Thursday, December 24, 2009

தூக்கமில்லையா………?

இன்று நம்மவர்களில் பலர் தூக்கமின்றி தவிர்ப்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது (ஆனால் நான் இங்கே நுளம்புகளின் தொல்லை பற்றிச் சொல்ல வரவில்லை நண்பர்களே....) அண்மையில் பிலிப்ஸ் ஹெல்த் கேர் நிறுவனம் வெளியிட்ட ஆய்வுத் தகவலில் 93%மான இந்தியர்கள் தூக்கமின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது நீங்கள் அறிந்ததே.

ஆனால் இந்தப் பதிவானது தூக்கத்துக்கான வழிமுறையினை சொல்லித்தருவதாகும்.

2008ம் ஆண்டு மார்ச்சில், பெல்ஜியத்தின் Vrije பல்கலைக்கழகம் ஒரு ஆய்வு முடிவினை வெளியிட்டிருந்தது. அவ்வாய்வறிக்கையில் ஆழ்ந் நித்திரைக்கான ஒரு ஆலோசனையினை வெளியிட்டிருந்தது. அவ்வறிக்கையில் அன்றாடம் ஓட்டத்துடன் தொடர்புடைய உடற்பயிற்சி நிகழ்ச்சிகள் ஒரு மனிதனின் நித்திரையினை மேம்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாய்வுக்காக புதிதாக ட்ட நிகழ்ச்சியினை ஆரம்பிக்கும் 50பேரிடம் ஆய்வுகளினை மேற்கொண்ட போது அன்றாட ஓட்டத்துடன் தொடர்புடைய உடற்பயிற்சி செயற்பாடுகள் நித்திரையினை மேம்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 10 வாரங்களுக்கு பின்னர் இவ்வாய்வானது புதிதாக ஓட்ட நிகழ்ச்சியினை ஆரம்பித்தவர்கள் விரைவாக நித்திரையினை செய்வதனையும், அவர்கள் சிறப்பாக நித்திரையினை செய்வதனையும் அவ்வாய்வானது உறுதிப்படுத்தியது. அத்துடன் உடற்பயிற்சி உயர்செயற்பாட்டு அறிகுறிகளினையும் வெளிப்படுத்தியது.

3-4 மணித்தியாலங்கள் வரையான தொடர்ச்சியான கடின உழைப்பானது, உடல் வெப்பநிலையினை மட்டத்துக்கு கீழ் கொண்டுவந்து மயக்க நிலையினை தூண்டிவிடுகின்றதாம். ஆகவே உடற்பயிற்சிக்கு மிகச் சிறந்த நேரம் படுக்கைக்கு போகும் முன்னர் 3-4 மணித்தியாலங்களுக்கு முன்னதாக இருக்க வேண்டும்.அது பிந்திய மாலைப்பொழுதாகவோ அல்லது முந்திய மாலைப்பொழுதாகவோ இருக்கலாம்.

விளையாட்டுச் செயற்பாடுகளானது, ஏனைய முறைகளில் நித்திரை பெறுவதற்கும் மற்றும் நித்திரை மாத்திரைக்கான ஒரு மாற்றீடுமாகும். நித்திரை கொள்ளுங்கள் அன்றைய நாளில் புத்துணர்ச்சியாக இருங்கள்.

***

3 comments:

தர்ஷன் said...

ம்ம் எனக்கும் இந்நிலை இருக்கிறது சரி தூக்கம் வராமலே விட்டாலும் பரவாயில்லை இரவெல்லாம் தூக்கம் வராமல் விடியும் நேரம் தூக்கம் வருகிறது. நீங்கள் சொன்ன வழியில் முயற்சித்துப்பார்ப்போம்.

Jaleela Kamal said...

மிகச்சரி, நம் நாட்டு இந்தியர்க்ளுக்கு ரொம்ப யோசனை , ஒரு விஷியத்தையே மீண்டும் மீண்டும் நினைத்து மனதை போட்டு குழப்புவது . அதனால் தான் இப்படி தூக்கமின்மை,

Jaleela Kamal said...

தர்ஷன் நீங்கள் சொல்வது போல் நிறைய பேர் சொல்ல கேட்டு இருக்கேன்.

மனதை ஒரு நிலை படுத்துஙக்ள் தூக்கம் தானா வரும், இல்லை மதியம் தூங்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இரவு தூக்கம் வர லேட் ஆகும், விடியும் போது கண்ணை இருட்டி கொண்டு வரும்

Blog Widget by LinkWithin