றி சமநிலை (ஆஸி 280 & 390; பாகிஸ்தான் 252&262/5).

அவுஸ்ரேலிய மண்ணில் பாகிஸ்தான் அணி (1999/2000)

1வது டெஸ்ட்( நவம்பர் 5-9, 1999) – பிரிஸ்பேர்ன்- ஆஸி 10 விக்கட்களால் வெற்றி (பாகிஸ்தான் 367 &281; ஆஸி 575 &74/0).

2வது டெஸ்ட்(நவம்பர் 18-22, 1999) – ஹோவார்ட்- ஆஸி 4 விக்கட்களால் வெற்றி (பாகிஸ்தான் 222 & 392; ஆஸி 246&369/6).

3வது டெஸ்ட்(நவம்பர் 26-28, 1999) – பேர்த்- ஆஸி இன்னிங்ஸ் & 20 ஓட்டங்களால் வெற்றி (பாகிஸ்தான் 155 &276; ஆஸி 451).

இலங்கை & ஐக்கிய அமீரக மண்ணில் (2002/03)

1வது டெஸ்ட்(ஒக்டோபர் 3-7, 2002) – கொழும்பு- ஆஸி 41 ஓட்டங்களால் வெற்றி (ஆஸி 467 & 127; பாகிஸ்தான் 279&274).

2வது டெஸ்ட்(ஒக்டோபர் 11-12, 2002) – சார்ஜா- ஆஸி இன்னிங்ஸ் & 198 ஓட்டங்களால் வெற்றி (பாகிஸ்தான் 59 & 53; ஆஸி 310).

3வது டெஸ்ட்(ஒக்டோபர் 19-22, 2002) – சார்ஜா - ஆஸி இன்னிங்ஸ் & 20 ஓட்டங்களால் வெற்றி (ஆஸி 444; பாகிஸ்தான் 221&203(f/o)).

அவுஸ்ரேலிய மண்ணில் பாகிஸ்தான் அணி (2004/05)

1வது டெஸ்ட்(டிசம்பர் 16-19, 2004) – பேர்த்- ஆஸி 491 ஓட்டங்களால் வெற்றி (ஆஸி 381 & 361/5 d; பாகிஸ்தான் 179&72).

2வது டெஸ்ட்(டிசம்பர் 26-29, 2004) – மெல்பேர்ன்- ஆஸி 9விக்கட்களால் வெற்றி (பாகிஸ்தான் 341 &163; ஆஸி 379&127/1).

3வது டெஸ்ட்(ஜனவரி 2-5, 2005) – சிட்னி- ஆஸி 9விக்கட்களால் வெற்றி (பாகிஸ்தான் 304 &325; ஆஸி 568&62/1).

அவுஸ்ரேலிய மண்ணில் பாகிஸ்தான் அணி (2009/10)

1வது டெஸ்ட்(டிசம்பர் 26-30, 2009) – மெல்பேர்ன் - ஆஸி 170 ஓட்டங்களால் வெற்றி (ஆஸி 454/5 d & 225/6 d; பாகிஸ்தான் 258&251).

2வது டெஸ்ட்(ஜனவரி 3-6, 2010) – சிட்னி - ஆஸி 36 ஓட்டங்களால் வெற்றி (ஆஸி 127&381; பாகிஸ்தான் 333&127).

3வது டெஸ்ட்(ஜனவரி 14-18, 2010) – ஹோவார்ட் - ஆஸி 231 ஓட்டங்களால் வெற்றி (ஆஸி 519/8 d & 219/5 d; பாகிஸ்தான் 301&206).


***

Monday, January 18, 2010

ஒவ்வொரு மில்லேனியத்திலும் நாட்களில் வேறுபாடு ஏற்பட்டமை ஏன்?

• உலகில் அதிகம் பேரால் விரும்பி ரசிக்கப்படும் விளையாட்டு என்றால் அது உதை பந்தாட்டம் தான். அந்த வகையில் அதிகமான விளையாடு வீரர்கள், உதைபந்தாட்ட போட்டியொன்றில் 7மைல்களுக்கும் அதிகமான தூரம் ஓடுகின்றார்களாம்.

• இரண்டாம் உலக மகா யுத்ததின்(1939-1945) போதுதான் ஜீப்(JEEP) வாகனம் கண்டுபிடிக்கப்பட்டதாகும். கண்டுபிடிக்கப்பட்ட போது இது பொதுவான பாவனைகளுக்கான வாகனம் ['General Purpose Vehicle (GP)'] என்றே அழைக்கப்பட்டது. பின்னர் GP என்பது மாற்றமடைந்து JEEP ஆக நிலைத்துவிட்டது.



• தும்மும் போது நம்முடைய இதயங்கள் அதனுடைய செயற்பாட்டினை மில்லிசெக்கனுக்கு நிறுத்துகின்றதாம்.

• மிசிசிப்பியினை விட மிசூரி நதியானது நீளமானது.

• முதலாவது மில்லேனியமானது (1 - 1000 AD) 365,250 நாட்களினைக் கொண்டிருந்தது. அதே நேரம் இரண்டாம் மில்லேனியமானது (1001 - 2000 AD) 365,237 நாட்களினைக் கொண்டிருந்தது. தற்போதைய மூன்றாம் மில்லேனியமானது (2001 - 3000 AD) 365,242 நாட்களினைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு மில்லேனியத்திலும் நாட்களில் வேறுபாடு ஏற்பட்டமைக்கு யாது காரணம்? அந்தந்த மில்லேனியத்தில் நடைமுறையில் இருந்த/இருக்கின்ற கலண்டர் முறையே காரணமாகும்.



• உலகில் வசிக்கின்ற 10ல் ஒருவர் தீவுகளிலேயே வசிக்கின்றார்.

• எலிகளும், குதிரைகளும் வாந்தியெடுக்காதாம்

• பன்றிகள் அதனது உச்ச வேகத்தில் ஓடினால் ஒரு மைல் தூரத்தினை 7.5 நிமிடங்களில் அடைந்துவிடுமாம்.

• பறக்க முடியாத ஆனால் நீந்தக்கூடிய ஒரே பறவை பென்குவின் தான்.

• நீலத் திமிங்கிலத்தின் நாக்கின் நீளமானது ஒரு யானையின் நீளத்தினை ஒத்ததாம்.

• பிளமிங்கோ பறவைகள் சேற்றினால் எரிமலை வடிவில் வடிவமைத்த கூட்டின் உச்சியிலேயே முட்டைகளினை இடுகின்றதாம்.



***


Sunday, January 17, 2010

சுவாசப்பை புற்று நோயின் அபாயத்தினை குறைக்கும் பச்சைத் தேயிலை




பச்சைத் தேயிலையினை(Green Tea) அருந்திவருவதன் மூலம் புகைத்தலினால் ஏற்படுகின் சுவாசப்பை புற்று நோயின் அபாயத்தினைக் குறைந்துக் கொள்ளலாம் என புதியதொரு ஆய்வு தெரிவிக்கின்றது.

தாய்வான் நாட்டில் எல்லா புற்று நோய் மரணங்களிலும், சுவாசப்பை புற்று நோயின் காரணமாகவே அதிகமானவர்கள் மரணிக்கின்றனர் என்கின்றார் தாய்வான் சுங் ஷன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி முதுமாணி மாணவன் I-Hsin Lin. இந்த ஆய்வுக் குழுவிற்கு தலைமை தாங்கியது I-Hsin Lin ஆவார்.

தேயிலை, குறிப்பாக பச்சைத் தேயிலையானது உறுதியான நோய் எதிர்ப்பு பொருளான பொலிப்பெனொல்ஸ்சினைக் கொண்டுள்ளது. மேலும் தேயிலையானது கட்டிகளினை தோற்றுவிப்பதற்கெதிராக செயற்படுகின்றதாம்.


Lin
மற்றும் அவரது குழுவினர், சுவாசப்பை புற்று நோயினை கொண்ட 170 நோயாளிகளையும், கட்டுப்பாடுகளைக் கொண்ட 340 ஆரோக்கியமானவர்களையும் தமது ஆய்வில் உள்ளடக்கியிருந்தனர்.


இந்த ஆய்வுக்காக அவர்கள் வினாக்கொத்துக்களினை வழங்கி அதில் அவர்களின் தனிப்பட்ட விபரங்கள், சிகரெட் புகைக்கும் பழக்கங்கள், பச்சை தேயிலை அருந்துவது தொடர்பான விபரங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளினை உட்ளெடுத்தல் தொடர்பான விபரங்கள், சமைத்தல் முறைகள் மற்றும் குடும்பத்தில் சுவாசப்பை புற்று நோயினது பாதிப்பு விபரம் தொடர்பான தகவல்களினைத் திரட்டினர்.

பச்சைத் தேயிலையினை ஒரு நாளில் குறைந்தது ஒரு தடவையாவது அருந்துபவர்களினை விடவும், புகை பிடிப்பவர்கள் மற்றும் புகை பிடிக்காதவர்களிடையே, அவர்கள் பச்சைத் தேயிலையினை அருந்தாதவர்களாக இருந்தவர்களுக்கு சுவாசப்பை புற்று நோயினது அபாயம் 5.61-போல்ட் அதிகரித்துக் காணப்பட்டது.

பச்சைத் தேயிலையினை ஒரு நாளில் குறைந்தது ஒரு தடவையாவது அருந்துபவர்களினை விடவும், புகை பிடிப்பவர்களிடையே, அவர்கள் பச்சைத் தேயிலையினை அருந்தாதவர்களாக இருந்தவர்களுக்கு சுவாசப்பை புற்று நோயினது அபாயம் 12.71-போல்ட் அதிகரித்துக் காணப்பட்டது.

இந்த அபாய வேறுபாடுகள் தொடர்பில் ஜீன்கள் பிரதான வகிபாகத்தினை வகிக்கலாம் என Lin மற்றும் அவரது குழுவினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர் என புற்று நோய் ஆராய்ச்சிக்கான அமெரிக்க சங்கத்தின் வெளியீடு தெரிவிக்கின்றது.


புகைத்தல் உடல் நலத்துக்கு கேடானதாகும்




Saturday, January 16, 2010

உலகினை உலுக்கிய பூமியதிர்ச்சிகள்

சேதமாகிய .நா அலுவலகம்


கடந்த 12ம் திகதி ஹெய்ட்டியின் தலைநகரினை தாக்கிய பூமியதிர்ச்சிகளின் காரணமாக 100,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகின்றது. 200 ஆண்டு காலத்தில் ஹெய்ட்டி நாட்டினைத் தாக்கிய மிக மோசமான பூமியதிர்ச்சி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தப் பூமியதிர்ச்சியானது ரிச்டர் அளவுகோலில் 7.0 எனப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். உள் நாட்டில் இடம்பெற்ற போர் மற்றும் வன்முறைகளினால் ஹெய்ட்டியானது மிகமோசமாக பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் ஹெய்ட்டியானது பன்னாட்டு உதவிகளினை தற்சமயம் கோரி நிற்கின்றது.

உலகில் பாரியளவில் மோசமான உயிர்ச் சேதங்களினை ஏற்படுத்திய சில பிரதானமான பூமியதிர்ச்சிகள்
1. 1556ம் ஆண்டு ஜனவரி 23ம் திகதி, சீனாவின் ஷான்சி பிராந்தியத்தினை 8.0 ரிச்டர் அளவில் தாக்கிய பூமியதிர்ச்சியின் காரணமாக 830,000 மக்கள் கொல்லப்பட்டனர்.

2. 1976ம் ஆண்டு ஜூலை 28ம் திகதி, சீனாவின் டங்ஷன் பிராந்தியத்தினை 7.5 ரிச்டர் அளவில் தாக்கிய பூமியதிர்ச்சியின் காரணமாக 255,000 மக்கள் (உத்தியோகபூர்வ தகவல்) கொல்லப்பட்டனர். ஆனாலும் கொல்லப்பட்ட மக்களின் தொகை 655,000 ஆகுமென மதிப்பிடப்பட்டது.

3. 526ம் ஆண்டு மே 20ம் திகதி, அண்டிஒச் பய்ஷான்ரின் பேரரசினைத் தாக்கிய பூமியதிர்ச்சியின் காரணமாக 250,000 மக்கள் கொல்லப்பட்டனர்.

4. 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி, இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவின் மேற்கு கரையில் 9.3 ரிச்டர் அளவில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியின் காரணமாக இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உருவாகிய சுனாமிப் பேரலையின் காரணமாக 230,210 மக்கள் கொல்லப்பட்டும், காணாமலும் போயினர்.

5. 1138ம் ஆண்டு ஒக்டோபர் 11ம் திகதி, சிரியாவின் அலெப்போ பிராந்தியத்தினை 8.5 ரிச்டர் அளவில் தாக்கிய பூமியதிர்ச்சியின் காரணமாக 230,000 மக்கள் கொல்லப்பட்டனர்.

6. 856ம் ஆண்டு டிசம்பர் 22ம் திகதி, ஈரானின் தம்ஹன் பிராந்தியத்தினை தாக்கிய பூமியதிர்ச்சியின் காரணமாக 200,000 மக்கள் கொல்லப்பட்டனர்.

7. 1920ம் ஆண்டு டிசம்பர் 16ம் திகதி, சீனாவின் நிங்ஷியா-ஹன்சு(ஹையுவான்) பிராந்தியத்தினை 7.8/8.5 ரிச்டர் அளவில் தாக்கிய பூமியதிர்ச்சியின் காரணமாக 200,000-240,000 மக்கள் கொல்லப்பட்டனர்.

8. 893+ம் ஆண்டு மார்ச் 23ம் திகதி, ஈரானின் அர்டாவில் பிராந்தியத்தினை தாக்கிய பூமியதிர்ச்சியின் காரணமாக 150,000 மக்கள் கொல்லப்பட்டனர்.

9. 1923ம் ஆண்டு செப்டம்பர் 01ம் திகதி, ஜப்பானின் கண்டோ பிராந்தியத்தினை 7.9 ரிச்டர் அளவில் தாக்கிய பூமியதிர்ச்சியின் காரணமாக 143,000 மக்கள் கொல்லப்பட்டனர்.

10. 1948ம் ஆண்டு ஒக்டோபர் 06ம் திகதி, துர்க்மெனிஸ்தான் அஷ்காவட் பிராந்தியத்தினை 7.3 ரிச்டர் அளவில் தாக்கிய பூமியதிர்ச்சியின் காரணமாக 111,000 மக்கள் கொல்லப்பட்டனர்.

11. 2005ம் ஆண்டு ஒக்டோபர் 08ம் திகதி, பாகிஸ்தானின் காஷ்மீர் பிராந்தியத்தினை 7.6/7.8 ரிச்டர் அளவில் தாக்கிய பூமியதிர்ச்சியின் காரணமாக 80,000 மக்கள் (உத்தியோகபூர்வ தகவல்) கொல்லப்பட்டனர். ஆனாலும் கொல்லப்பட்ட மக்களின் தொகை 100,000 ஆகுமென மதிப்பிடப்பட்டது.

(தகவல்-United States Geological Survey)


***

Friday, January 15, 2010

உங்களுக்குத் தெரியுமா?

1) பொதுநலவாய நாடுகளின் தலைமையகம் எங்கே அமைந்துள்ளது?
இங்கிலாந்து - லண்டன் நகரில்
2) றுவாண்டா நாட்டின் தலைநகரம் எது?
கிகாலி
3) சர்வதேச டென்னிஸ் சம்மேளனனம் ஸ்தாபிக்கப்பட்ட ஆண்டு என்ன?
1913
4) பங்களாதேஸ் நாட்டின் முதலாவது பிரதமமந்திரி என்ற பெருமைக்குரியவர் யார்?
முஜிபுர் ரஹ்மான்
5) சுயஸ் கால்வாயின் நீளம் யாது?
162.5 கிலோமீற்றர்
6) உலகில் வைரக்கல் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடு எது?
தென்னாபிரிக்கா
7) பிரிட்டன் நாட்டின் தேசிய மலர் என்ன?
ரோஜா



8) அதிகாலை அமைதி நாடு என அழைக்கப்படும் நாடு எது?
கொரியா
9) வண்ணத்துப் பூச்சிகள் எத்தனை கால்களைக் கொண்டுள்ளன?
06
10) 2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நாடு எது?
பிரேசில் - றியோ டி ஜெனிரோ நகரில்



***

Wednesday, January 13, 2010

கையடக்கத் தொலைபேசியும், நித்திரையும்



படுக்கைக்குப் போகும் முன்னர் கையடக்கத் தொலைபேசியினைப் பயன்படுத்துகின்றீர்களா? ஆம் எனில், இது உங்களது சுகாதாரத்தைப் பாதிப்பதாக ஒரு பிரதான ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.

கையடக்கத் தொலைபேசியிலிருந்து வெளிவருகின்ற கதிரியக்கங்களின் காரணமாக நித்திரையின்மை, தலையிடிகள் ஏற்படும் அதேவேளை ஆழ்ந்த நித்திரையில் நேரத்தினைச் செலவிடுவதனை குறைவடையச் செய்கின்றது.

போதுமான நித்திரையினைப் பெறத் தவறுவதன் காரணமாக மனவழுத்தங்கள் ஏற்படுகின்றது,கவனங்கள் குறைவடைகின்றது மற்றும் ஆளுமை/நடத்தை மாற்றங்கள் ஏற்படுகின்றன.

போதுமான நித்திரையின்மை காரணமாக இளவயது வயதினர் oஒழுங்கீனங்களில் தமது கவனத்தினைச் செலுத்துவதுடன், கல்விசார் செயற்பாடுகளில் முன்னேற்றங்களை அடையத் தவறுகின்றனர்.

இந்த ஆராய்ச்சியானது கையடக்கத் தொலைபேசி உற்பத்தியாளர்களால் விஞ்ஞானிகளுக்கு நிதிவசதிகளினை அளித்து மேற்கொள்ளப்பட்டது.மேலும் சாதனங்களிலிருந்து வெளியாகின்ற கதிரியக்க மாசுகள் தொடர்பாக சுகாதார பயமுறுத்தல்களையும் கவனத்தில் கொண்டனர்.
படுக்கைக்குப் போகும் முன்னர் கையடக்கத் தொலைபேசியினைப் பயன்படுத்துபவர்கள் ஆழ்ந்த நித்திரை கட்டத்தினை அடைவதற்கு நீண்ட நேரம் எடுத்ததுடன் அவற்றில் குறைவான நேரத்தினையே செலவிட்டனர் என்பதும் ஆய்வின் முடிவாக இருந்தது.
உடம்பிலுள்ள கலங்கள் புத்துணர்ச்சி பெறுவதற்கும் அன்றைய நாளில் பாதிக்கப்பட்டு சேதமடைந்தவை சீரடைவதற்கும் ஆழ்ந்த நித்திரை பொழுதானது அவசியமானதாகும்.



எடின்பேர்க் நித்திரை மையத்தினுடைய இயக்குனர் மருத்துவர் Chris Idzikowski கருத்து தெரிவிக்கையில் : “படுக்கைக்குப் போகும் நேரத்துக்கு முன்னர் கையடக்கத் தொலைபேசியினைப் பயன்படுத்துபவர்கள் ஆழ்ந்த நித்திரையின்றி எதிர்மறையாகப் பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது என்பதற்கு தற்சமயம் போதுமான உறுதியான சான்றுகள் கிடைத்துள்ளது.” என்கின்றார்.

இந்த ஆய்வில் விஞ்ஞானிகள் 18 தொடக்கம் 45 வயதிற்குட்பட்ட 36 பெண்களையும், 35 ஆண்களையும் ஆய்வுக்குட்படுத்தினர்.
சிலர் கையடக்கத் தொலைபேசியினைப் பாவித்த போது கதிரியக்க அதிர்வுகளினைப் பெறுகின்றனர். ஏனையவர்கள் ஒன்றினையும் பெறவில்லை.

இதன் பிரகாரம், இதன் முதல் குழுவினர் ஆழ்ந்த நித்திரையின் முதல் கட்டத்துக்கு செல்வதற்கு அதிக நேரம் எடுத்ததுடன் மேலும் ஆழ்ந்த நித்திரையினை குறைந்த நேரமே மேற்கொண்டனர்.

இந்தப் பெற்பேறுகளானது பெரும்பாலான பெற்றோருக்கு அதிர்ச்சி அளிக்கலாம், ஏனெனில் நித்திரைக்கு முன்னர் அவர்களுடைய குழந்தைகள் தமது நண்பர்களுடன் கையடக்கத் தொலைபேசியில் வழமையாக அளவளாவுவதனலாகும்.

இந்த ஆய்வானது கரோலின்ஸ்கா நிறுவகம் மற்றும் சுவீடனின் அப்சலா பல்கலைக்கழகம் மற்றும் மிச்சிகன் வய்ன் அரச பல்கலைக்கழகம் ஆகியவற்றின் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டதாகும்.

ஆனாலும் இந்த முடிவுகள் ஒரு முடிந்தமுடிவல்ல என்கின்றார்கள். கையடக்கத் தொலைபேசியினைப் பயன்படுத்துவதால் நித்திரைக் குழப்பங்கள் ஏற்படுகின்றது என்கின்ற முடிவுக்கு தாம் வரவில்லை என்கின்றனர் விஞ்ஞானிகள்.

ஆனால் இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் Bengt Arnetz கருத்து தெரிவிக்கையில், கையடக்கத் தொலைபேசியிலிருந்து வெளிவருகின்ற கதிரியக்கங்களின் காரணமாக மூளையில் ஏற்படுகின்ற பாதிப்புகளினை அளவிடக் கூடியதாகவுள்ளது. கதிரியக்கங்களின் காரணமாக மூளையின் அழுத்த செயற்பாடானது பாதிப்படைந்து, ஆழ்ந்த நித்திரையில் மாறுதல்களினை ஏற்படுத்துகின்றதாம்.

***

#########################

இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

உழவர் திருநாளாம் தைத் திருநாளில்

தமிழர் மனங்களில் அமைதியும்,சந்தோசமும் பெருகி

தமிழர் வாழ்வில் நிம்மதியும், செளபாக்கியமும் கரைபுரண்டோடி

நித்தமும் மகிழ்ச்சியில் திளைக்கவும்................

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற மரபுக்கிணங்க

வாழ்வில் சகலமும் பெற்று வளமுடன் வாழ்கவென

இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.........

கே.கே.லோகநாதன்

#######################


Monday, January 11, 2010

சிங்கங்களைப் பாதுகாப்போம்............

ஆபிரிக்காவில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் அரை மில்லியன் அளவில் அதாவது 450,000 ஆக காணப்பட்ட சிங்கங்கள் இன்று 16000-23000க்கு இடைப்பட்ட எண்ணிக்கையிலேயே மிஞ்சியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேவேளை யானைகள், சிங்கங்கள் உட்பட அதிகளவான உயிரினங்கள் சர்வதேச ரீதியாக குறிப்பிட்ட சில காரணங்களினால் பாதுகாப்பின்மைகளை எதிர் நோக்கியுள்ளன.



புலிகளும் பிரச்சினைகளை எதிர் நோக்கியுள்ளன. புலிகளின் எண்ணிக்கை 3000க்கும் குறைவாகவே காணப்படுகின்றனவாம். புலிகள் மிகவும் அருகிவருகின்றன. புலிகளின் எலும்புகள் கிழக்குலகில் மருத்துவ தேவைகளுக்காகவும், ஆயுர்வேத முறையில் வியாதிகளினைக் குணமாக்குவதற்கும் பயன்படுத்துவதனலால் இதற்கான கேள்வி அதிகமாகக் காணப்படுகின்றதாம். வளர்ச்சியடைந்த கேள்வி, அத்துடன் சுருங்குகின்ற விநியோகம் இந்த அபாயத்துக்கான சூத்திரமாகும்.

இதன் காரணமாக புலிகளின் எலும்புகளிலிருந்து, சிங்கங்களின் என்புகளுக்கு மாற்றீடு பெற்றுள்ளது. இவை புலிகளின் எலும்புகளுக்குப் பதிலாக இலகுவாக விற்கப்படுகின்றதாம்.
சிங்கங்கள் ஆபிரிக்காவில் மிகவும் பிரபலமான விலங்காகும். அதேவேளை உலகிலும் பிரபலமானது எனலாம். கடந்த 20ஆண்டுகளில் இவற்றின் எண்ணிக்கை 50 சதவீதமாகக் குறைவடைந்துள்ளனவாம்.



இவை பெரியளவிலான அச்சுறுத்தல்களை வேட்டைக்காரர்களிடமிருந்தும், சட்டவிரோத கும்பல்களிடமிருந்தும் எதிர் நோக்குகின்றன. கொலைகாரர்கள் மிருகங்களினைக் கொல்ல பூச்சிகொல்லிகளையும் பயன்படுத்துகின்றார்களாம்.

அழிவு அல்லது கொலை அச்சுறுத்தல்கள் காரணமாக 2020ம் ஆண்டுக்குப் பின்னர் வேட்டையாடுவதற்கோ அல்லது பாதுகாப்பதற்காகவோ சிங்கங்களே காணப்படமாட்டாதாம் என அபாய எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன.

மேலும் கடந்த 15 வருடங்களில் காண்டா மிருகங்கள் வேட்டையாடப்படும் வேகம் தற்போது அதிகரித்துள்ளதாக எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன. ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில் காண்டா மிருகங்களின் வேட்டை அதிகரித்துள்ளனவாம். இதற்கான காரணம் காண்டா மிருகக் கொம்புகளுக்கு நிலவும் அதிகரித்த கேள்வியாகும். ஏனெனில் இவை அதிகமான மருத்துவக் குணங்கள் பொருந்தியதாகக் காணப்படுவதேயாகும். முழு ஆபிரிக்காவிலும் 18000 காண்டா மிருகங்கள் உள்ளதாகக் கணிப்பிடப்பட்டுள்ள நிலையில் அதிகரித்த வேகத்தில் இவை கொல்லப்படுவதன் காரணமாக இவற்றின் குடித்தொகை வெகுவாகக் குறைய காரணியாகி விடும் என அபாய எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன.



வேட்டைக்காரர்களிடமிருந்தும், சட்டவிரோத கும்பல்களிடமிருந்தும் உயிரினங்களினை பாதுகாக்க நாம் தவறிவிட்டோம் அத்துடன் அதிக காலம் தாமதித்துவிட்டோம்.
விஞ்ஞானிகள், சுற்றாடல் பாதுகாவலர்கள் உட்பட அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியம் தற்சமயம் உணரப்படுகின்றமை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய விடயமாகும்.



***
Blog Widget by LinkWithin