Friday, July 31, 2009

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 31/ 07 (ஜுலை 31) பெறும் சிறப்பு


ஜிம் லேகர்

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒவ்வொரு வீரர்களும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி தமது பெயர்களை சாதனை ஏட்டில் பதிவு செய்துகொண்டுள்ளனர்.அந்த வகையில் ஜிம் லேகர் நிகழ்த்திய சாதனை இன்றுவரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நிலைத்திருக்கின்றது.


இங்கிலாந்து அணியைச் சேர்ந்த ஜிம் லேகர் மிகச்சிறந்த வலதுகை சுழல்பந்து வீச்சாளர் ஆவார்.இங்கிலாந்து அணிக்காக 12 ஆண்டுகள் விளையாடிய ஜிம் லேகர் 1956 ம் ஆண்டு ஜுலை மாதம் 27-31ம் திகதி வரை அவுஸ்திரேலிய அணிக்கெதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 19 டெஸ்ட் விக்கட்டுக்களை வீழ்த்தினார். முதல் இனிங்ஸ்ஸில் 37 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 9 விக்கட்டுகளை வீழ்த்தினார். மேலும், தமது இரண்டாவது இனிங்ஸ்ஸில் 53 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 10 விக்கட்டுகளையும் வீழ்த்தினார். (ஜுலை 31,1956). இதன் பிரகாரம் ஓல்ட் ரெபர்ட் மைதானத்தில் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 90ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 19 டெஸ்ட் விக்கட்டுக்களை வீழ்த்தினார்.


சாதனையுடன் அரங்கு திரும்பும் ஜிம் லேகர்


ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக விக்கட்களை(19) வீழ்த்திய சாதனை வீரராக ஜிம் லேகர் இன்றுவரை விளங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் ஒரு டெஸ்ட் போட்டியில் ஒரு இனிங்ஸ்ஸில் 10விக்கட்களையும் வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் ஆவார் . இந்த சாதனையில் அனில்கும்ளேயும் பின்னர் இணைந்து கொண்டார் .

போட்டி சுருக்கம்
இங்கிலாந்து 1st இன்னிங்க்ஸ் 459
அவுஸ்திரேலியா 1st இன்னிங்க்ஸ் 84
அவுஸ்திரேலியா 2nd இன்னிங்க்ஸ் (following on) 205
இங்கிலாந்து வெற்றி பெற்றது இன்னிங்க்ஸ் மற்றும் 170 ஓட்டங்கள்

ஜிம் லேகர் மொத்தமாக 46 டெஸ்ட் போட்டிகளில் 86 இனிங்ஸ்ஸில் பங்குபற்றி 12027 பந்துகள் வீசி 4101ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 193 டெஸ்ட் விக்கட்களை வீழ்த்தியுள்ளார்.

ஒருமுறை ஜிம் லேகர், இங்கிலாந்து அணிக்காக தெரிவு நடக்கும் போது 2 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 8 விக்கட்களை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.


***

No comments:

Blog Widget by LinkWithin