Wednesday, October 28, 2009

கிரிக்கெட் சுவையான சாதனை தகவல்கள்# 06

 1974-75 பருவகாலத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான டெல்லி டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு சுழற்பந்து வீச்சாளர் வெங்கட் ராகவன் அணித்தலைவராக செயற்பட்டார். ஆனால் அவர், அடுத்த கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் 12வது வீரராகவே அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

 1979 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலேயே எந்த ஒரு அணியும் 300 ஓட்டங்களை பெறவில்லை.

 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் ஆட்ட நாயகன் விருதினை பெற்ற பெருமைக்குரிய ஒரே வீரர் இந்திய அணியின் சவ்ரவ் கங்குலி.

 முதலாவது சர்வதேச 20-20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய பெருமைக்குரிய அணிகள் அவுஸ்ரேலியா எதிர் நியூசிலாந்து – 2005

 1964ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு முதல்தர டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் ரயில்வே அணியானது டேரா இஸ்மாயில் கான் அணியினை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 851 ஓட்டங்களாலும் வீழ்த்தியது. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் ரயில்வே அணியானது 910/6 பெற்ற வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்தி டேரா இஸ்மாயில் கான் அணியினை துடுப்பெடுத்தாட பணித்தது அவ்வணி பெற்ற ஓட்டங்கள் முறையே 32 & 27.

 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மிகச் சிறந்த சிக்கனமான பந்துவீச்சு ஓவராக கருதப்படுவது மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சாளர் பில் சிம்மன்ஸ் வீசியது. 10-8-3-4 ,Vs பாகிஸ்தான்



***

2 comments:

Unknown said...

தகவல்கள் அருமை....
புதிய பல தகவல்களை அறிந்து கொண்டேன்....

கடைசி நிகழ்வு இடம்பெற்ற ஆண்டைச் சொல்ல முடியுமா? ஏனென்றால் அற்புதமான பந்துவீச்சுப் பெறுதியாக உள்ளதே....

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

Hi Thanks,
@ Sydney in 1992-93.

Blog Widget by LinkWithin