Tuesday, June 30, 2009

சுவாரஸ்சியமான அறிவுத் தகவல்கள்

1)14ம் லூயி மன்னன் வாழ்க்கையில் குளித்தது மூன்றே முறை தான்.
2)இந்திய கணித மேதை ராமானுஜர் கண்டுபிடித்த கணித உண்மைகள் 4000ஆகும்.
3)திபெத்தில் மீனை தெய்வமாக கருதுவதால் மீனை சாப்பிடமாட்டார்கள்.
4)நத்தையில் ஆண்,பெண் கிடையாது.
5)கணித சூத்திரங்களால் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் நெப்டியூன்(Neptune).
6)வலதுகால் செருப்புக்கள் தான் அதிகம் தேயும்.
7ஜப்பானியர்கள் இரு கைகளாலும் எழுதுவார்கள்.
8மகளிர்க்கென காற்பந்து ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டது -1996 அட்லாண்டா (USA) ஒலிம்பிக்கில்
9) எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கண்கள் தெரியுமா?

விடையினை கண்டுபிடித்தால் Comments பண்ணவும் நண்பர்களே?

Saturday, June 27, 2009

உலகில் சில நாட்டு மக்களின் வித்தியாசமான சம்பிரதாயங்கள்

உலகில் சில நாட்டு மக்களின் வித்தியாசமான சம்பிரதாயங்கள்.அதாவது அவர்கள் அநாகரிகமாகக் கருதும் சில பழக்க வழக்கங்கள்.

1)ஆபிரிக்க நாடுகளுக்கு செல்லும் போது மேலே கையைத் தூக்கி அசைப்பது அநாகரிகமாகக் கருதப்படுகின்றது.

2)சீனாவில் கடிகாரத்தை பரிசாகக் கொடுத்தல் அநாகரிகமாகக் கருதப்படுகின்றது. ஏனெனில் அது அவர்களுக்கு மரணச்சின்னம் ஆகும்.

3)கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கையுறை அணிந்து கொண்டு கைலாகு கொடுப்பதை அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.

4)எகிப்து நாட்டில் வெங்காயத்தை கொடுப்பதை அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.

5)என்ன வேலை செய்கின்றீர்கள்? என்று இத்தாலி நாட்டில் கேள்வி கேட்பது அநாகரிகமாகக் கருதப்படுகின்றது.

6) படுக்கை மெத்தையில் தொப்பியை வைப்பது அர்ஜென்டினாவில் அநாகரிகமாகக் கருதப்படுகின்ற்து.

7) ஜப்பான் நாட்டில் குனியாமல் வணக்கம் சொல்லுதல் அநாகரிகமாகக் கருதப்படுகின்றது.

8) சிவப்பு மையில் பெயர் எழுதுவதை கொரியாக்காரர்கள் அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.

9)அறிமுகமாகாத பெண்களுக்கு உதவி செய்தலை பிலிப்பைன்சில் அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.ஏனெனில் அது நம் ஆசையை வெளிப்படுத்துவதாக அங்கே எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

10)தாய்லாந்தில் தலையில் கைவைத்து வாழ்த்துவதை அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.

Friday, June 26, 2009

உலக பிரபலங்கள் சிலரினை பற்றிய சில சுவையான தகவல்கள்.

விஞ்ஞானிகள், மாவீரர்கள்,அறிஞர்கள் ஆகியோரில் சிலரினை பற்றிய சில அரிய சுவையான தகவல்கள்.

1)தோமஸ் அல்வா எடிசன் பள்ளிக்கு சென்றது மூன்றே மாதங்கள் தான்.

2)தோமஸ் அல்வா எடிசனுக்கு இருட்டு என்றால் பயமாம்.

3) அறிஞர்கள் சோக்ரடிசும்,ஹோமரும் எழுதப்,படிக்கத் தெரியாதவர்கள்.

4) மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகள் என்றால் பயமாம்.

5) மாவீரன் அலெக்ஸ்சாண்டர் காக்கை வலிப்பு நோய் உள்ளவராக இருந்தவராம்.

6)அல்பேர்ட் ஐன்ஸ்டீன் தனது ஒன்பது வயது வரையும் தங்குதடையின்றி பேசவல்லவராக இருக்கவில்லையாம், இதனால் அவரை பெற்றோர் மூளை வளர்ச்சி குன்றியவராக கருதினார்கள்.

7) 1952 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு ஐன்ஸ்டீன்க்கு ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்தது, ஆனால் அதனை ஐன்ஸ்டீன் நிராகரித்துவிட்டார்.

8) வோல்ட் டிஸ்னிக்கு(Walt Disney)எலிகளை கண்டால் பயமாம்.

Wednesday, June 24, 2009

சில அரிய சுவையான தகவல்கள்

உங்கள் முன் சில அரிய சுவையான தகவல்களை பகிர்கின்றேன் .

1. திருப்பதியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் "புளியோதரை"தான் பிரசாதம்,லட்டு கிடையாது.

2.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.

3. இந்தியாவில் தமிழில் தான் "பைபிள்" முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.

4.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.

5. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும்.

6. கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.

7.பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.

8. முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.

9.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.

10. அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது.

Saturday, June 20, 2009

இணைய ஒஸ்கார் விருதுகள் (Oscars of the Internet)
கலை,இலக்கியம்,சினிமா என விரியும் அத்தனை துறைகளிலும் உருவாக்கப்படும் படைப்புக்கள், சேவைகள் என்பவற்றுக்கு வருடாந்தம் வெவ்வேறு நிறுவனங்களால் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.ஆனாலும்,மிக உன்னதமான விருதுகளாக ஒரு சில விருதுகளே கருதப்படுகின்றன இணையப்பரப்பில் இவ்வாறு வழங்கப்படும் விருதுகளில் மிக உன்னதமான விருதாகக் கருதப்படுவது Webby Awards என்பதாகும் .இது இணையத்தின் ஒஸ்கார் விருதுகள் என்றும் அழைக்கப்படுவதுண்டு .

வழமைபோலவே சர்வதேச தரத்தில் ஊடாடு நிலை உச்சளவில் கொண்ட மிகவும் உயர்தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இணையத்தளங்களுக்கு இவ்வருடமும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன .

Webby Person of the Year எனும் விருதினை Jimmy Fallon பெற்றுக்கொண்டார்.மேலும் இவரைப்பற்றி அறிய http://www.latenightwithjimmyfallon.com/ செல்லவும்அதே போன்று Webby Lifetime Achievement விருதை Sir Tim Berners-Lee பெற்றுக்கொண்டார். இணைய தொழில்நுட்ப மற்றும் தொடர்பாடல்களுக்கு என்னற்ற பங்களிப்பை வழங்கியதற்கான அங்கீகாரமாக இவ்விருது வழங்கப்பட்டது .WWW இனை கண்டுபிடித்தவர்களில் ஒருவராக இவர் பெருமளவில் அறியப்படுகின்றார் . இவர் Open-source Web முன்னோடியும் வார்.இவரைப்பற்றி அறிய www.w3.org/people/Berners-Lee செல்லவும்550 உறுப்பினர்களையுடைய The International Academy of Digital Arts and Sciencesகுழுமத்தினாலேயே வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .இக்குழுவில் உலகின் முன்னணி கலைஞர்கள் பலரும் இடம்பெறுகின்றனர்.

70 பிரிவுகளில் தெரிவுசெய்யப்பட்ட வெற்றியாளர்களுக்கு New York நகரில் ஜூன் 8ம் திகதி நடைபெற்ற 13 வது Webby Awards வைபவத்தில் விருதுகள் வழங்கப்பட்டன .

இணையம் ,தனிநபர் வாழ்க்கை என்ற இரண்டு விடயங்களையும் இரண்டற கலக்கும்முயற்சி கலையார்வலர்களும் சிந்தனையாளர்களும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவான உண்மையாகும் இவ்வாறான முயற்சிகளே மக்களாலும் பெரிதளவில் விரும்பப்படுகின்றன .


Tuesday, June 16, 2009

சில சுவாரஸ்சியமான தகவல்கள்

உங்களை நீங்களே பரிசோதித்து பார்க்க சில கேள்விகளை உங்கள் முன் பகிர்கின்றேன் . கண்டுபிடியுங்கள் பார்ப்போம், சவால்களை சமாளிப்பீர்களா நண்பர்களே ?

1.அமெரிக்க ஜனாதிபதிகளில் திருமணம் முடிக்காமல் பிரமச்சாரியாக வாழ்ந்த ஒரேஒருவர் யார் ? James Buchanon- 15வது அமெரிக்க ஜனாதிபதி

2. அமெரிக்க ஜனாதிபதிகளில் Pulitzer விருதினை பெற்ற ஒரேஒருவர் ? John F. Kennedy (Profiles in Courage)

3.நான்கு முழங்கால்களை கொண்ட ஒரேஒரு பாலூட்டி இனம் ? யானை

4.இரண்டு வெவ்வேறான பிரிவுகளில் நோபல் பரிசினை பெற்ற ஒரேஒருவர்? Linus Pauling (இரசாயனம்-1954 & சமாதானம்-1962 (USA )

5. அமெரிக்க ஜனாதிபதிகளில் காப்புரிமை பெற்ற ஒரேஒருவர் ? ஆபிரகாம் லிங்கன் ( A System of Buoying Vessels Over Shoals)

6. ஐரோப்பாவில் அதிக மலைகளை கொண்ட நாடு ? சுவிற்சர்லாந்து

7. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் டெஸ்ட் விளையாடிய முதலாவது இந்து மதத்தை சேர்ந்த யார்? Anil Dalpat Sonavaria

8.டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் சதம் பெற்ற பெருமைக்குரியவர் யார் ?Charles Bannerman(அவுஸ்ரேலியா)

9.இதுவரை எத்தனை மனிதர்கள் நிலாவில் கால் பதித்துள்ளனர் ? 12

10.Sir Don Bradman இனை ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழக்க செய்த பெருமைக்குரிய ஒரேஒரு பந்து வீச்சாளர் ? லாலா அமர்நாத் (இந்தியா )


Monday, June 15, 2009

அரிய வகை டொல்பின் பற்றிய கண்டுபிடிப்பு

நியூயோர்க் நகரத்தினை தளமாகக் கொண்டியங்கும் வனவாழ் உயிரின பாதுகாப்பு அமைப்பினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், உலகில் மிக அரியவகையான டொல்பின்களை ஆயிரக்கணக்கில் பங்களாதேஷ் நாட்டினை அண்டிய கரைகளில் வாழ்வதைக் கண்டுபிடித்துள்ளனர் .

மேலும் வாசிக்க ...........................
கீழே சொடுக்கவும்
(நன்றி-வீரகேசரி வாரவெளியீடு 10.05.2009)


***

Wednesday, June 10, 2009

தங்க கார் வாங்குவோமா ?

தலைப்பை பார்த்த உடன் "தங்க மழை பெய்ய வேண்டும் தமிழில் குயில் பாட வேண்டும் ...... "என்ற பாடல் வரி உங்கள் மனதில் வரலாம் . ஆம் இப்பொழுது UAE நாட்டின் துபாய் நகரத்தில் Mercedes Benz கார் 9மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியில் தயார் நிலையில் உள்ளன. தங்க கார் வாங்க தயாரா ? அப்படியாயின் அது தொடர்பான படங்கள் பார்வைக்காக ......Monday, June 8, 2009

நகரங்களே புயல்களை அதிக தீவிரமாக்குகின்றன

வயல்வெளி காடு சார்ந்த கிராமப் புறங்களை காட்டிலும் கோடையில் ஏற்படும் இடி மின்னல்களை நகரங்கள் அதிக தீவிரமாக்குகின்றன என்று ஒரு புதிய ஆராய்ச்சி தெரிவிக்கின்றது. நகரச் சுற்று சூழல்கள் புயல்களின் தன்மையை மாற்றமடைய செய்கின்றன என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்கள் ஜுலை 2004ஆம் ஆண்டு பால்டிமோர் என்ற இடத்தை தாக்கிய புயலை ஆய்வு செய்து அந்த நகரத்தில் உயரமாக கட்டடங்கள் இருப்பதினால் 30 சதவீத மழை அதிகமாக பெய்தது என்று கூறினார்கள்.அத்தோடு அந்த புயல் ஏற்பட்ட சமயத்தில் ஒரு வருடத்தில் ஏற்படக்கூடிய மின்னல்கள் இரண்டு மணி நேரத்தில் உருவாகிறது.
ஒரு நகரம் புயலை எவ்வாறு தீவிரமடையச் செய்கின்றன என்பதற்கு மூன்று காரணங்களை காட்டியுள்ளார்கள்.
1. வெப்பம்.
நகரங்கள் வெப்பத்தை உற்பத்தி செய்கின்றன இது சாதாரணமாக உள்ள வெப்பத்தை விட இரண்டிலிருந்து 5 டிகிரி செல்சியஸ் அதிகமாகிறது. இந்த அதிக வெப்பம் புயல்களை தீவிரமடையச் செய்கின்றது.

2.வானளாவும் உயரமான கட்டடங்கள்;
வளி மண்டலத்தை ஊடுருவிச் செல்லும் உயரமான கட்டடங்கள் வளி மண்டலத்தில் காற்று மேலே செல்வதை தடைசெய்கின்றன. இதனால் அதிக மழை ஏற்படுகிறது.

3. புகை, பனி மண்டலம், பனிப்புகை
இவை நகரங்களில் அதிகமாக இருப்பதற்கு காரணம் தொழிற்சாலைகளும் வாகனங்களும் ஆகும். இவை உற்பத்தி செய்கின்ற புகையானது பனி மற்றும் பனிபுகை புயல்களை தீவிரமடைய செய்கின்றன. உலகெங்கும் வெப்பம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.இதனால் காற்றில் அதிக தண்ணீர் சேர்கிறது. ஆகவே நகரங்களில் புயல் மழையும் தீவிரமடைகின்றன.
நாகரிக வாழ்க்கை வசதிகளை நமக்கு தந்தாலும் அதனால் ஏற்படும் அழிவுகளை ஒருவரும் அறிந்து கொள்வதில்லை.


(நன்றி-வீரகேசரி வாரவெளியீடு 19.04.2009)

***

Saturday, June 6, 2009

படித்து பாருங்கள்
***

(நன்றி-வீரகேசரி வாரவெளியீடு 17.05.2009)

***

Friday, June 5, 2009

உலகில் உறைபனி உருகும் அபாயம்

ஆண்டொன்றுக்கு 44000சதுரகிலோமீட்டர் அளவில் ஆர்டிக் வடதுருவ உறைபனிபடலம் உருகி வருகின்றது. 2007 செப்டெம்பரில் வரலாறு காணாத அளவுக்கு இந்த உறைபனி படலம் சுருங்கியது .
தொடர்ச்சி கீழே தரப்பட்டுள்ளது ……..


(நன்றி-வீரகேசரி வாரவெளியீடு 03.05.2009)
***
Blog Widget by LinkWithin