Saturday, July 25, 2009

உலகில் உயர் பதவி வகிக்கும் வயதில் குறைந்த முதல் 10 அரசியல் தலைவர்கள்

1) பூட்டான் மன்னர்- Jigme Khesar Namgyel Wangchuck
பிறப்பு : 1980 பெப்ரவரி 21
பதவிக்கு வந்த ஆண்டு : 2006 டிசம்பர் 14
உயர் பதவிக்கு வந்தது : தந்தையார் பதவிப்பொறுப்பினை கையளித்ததன் மூலம்

மன்னர் ஜிக்மி ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் முதுமாணி பட்டத்தினை பெற்றுள்ளார்.
முதல் தடவையாக பொதுத்தேர்தல்கள் நடைபெற்றதன் மூலம் பூட்டான் தேசமானது மன்னர் ஆட்சியிலிருந்து ஜனநாயக ஆட்சிக்கு மாறிக்கொண்டிருக்கின்றது.



2) டொமினிக்கன் பிரதமமந்திரி : Roosevelt Skerrit
பிறப்பு : 1972 ஜுன் 8
பதவிக்கு வந்த ஆண்டு : 2004 ஜனவரி 8
உயர் பதவிக்கு வந்தது : பொருத்தமான அரசியல் தலைவர் மரணித்ததன் மூலம் சரியான நேரத்தில் பதவிப்பொறுப்பினை கையேற்றார்.

ஆங்கிலம் மற்றும் உளவியல் பட்டத்தினை பெற்றுள்ளார்.(University of Mississippi and New Mexico State University).
கல்வி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

இவர்
தாய்வான் நாட்டுடனான உறவுகளை தள்ளுபடிசெய்து சீனா நாட்டிடம் $122 million உதவிகளை டொமினிக்கனுக்கு பெற்றுக்கொள்கின்றார்.




3)கொங்கோ மக்கள் குடியரசின் ஜனாதிபதி : Joseph Kabila
பிறப்பு : 1971 ஜுன் 4
பதவிக்கு வந்த ஆண்டு : 2001 ஜனவரி 26
உயர் பதவிக்கு வந்தது : தந்தையார் கொல்லப்பட்டதால் பதவிப்பொறுப்பினை கையேற்றார்.

2001இல் தந்தையின் படுகொலைக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்தார்.
1960ஆம் ஆண்டு கொங்கோ சுதந்திரத்துக்கு பின்னர் 2006இல் நடைபெற்ற 1வது ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று ஜனநாயக ரீதியில் ஆட்சிக்கு வந்த முதல் ஜனாதிபதி ஆவார். இவர் ஒரு முன்னாள் போராளியாவார்.பல தசாப்தங்களாக இடம்பெற்ற மோதல்களுக்குப் பின்னர் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் ஆதாயமான வழியில் சுரங்க அகழ்வுகளுக்கு வழிவகுத்துள்ளார்.



4) மசிடோனியா பிரதமமந்திரி : Nikola Gruevski
பிறப்பு : 1970 ஆகஸ்ட் 31
பதவிக்கு வந்த ஆண்டு : 2006ஆகஸ்ட் 27
உயர் பதவிக்கு வந்தது :அவரது கட்சி பொதுத்தேர்லில் வெற்றி பெற்றதன் மூலம்.

பொருளியல் முதுமாணி பட்டம் பெற்றுள்ளார்.வர்த்தக அமைச்சராக 1998-99 வரையும் நிதி அமைச்சராக 1999-2002 வரையும் பதவி வகித்துள்ளார்.2006 ஜுனில் நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தலில் வெற்றி பெற்றார்.

5) நவ்ரு ஜனாதிபதி : Marcus Stephen
பிறப்பு : 1969 ஒக்டோபர் 1
பதவிக்கு வந்த ஆண்டு : 2007 டிசம்பர் 19
உயர் பதவிக்கு வந்தது :ஆட்சியில் இருந்த அரசியல் தலைவரை நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதன் மூலம்.

1992,1996 மற்றும் 2000 ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றியுள்ளார். 1990 -2002 ஆண்டு வரை பொதுநலவாய போட்டிகளில் 12 பத்க்கங்களை பெற்றுள்ளார்.இவர் ஒரு தேசிய ஹீரோ ஆவார்.2003 இல் பாராளுமன்றத்துக்கு தெரிவானார்.2007ல் நடைபெற்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதன் மூலம் ஜனாதிபதியாக பதவியேற்றார்.




தகவல் தொடரும் ..........

***

No comments:

Blog Widget by LinkWithin