Monday, June 8, 2009

நகரங்களே புயல்களை அதிக தீவிரமாக்குகின்றன

வயல்வெளி காடு சார்ந்த கிராமப் புறங்களை காட்டிலும் கோடையில் ஏற்படும் இடி மின்னல்களை நகரங்கள் அதிக தீவிரமாக்குகின்றன என்று ஒரு புதிய ஆராய்ச்சி தெரிவிக்கின்றது. நகரச் சுற்று சூழல்கள் புயல்களின் தன்மையை மாற்றமடைய செய்கின்றன என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்கள் ஜுலை 2004ஆம் ஆண்டு பால்டிமோர் என்ற இடத்தை தாக்கிய புயலை ஆய்வு செய்து அந்த நகரத்தில் உயரமாக கட்டடங்கள் இருப்பதினால் 30 சதவீத மழை அதிகமாக பெய்தது என்று கூறினார்கள்.அத்தோடு அந்த புயல் ஏற்பட்ட சமயத்தில் ஒரு வருடத்தில் ஏற்படக்கூடிய மின்னல்கள் இரண்டு மணி நேரத்தில் உருவாகிறது.
ஒரு நகரம் புயலை எவ்வாறு தீவிரமடையச் செய்கின்றன என்பதற்கு மூன்று காரணங்களை காட்டியுள்ளார்கள்.
1. வெப்பம்.
நகரங்கள் வெப்பத்தை உற்பத்தி செய்கின்றன இது சாதாரணமாக உள்ள வெப்பத்தை விட இரண்டிலிருந்து 5 டிகிரி செல்சியஸ் அதிகமாகிறது. இந்த அதிக வெப்பம் புயல்களை தீவிரமடையச் செய்கின்றது.

2.வானளாவும் உயரமான கட்டடங்கள்;
வளி மண்டலத்தை ஊடுருவிச் செல்லும் உயரமான கட்டடங்கள் வளி மண்டலத்தில் காற்று மேலே செல்வதை தடைசெய்கின்றன. இதனால் அதிக மழை ஏற்படுகிறது.

3. புகை, பனி மண்டலம், பனிப்புகை
இவை நகரங்களில் அதிகமாக இருப்பதற்கு காரணம் தொழிற்சாலைகளும் வாகனங்களும் ஆகும். இவை உற்பத்தி செய்கின்ற புகையானது பனி மற்றும் பனிபுகை புயல்களை தீவிரமடைய செய்கின்றன. உலகெங்கும் வெப்பம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.இதனால் காற்றில் அதிக தண்ணீர் சேர்கிறது. ஆகவே நகரங்களில் புயல் மழையும் தீவிரமடைகின்றன.
நாகரிக வாழ்க்கை வசதிகளை நமக்கு தந்தாலும் அதனால் ஏற்படும் அழிவுகளை ஒருவரும் அறிந்து கொள்வதில்லை.


(நன்றி-வீரகேசரி வாரவெளியீடு 19.04.2009)

***

No comments:

Blog Widget by LinkWithin