Sunday, July 26, 2009

(தொடர்ச்சி ) உலகில் உயர் பதவி வகிக்கும் வயதில் குறைந்த முதல் 10 அரசியல் தலைவர்கள் -

நேற்று பிரசுமாகிய ஆக்கத்தின் தொடர்ச்சி .................


6) சுவாஸிலாந்து மன்னர் : Mswati III
பிறப்பு : 1968 ஏப்ரல் 19
பதவிக்கு வந்த ஆண்டு : 1986 ஏப்ரல் 25
உயர் பதவிக்கு வந்தது :ஆட்சியில் மன்னரா இருந்த அவரது தந்தையின் மறைவின் மூலம்

சுவாஸிலாந்து நாட்டில் 15-29 வயதிற்கிடைப்பட்டவர்களில் 26%மானவர்கள் HIV/AIDS இனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதற்காக மன்னர் 2001இல் 18வயதுக்கு கீழ்ப்பட்ட பெண்களுக்கு 5வருட பாலியல் தடையினை கொண்டு வந்தார், இத்தடையினை 2008இல் நீக்கம் செய்தார்.இவருக்கு 13மனைவிகளும், 23 குழந்தைகளும் உண்டாம்.

7)ஜோர்ஜியா ஜனாதிபதி : Mikheil Saakashvili
பிறப்பு : 1967 டிசம்பர் 21
பதவிக்கு வந்த ஆண்டு : 2004 ஜனவரி 25
உயர் பதவிக்கு வந்தது : Rose புரட்சிக்கு தலைமை வகித்தன் மூலம்

சட்டத்தில் பட்டத்தினை பெற்றுள்ளார்.(Columbia University and George Washington University), 2005இல் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார்,2000 ஆம் ஆண்டில் நீதி அமைச்சராக பதவிவகித்து ஊழலுக்கு எதிராக செயற்பட்டார்.2003 நவம்பரில் புரட்சிக்கு தலைமை வகித்து 2004 இல் பதவியேற்று பின்னர் இந்த வருடம் ஜனவரியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.


8)பல்கேரியா பிரதமமந்திரி : Sergei Stanishev

பிறப்பு : 1966 மே 5
பதவிக்கு வந்த ஆண்டு : 2005 ஆகஸ்ட் 17
உயர் பதவிக்கு வந்தது : தனது கட்சியின் மூலம்

வரலாற்றில் Ph.D. பட்டம் பெற்றுள்ளதுடன் ஒரு பத்திரிகையாளரும் ஆவார்.2001ல் தேசிய சபைக்கு தெரிவுசெய்யப்பட்டார்.2005 ஜுனில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் சமவுடைமை கட்சியில் வெற்றி பெற்று தேசிய சபையால் பிரதமமந்திரியாக தெரிவுசெய்யப்பட்டார்.



9) டோகோ(Togo) ஜனாதிபதி : Faure Gnassingbe
பிறப்பு : 1966 ஜுன் 6
பதவிக்கு வந்த ஆண்டு : 2005 பெப்ரவரி 5
உயர் பதவிக்கு வந்தது : தந்தையால் பதவிக்கு கொண்டுவரப்பட்டதன் மூலம்

MBA பட்டதாரி(George Washington University)2005 இல் தந்தையின் மறைவின் பின் இராணுவ செல்வாக்கில் ஆட்சிக்கு வந்தார்,எனினும் சர்வதேச அழுத்தங்களால 20நாட்களில் இறங்கிவந்தார்.2005 ஏப்ரலில் நடைபெற்ற பாரிய வன்முறைகளுடன் கூடிய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார்.




10)ரஷ்யா ஜனாதிபதி : Dmitry Medvedev

பிறப்பு : 1965 செப்டம்பர் 14
பதவிக்கு வந்த ஆண்டு : 2008 மே 7
உயர் பதவிக்கு வந்தது : முன்னாள் ஜனாதிபதி புட்டினுடனான நெருக்கமாக இருந்தவர்

சட்டத்தரணியாக இருந்த இவர் புட்டினுடன் 1990களில் சென்.பீற்றர்பேக் மேயர் அலுவலகத்தில் பணிபுரிந்தார்.2000இல் புட்டினுக்காக அர்சியல் தேர்தல் பணிகளில் ஈடுபட்டார்.2005ல் புட்டினின் நிருவாகத்தில் பிரதி பிரதமமந்திரியாக பணிபுரிந்தார்.இந்த வருடம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதுடன் புட்டினை பிரதமமந்திரியாக நியமியத்தார்.


***

1 comment:

Muruganandan M.K. said...

சுவையான தகவல். நன்றி

Blog Widget by LinkWithin