Saturday, October 3, 2009

கிரிக்கெட் சுவையான சாதனை தகவல்கள் # 5

1) மேற்கிந்திய தீவுகள் அணியைச் சேர்ந்த அண்டி கன்ரியும் தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் பெற்ற வீரராவர். ஆனால் அவருக்கு அந்த டெஸ்ட் போட்டி தவிர வேறு எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் விளையாட வாய்ப்புகள் கிடைக்கவில்லையாம்.

2)
முதல் இரண்டு உலகக் கிண்ண சுற்றுப் போட்டி தொடர்களில் இந்திய அணியை தலைவரா ழிநடாத்தினார். ஆனால் அவர் தனது உலகக் கிண்ண வாழ்க்கையினை 6 போட்டிகளில் எந்தவொரு விக்கட்டினையும் பெறாமலேயே முடித்துக் கொண்டார்.

3)
சேன் வோர்னின் 150வது,250வது,400வது டெஸ்ட் விக்கட்டாக வீழ்ந்தவர் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த அலெக் ஸ்டுவட்.

4) சுனில் கவாஸ்கர் தனது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கிற் விக்கெட் (Hit Wicket) முறையில் ஆட்டமிழந்ததில்லையாம். 5) சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பூச்சியத்தில் ஆட்டமிழந்த முதல் வீரர் இந்திய அணியின் பிஷன் சிங் பேடி (Vs இங்கிலாந்து,1974)

6)
அவுஸ்ரேலிய அணி மாத்திரமே இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் 500க்கும் அதிகமா ஓட்டங்களை 100க்கும் அதிகமான டவைகள் பெற்றுள்ளன.
7)
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் போட்டியின் முதல் ஓவரிலேயே ஹெட் ரிக் சாதனை நிகழ்த்தி ஒரே வீரர் இந்திய அணியின் இர்பான் பதான் Vs பாகிஸ்தான் 2006

No comments:

Blog Widget by LinkWithin