Sunday, August 30, 2009

இப்படியும் மக்கள் உள்ளனரா?.....

அமெரிக்காவின் பென்சில்வேனியா,இந்தியானா மற்றும் ஒஹையோ ஆகிய மாநிலங்களில் சுமார் 2லட்சம் அமிஷ் மக்கள் வசித்து வருகின்றனர். சுவிஸ்சர்லாந்து மற்றும் ஜெர்மன் வம்சாவளியை சேர்ந்த அமிஷ் மக்கள் மின்சாரம் மற்றும் மோட்டார் வாகனங்களை பயன்படுத்துவதில்லை. விவசாய நிலம் உழுவதற்கும் , போக்குவரத்துக்கும் பெரும்பாலும் குதிரைகளையே பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நூற்றாண்டில் இப்படியும் மக்கள் உள்ளனரா என்று வியப்பாக இருந்தாலும் , அவர்களது செயல்கள் மற்றும் வாழ்க்கை முறைகள் அற்புதமாகவும் ஆச்சரியமாகத்தான் உள்ளன எனலாம். எளிமையான வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடிக்கும் அமிஷ் மக்களை பழமைவாதிகள் என்று தொடர்ந்து கூறுவது சரியாக இருக்காது எனலாம்.


அறிவியல் அமோக வளர்ச்சியடைந்து புகை கக்கும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்ததோடு சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றது.இதனால் தற்சமயம் உலக மக்கள் அனைவரும் அமிஷ் மக்களைப் போன்றே வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது கவனிக்கத்தக்கது.

அமெரிக்க மாநிலங்களில் அனைத்து வகையான வரிகளையும் செலுத்தி வரும் அமிஷ் மக்கள் எந்த சலுகைக்காகவும் விண்ணப்பம் கொடுக்கும் வழக்கம் இல்லை.
தாக்கப்பட்டாலும் பதிலடித்தாக்குதல் நடத்தக்கூடாது என்று நம்பும் அமிஷ் மக்கள் 2ம் உலகப்போரின் போது பலமுறை கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றால் நம்பமுடிகின்றதா?...........

***

Wednesday, August 26, 2009

நான்கு கால்களைக் கொண்ட அபூர்வ கோழி குஞ்சு

அண்மையில் எங்கள் பனங்காடு கிராமத்தில் எஸ்.திருமால் என்பவரின் வீட்டில் நான்கு கால்களைக் கொண்ட அபூர்வ கோழி குஞ்சு பிறந்தது .(அடைகாப்பின் மூலம்)

இது போன்ற அரிய பிறப்புகள் தொடர்பான தகவல்களை உலகளவில் கேள்விப்பட்டிருக்கின்றேன் , ஆனால் இலங்கையில் இது போன்ற அபூர்வ நிகழ்வினை கேள்வியுறுவது இதுவே முதல் தடவையாக இருக்கலாம்.

இதோ அந்த அபூர்வ கோழி குஞ்சு தொடர்பான புகைப்படங்கள் . நண்பர்களே பார்த்து ரசியுங்கள் ...............
***

Sunday, August 23, 2009

உலகில் அதிகாரத்துவம் பொருந்திய பெண்கள் - 2009

பிரபல அமெரிக்க "போர்ப்ஸ்" வாணிப சஞ்சிகையால் உலகில் அதிகாரத்துவம் பொருந்திய பெண்கள் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. அரசியல்,வாணிபம், இலாப் நோக்கமற்ற முயற்சிகள் என்பன போன்றவற்றை கவனத்திற் கொண்டே இந்த தெரிவு இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகில் அதிகாரத்துவம் பொருந்திய முதல் 10 பெண்கள் - 2009
1) அஞ்ஜெலா மெர்கல் ( ஜேர்மனி அதிபர்)
தொடர்ச்சியாக 4வது முறையாக முதலிடம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. உலக பொருளாதார நெருக்கடி மற்றும் நிதிச் சந்தைகளிலான தளம்பல் போன்ற நெருக்கடிகளுக்கு ஜேர்மனி அதிபர் அஞ்ஜெலா மெர்கல் திறம்பட தீர்வு கண்டமை குறிப்பிடத்தக்கது.

2) ஷெய்லா பெயார் ( அமெரிக்க அரச வைப்பு காப்புறுதி நிறுவனத்தின் தலைவர்)

3) இந்திரா நூயி ( அமெரிக்க பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைமை நிறைவேற்றதிகாரி)

4) சிந்தியா கரோல் ( அங்லோ அமெரிக்கன் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்றதிகாரி, UK)

5) ஹோ சிங் (சிங்கப்பூர் தெமாஸெக் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்றதிகாரி)

6) இரெனி ரொசன்பெல்ட் ( அமெரிக்க கிரெப்ட் பூட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்றதிகாரி)

7) எல்லென் குல்மன் (அமெரிக்க டுபொண்ட் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்றதிகாரி)

8) அஞ்ஜெலா பிறாலி (அமெரிக்க வெல்பொய்ண்ட் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்றதிகாரி)

9) அன்னே லௌவெர்ஜியோன் (பிரான்ஸ் அரேவா நிறுவனத்தின் தலைமை நிறைவேற்றதிகாரி)

10) லின் எல்செஹென்ஸ் ( அமெரிக்க சுனோகோ நிறுவனத்தின் தலைமை நிறைவேற்றதிகாரி)

அதேசமயம் இந்த அதிகாரத்துவம் பொருந்திய பெண்கள் வரிசையில் சோனியா காந்தி ( காங்கிரஸ் தலைவி,இந்தியா) 13வது இடமும் , சண்டா கொச்சார்(ICICI வங்கி, இந்தியா)20வது இடமும் ,ஹிலாரி கிளின்டன் (அமெரிக்க இராஜாங்க செயலாளர்) 36வது இடமும்,அமெரிக்க முதல் பெண்மணி மிச்செல் ஒபாமா 40வது இடமும், பிரித்தானிய எலிஸபெத்-II மகாராணியார் 42வது இடமும்,ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை 64வது இடமும், சிறி இந்திராவதி (நிதி அமைச்சர், இந்தோனேசியா) 72வது இடமும், பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹஸீனா 78வது இடமும்,கிரன் மசும்டர் சாவ்( வாய்கொன் தலைமை நிறைவேற்றதிகாரி,இந்தியா)92வது இடமும் வகிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


***

Saturday, August 22, 2009

உயிரினங்கள் சிலவற்றின் "நித்திரை" தொடர்பான சுவையான தகவல்கள்.

1) டொல்பின்கள் எப்போதும் ஒரு கண்ணை திறந்தவாறே தூங்கும். 2) எறும்புகள் ஒருபோதும் நித்திரை கொள்வதில்லையாம்.

3) சராசரியாக யானைகள் ஒரு நாளில் ஏறத்தாழ 2 மணி நேரமே நித்திரை கொள்கின்றன. 4) ஒட்டகச்சிவிங்கிகள் ஒரு நாளில் 20 நிமிடங்களுக்கு அதிகமாக அரிதாகவே நித்திரை கொள்கின்றன. 5) பூனைகள் ஒரு நாளைக்கு 16 - 18 மணித்தியாலங்கள் நித்திரை கொள்கின்றன.

6) குதிரைகள் நின்று கொண்டே தூங்கும் மிருகம் ஆகும் .

7)
நத்தைகளால் 3வருடங்களுக்கு உணவின்றி தூங்க முடியும்.

8)
தனது பின்புறத்தால் (முதுகுப்புறம்) நித்திரை கொள்ளக்கூடிய ஒரேஒரு உயிரினம் மனிதன் தான்.

9)
வாத்தினால் தூங்கிக்கொண்டே நீந் முடியும்.

10)
ஆர்மடில்லோ(Armadillo) ஒரு நாளில் சராசரியாக 18.5 மணித்தியாலங்கள் நித்திரை கொள்கின்றன.


நண்பர்களே உங்கள் நித்திரைஒரு நாளில் எத்தனை மணித்தியாலங்கள் ? ..................


***

Thursday, August 20, 2009

சிறந்த விளையாட்டு வீரருக்கான லாறியஸ் விருது - 2009

உலக விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு விருது வழங்கும் விருதான லாறியஸ் விருது விழாவில் கனடாவில் நடைபெற்றது. இந்த வருடத்துக்கான சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை உலகில் அதிவேக ஓட்ட வீரரான ஜமைக்கா நாட்டை சேர்ந்த உசைன் போல்ட் பெற்றுக் கொண்டார்.2008ம் வருடமும் இந்த விருதை உசைன் போல்ட் வென்றமையும் குறிப்பிடத்தக்கது.

விருது பெறும் உசைன் போல்ட்(ஜூன் 10,2009)


இந்த வருடம் சிறந்த வீரருக்கான விருதுக்காக மைக்கல் பெல்ப்ஸ் ( நீச்சல்) , ரபேல் நடால் (டென்னிஸ்) , கமில்டன் & வலன்ரினோ ரோசி (மோட்டார் பந்தய வீரர்கள்) , கிறிஸ்டியானோ ரொனால்டோ(கால்பந்து) ஆகியோரும் முன்மொழியப்பட்ட போதிலும் உலகளாவிய வாக்கெடுப்பில் உசைன் போல்ட் தெரிவு செய்யப்பட்டார்.

லோறியஸ் நிறுவனத்தின் இயக்குனரும் முன்னாள் ஒலிம்பிக் தடை தாண்டல் சம்பியனான எட்வின் மோசஸ் மற்றும் நிறுவனத்தின் உறுப்பினரான குறுந்தூர ஓட்ட வீரர் மைக்கல் ஜோன்சன் ஆகியோர் உசைன் போல்ட்டுக்கான விருதை வழங்கினர்.


அதேபோல் சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருதை இத்தாலியில் நடைபெற்ற லாறியஸ் விருது விழாவில் ரஷ்யா நாட்டை சேர்ந்த கோலூன்றிப் பாய்தல் வீராங்கனை இசின் பெயேவா பெற்றுக் கொண்டார்.

விருது பெறும் இசின் பெயேவா(மே 27,2009)

இந்த வருடம் சிறந்த வீராங்கனைக்கான விருதுக்காக டிருனேஷ் டிபாபா (தடகளம்) , லோரினா ஒக்கோ (கோல்ப் ) , வீனஸ் வில்லியம்ஸ் (டென்னிஸ்) , ஷ்டீபனே ரைஸ் ( நீச்சல்) , லின்சே வொன் (பனி சறுக்கல்) ஆகியோரும் முன்மொழியப்பட்ட போதிலும் உலகளாவிய வாக்கெடுப்பில் இசின் பெயேவா தெரிவு செய்யப்பட்டார்.

***

Monday, August 17, 2009

மீண்டும் உலக சாதனை படைத்தார் உசைன் போல்ட்

12வது உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜெர்மனி, பெர்லினில் 15/08/2009 முதல் நடைபெற்று வருகின்றன. இதில் கடந்த 16ம் திகதி நடைபெற்ற ஆண்களுக்கான 100m  இறுதிப்போட்டியில் ஜமைக்கா நாட்டை சேர்ந்த ஒலிம்பிக் உலகசாதனை வீரர் உசைன்போல்ட் 9.58செக்கன்களில் ஓடிமுடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.  கடந்த 2008 பீஜிங் ஒலிம்பிக்கில் 100m ஓட்டப்போட்டியில் 9.69 செக்கன்களில் படைக்கப்பட்ட தன்னுடைய சாதனைமிகுந்த ஓட்டப்பெறுதியை முறியடித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

உலகசாதனை வீரர் உசைன் போல்ட்

உலக சாம்பியன்ஷிப் 100mபோட்டியில் அமெரிக்க முன்னணி வீரர் டைசன் கே இரண்டாம் இடத்தையும் (9.71s),முன்னாள் உலக சாதனை வீரர் அசபா பவல் ஜமைக்கா நாட்டை சேர்ந்தவர் மூன்றாம் இடத்தையும்(9.84s) பெற்றனர்.

100m, 150m, 200m ஆகிய உலக சாதனைகளையும் உசைன் போல்ட் தம்வசம் வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த உலகத்தில் மிக வேகமான மனிதர் என்றால் அது உசைன் போல்ட் தான் எனலாம்.

இந்த உலக சாதனை பல ஆண்டுகள் நிலைத்து நிற்கும் என்பது மறுக்கமுடியாத உண்மையாகலாம்.....! பொறுத்திருந்து பார்ப்போம் ........!

Thursday, August 13, 2009

எப்படி அழைப்பார்கள் தெரியுமா ?

நாயினை பின்வரும் நாடுகளில் எப்படி அழைப்பார்கள் தெரியுமா ?
கிழக்கு ஆபிரிக்கா நாடுகளில் Woo-Woo
பாங்கொக் Bahk-bahk
ஜப்பான் Wan-wan
ரஷ்யா Gahf-gahf

பூனையினை பின்வரும் நாடுகளில் எப்படி அழைப்பார்கள் தெரியுமா ?

ஜப்பான் Neow
தாய்லாந்து Mao

பன்றியினை பின்வரும் நாடுகளில் எப்படி அழைப்பார்கள் தெரியுமா ?


ஜப்பான் Moo-moo
தாய்லாந்து Oot-oot
ரஷ்யா Ha-roo

***

Wednesday, August 12, 2009

இலங்கைப் பதிவர் சந்திப்பு


காலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை .
நேரம் : காலை 9 மணி.
இடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம்,
இல.7, 57வது ஒழுங்கை (ருத்ரா மாவத்தையின் பின்புறம்)
கொழும்பு 06.

நோக்கங்கள் :

இலங்கைத் தமிழ் வலைப்பதிவாளர்களிடம் அறிமுகத்தையும் தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ளுதல்.

புதிய பதிவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குதல்

இலங்கைப் பதிவாளர்களின் திறமைகளை இணையத்தைவிட்டு வெளிக்கொணர முயற்சி செயதல்.

பதிவாளர்களிடையேயான கருத்துரைகள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுதல்.

பதிவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அல்லது தொழில்நுட்ப சந்தேகங்களுக்கான வழிமுறைகளை ஆராய்தல்

இன்னும் பல‌..

வலைப்பதிவாளர்கள், புதிதாக வலைப்பதிபவர்கள், வலையுலக வாசகர்கள், பின்னூட்டமிடுபவர்கள் என அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.


Monday, August 10, 2009

இரட்டை குழந்தைகளின் தந்தையானார் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரொஜர் பெடரர்


சுவிட்சர்லாந்தை சேர்ந்த பிரபல நட்சத்திர டென்னிஸ் வீரர் ரொஜர் பெடரர் மற்றும் மிர்கா வவ்ரினெக் தம்பதியினர் இரட்டைப் பெண் பெற்றோர்களாக மாறிவிட்டனர்.Charlene Riva மற்றும் Myla Rose ஆகிய இரட்டைப் பெண் குழந்தைகள் ஜூலை23 ,2009 அன்று சுவிட்சர்லாந்து நாட்டில் பிறந்ததாக ரொஜர் பெடரர் தனது ணையத்தளத்திலும் Facebook பக்கத்திலும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தாயும் குழந்தைகளும் நலமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெடரர் ,மிர்கா தம்பதியினர் இரட்டைப் பெண் குழந்தைகளுடன்

சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற விம்பிள்டன் போட்டிகளை பார்வையிட மிர்கா வரவில்லை.ஆனாலும் மிகக்கடுமையாக 5 சுற்றுகள் வரை நடைபெற்ற ரொஜர் பெடரர் மற்றும் அண்டி ரொடிக் இடையிலான விம்பிள்டன் இறுதிப்போட்டியை மிர்கா அனுசரித்து அமர்ந்திருந்து பார்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று 6வது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வெற்றி கொண்டதுடன் சாதனைமிகு 15வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பெடரர் 2000ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் மிர்காவை சந்தித்து காதல் கொண்டதுடன் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் முடித்தமையும் குறிப்பிடத்தக்கது. ரொஜர் பெடரர் ஆகஸ்ட்10ம் திகதி மொன்றியலில் நடைபெறவுள்ள Rogers கிண்ண போட்டியிலும் அதனைத் தொடந்து ஆகஸ்ட்31ம் திகதி ஆரம்பமாகவுள்ள அமெரிக்க ஓபன் போட்டியில் தனது 6வது நேரடி பட்டத்தை எதிர்பார்த்தும் ஒரு தந்தையாக விளையாடவுள்ளார். தந்தையாகிய பின்னர் ரொஜர் பெடரரின் பெறுபேறுகள் எவ்வாறு அமைகின்றன என பொறுத்திருந்து பார்ப்போம்.........


***

Friday, August 7, 2009

கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்

01/08/2009 அன்று அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் அண்ணா நூற்றாண்டு சிறப்பு பட்டமளிப்பு நடைபெற்றது. இச்சிறப்பு பட்டமளிப்பு விழாவில் இசைப்புயல்,ஒஸ்கார் தமிழன் ஏ.ஆர். ரஹ்மானுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை தமிழக ஆளுனர் பர்னாலா வழங்கினார்.

மேலும் இச்சிறப்பு பட்டமளிப்பு விழாவில் தமிழக துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இஸ்ரோவின் சந்திராயன்-1 திட்ட இயக்குனர் மயில்சாமி ஆகியோரும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இசைப்புயல்,ஒஸ்கார் தமிழன் ஏ.ஆர். ரஹ்மானுக்கு இதற்கு முன்னரும் சில பல்கலைக்கழகங்களால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.(மிடில்செக்ஸ் பல்கலைக்கழகம், லண்டன் & அலிகர் பல்கலைக்கழகம்)

Sunday, August 2, 2009

உலகளாவிய ரீதியில் வாழ்க்கைச்செலவுமிக்க முதல் 10 நகரங்கள்- 2009

உலகளாவிய ரீதியில் Mercer நிறுவனமானது 6 கண்டங்களின் 143 நகரங்கள் பூராகவும் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் உலகளவில் வாழ்க்கைச் செலவுமிக்க நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வின் போது வீட்டு விலை, போக்குவரத்து, உணவு,உடை, வீட்டு உபயோகப்பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு உள்ளடங்களாக 200 விடயங்களை கருத்தில் கொண்டமை குறிப்பிடத்தக்கது.அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தை மையமாக வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.நியூயோர்க் நகருக்கு 100 புள்ளிகள் கொடுத்து அதை ஒப்பிட்டு மற்ற நகரின் செலவை கணக்கிட்டனர். இந்த ஆய்வில் உலகளாவிய ரீதியிலான நாணய தளம்பல்கள், பொருளாதார சரிவு ஆகியன மிக முக்கிய மாற்றங்களுக்கு காரணமாகியது.

டோக்கியோ நகரம்

குறிப்புக்கள்
  • டோக்கியோ நகரமானது மொஸ்கோ நகரினை பின்தள்ளி வாழ்க்கைச்செலவுமிக்க நகரங்களில் 1வது இடத்துக்கு வந்துள்ளது.
  • ஜொகனஸ்பேர்க் நகரம் வாழ்க்கைச்செலவில் மலிவானதாகும்.
  • ஆசிய,ஐரோப்பிய நகரங்கள் முதல் 10 இடங்களை வகிக்கின்றன.
  • அவுஸ்ரேலியா, நியூசிலாந்து,இந்தியா ஆகியன வீழ்ச்சிப் போக்கை காட்டுகின்றன.
  • அமெரிக்கா,சீனா,ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில் உயர்வு பெற்றுள்ள.

ஜொகனஸ்பேர்க் நகரம்

ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள்,ஆபிரிக்கா
ஆய்வின் பிரகாரம் பெருமளவான ஐரோப்பிய நகரங்கள் கீழ்நோக்கிய இறக்கங்களை காட்டுகின்றன.லண்டன் நகரம் 2008ல் 3ம் இடமும்,ஒஸ்லோ நகரம் 2008ல் 4ம் இடமும் தரப்படுத்தலில் வகித்தன.ஆனால் இவை 2009ல் முறையே 16ம்,14ம் இடங்களை வகிக்கின்றன.

ஜெனிவா,சூரிச் முறையே 4ம்,6ம் இடங்களை வகிக்கின்றன.கொபென்ஹகென் மாற்றமின்றி 7ம் இடத்திலும்,மிலான் மற்றும் பாரிஸ் ஒரு இடம் வீழ்ந்து 11ம்,13ம்இடங்களை வகிக்கின்றன.

ஜேர்மனி ,ஸ்பெய்ன் நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில் வீழ்ச்சி கண்டுள்ளன.அதேபோல் சுவீடன், உக்ரேன், செக் குடியரசு,ரொமேனியா மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளின் நகரங்களும் தரப்படுத்தலில் வீழ்ச்சி கண்டுள்ளன.

Warsaw plummeting 35
இல் இருந்து 113க்கும், Glasgow (129ம் இடம்) , Birmingham (125tம் இடம்) ஆகிய UK நகர்கள் முறையே 60 மற்றும் 59 இடங்கள் வீழ்ந்துள்ளன.

மத்திய கிழக்கு நாடுகளின் நகரங்களில் துபாய் நகரம் 2008ல் 52ம் இடமும், அபுதாபி நகரம் 2008ல் 65ம் இடமும் தரப்படுத்தலில் வகித்தன. ஆனால் இவை 2009ல் முறையே 20ம்,26ம் இடங்களை வகிக்கின்றன.டெல் அவிவ் நகரம் மாத்திரமே மத்திய கிழக்கு நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில் இறக்கம் பெற்றுள்ளது.(14ம் இடத்திலிருந்து 17ம் இடம்)

அதிகமான ஆபிரிக்க நகரங்கள் தரப்படுத்தலில் மேல் நோக்கி உயர்வு பெற்றுள்ளதுடன்,அவற்றின் சுட்டெண்களும் குறைவடைந்துள்ளது. கெய்ரோ 44ம் இடத்திலிருந்து 57ம் இடத்துக்கும், ஜொகனஸ்பேர்க் நகரம் அடிமட்டத்துக்கும் சரிவடைந்துள்ளது.

அமெரிக்கா (America's)
அமெரிக்க நகரங்களில் நியூயோர்க் நகரம் 2008ல் 22ம் இடமும்,லொஸ் ஏஞ்சல்ஸ் நகரம் 2008ல் 55ம் இடமும் , வாசிங்டன் நகரம் 2008ல் 107ம் இடமும் தரப்படுத்தலில் வகித்தன.ஆனால் இவை 2009ல் முறையே 8ம்,23ம்,66ம் இடங்களை வகிக்கின்றன.

கனடிய நகரங்களில் டொரண்டோ நகரம் 2008ல் 54ம் இடமும்,ஒட்டாவா நகரம் 2008ல் 85ம் இடமும் , மொன்றியல் நகரம் 2008ல் 72ம் இடமும் தரப்படுத்தலில் வகித்தன.ஆனால் இவை 2009ல் முறையே 85ம்,121ம்,103ம் இடங்களை வகிக்கின்றன.

தென் அமெரிக்க நகரங்களில் வெனிசுவேலாவின் கரகஸ் நகரம் தரப்படுத்தலில் முதன்மை இடம் வகிக்கின்றது.

Sao Paolo 25
ம் இடத்திலிருந்து 72ம் இடத்துக்கும் மற்றும் Rio de Janeiro 31ம் இடத்திலிருந்து 73ம் இடத்துக்கும் இறக்கம் கண்டுள்ளன.
Bogota 87
ம் இடத்திலிருந்து 120ம் இடத்துக்கும், Buenos Aires 26 இடங்கள் முன்னேறி 112ம் இடத்தினையும் வகிக்கின்றன.


ஆசியா
ஆசியாவினைப் பொறுத்தவரை டோக்கியோ நகரம் உலகளாவிய ரீதியில் 1ம் இடத்தையும்,ஒசாகா நகரம் 2ம் இடத்தையும் வகிக்கின்றன.கொங்கொங் 5ம் இடத்தையும், சிங்கப்பூர் கடந்த வருடத்திலிருந்து 3இடங்கள் முன்னேறி 10ம் இடத்தையும் வகிக்கின்றன.இந்த பிராந்தியத்தில் தொடந்து கராச்சி(140ம் இடம்) செலவு குறைந்த நகரமாகும் , ஆனால் கடந்த வருடத்தை விட ஒரு இடம் முன்னேறியுள்ளது.

இந்திய நகரங்கள் எல்லாம் தரவரிசையில் இறக்கங்களை காட்டியுள்ளன.புது டில்லி 55ம் இடத்திலிருந்து 65ம் இடத்துக்கும், மும்பாய் 48ம் இடத்திலிருந்து 66ம் இடத்துக்கும் இறக்கம் கண்டுள்ளன.

சீன நகரங்களில் பீஜிங் 11இடங்கள் முன்னேறி 9ம் இடத்துக்கு வந்துள்ளது. Shanghai, Shenzhen , Guangzhou முறையே 12ம்,22ம்,23ம் இடங்களை வகிக்கின்றன,

அவுஸ்ரேலியா,நியூசிலாந்து
அவுஸ்ரேலிய நகரங்களில் சிட்னி 15ம் இடத்திலிருந்து 66ம் இடத்துக்கும், மெல்பேர்ன் 36ம் இடத்திலிருந்து 92ம் இடத்துக்கும் இறக்கம் கண்டுள்ளன.

நியூசிலாந்து நகரங்களில் ஒக்லண்ட் 78ம் இடத்திலிருந்து 138ம் இடத்துக்கும், வெலிங்டன் 93ம் இடத்திலிருந்து 139ம் இடத்துக்கும் இறக்கம் கண்டுள்ளன.


வாழ்க்கைச்செலவுமிக்க முதல் 10 நகரங்கள் - 2009
1ம் இடம் டோக்கியோ நகரம் - ஜப்பான் (2008ல் 2ம் இடம்)
2ம் இடம் ஒசாகா நகரம் - ஜப்பான் (2008ல் 11ம் இடம்)
3ம் இடம் மொஸ்கோ நகரம் - ரஷ்யா (2008ல் 1ம் இடம்)
4ம் இடம் ஜெனிவா நகரம்-சுவிட்சர்லாந்து(2008ல் 8ம் இடம்)
5ம் இடம் கொங்கொங் நகரம்-கொங்கொங்(2008ல் 6ம் இடம்)
6ம் இடம் சூரிச் நகரம் - சுவிட்சர்லாந்து (2008ல் 9ம் இடம்)
7ம் இடம் கொபென்ஹகென் நகரம்-டென்மார்க் (2008ல் 7ம் இடம்)
8ம் இடம் நியூயோர்க் நகரம்-அமெரிக்கா(2008ல் 22ம் இடம்)
9ம் இடம் பீஜிங் நகரம் - சீனா (2008ல் 20ம் இடம்)
10ம் இடம் சிங்கப்பூர் நகரம் - சிங்கப்பூர் (2008ல் 13ம் இடம்)

Blog Widget by LinkWithin